Separate Center for Education Reforms
கல்வி சீர்திருத்தத்திற்கான தனி மத்திய நிலையம்
அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் கல்வி சீர்திருத்த நடவடிக்கைகளுக்காக கல்வி அமைச்சின் கீழ் தனி மத்திய நிலையம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இந்த மத்திய நிலையம் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளரின் கீழ் செயல்படும் அதேவேளை நிர்வாக மற்றும் பாடத்திட்ட சீர்திருத்தங்கள் தொடர்பான பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி முதல் நிர்வாக சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. இதன் கீழ் தற்போதுள்ள வலயக் கல்வி அலுவலகங்கள் 96, நூற்றி இருபது ஆக அதிகரிக்கப்படவுள்ளது.
அடுத்த ஆண்டுக்குள் பாடத்திட்ட சீர்திருத்தங்களை ஒழுங்குபடுத்தும் திட்டத்தை செயல்படுத்தவும் மத்திய நிலையம் திட்டமிட்டுள்ளது. இந்த சீர்திருத்தங்களின் கீழ், மொடியுல் முறை அறிமுகப்படுத்தப்பட்டு, பாடப்புத்தகங்களுக்கு பதிலாக, மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடத்திற்கும் ஏற்ற மொடியுல் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதுவரை இந்த சீர்திருத்த செயல்முறை கல்வி ராஜாங்க அமைச்சினால் செயல்படுத்தப்பட்டது. ராஜாங்க அமைச்சு ரத்து செய்யப்பட்டதால், ‘கல்வி சீர்திருத்த மையம்’ நிறுவப்பட்டுள்ளது.