கல்வியியல் கல்லூரி புதிய மாணவர் உள்ளெடுப்பு 3 ஆண்டுகளுக்கும் மேலாக தாமதம் குறித்து இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் கல்வி அமைச்சுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
2019 இல் க.பொ.த உயர் தரம் எழுதி கல்வியியல் கல்லூரிகளுக்கு காத்திருக்கும் மாணவர்களின் உள்ளீர்ப்பை விரைவாக செய்து முடிக்குமாறு கல்வி அமைச்சிடம் ஆசிரியர் சேவைகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்த்தின் தமிழாக்கம் வருமாறு
2019 க.பொ.த உயர் தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் கல்விக் கல்லூரிகளுக்கான மாணவர்களை சேர்ப்பு செய்வதில் 3 வருடங்களுக்கும் மேலாக தாமதம் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் அவதானம் செலுத்த விரும்புகிறது.
02. குறிப்பாக, கொரோனா வுக்கு முன்னரே, கல்வி அமைச்சு மற்றும் தேசிய கல்வி நிறுவகத்தின் நிர்வாக பலவீனங்கள் காரணமாக தேவையற்ற, தாமதங்களைச் சந்தித்திருந்த கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை உள்ளீர்த்தல், கோரானா சிகிட்சை மையங்களாக கல்லூரிகள் வழங்கப்பட்டதோடு மேலும் தீவிரமடைந்துள்ளது. இன்று அந்த மாணவர்களின் வாழ்வில் 3 ஆண்டுகளுக்கும் மேலான இளமை காலம் வீணாகி விட்டது. இருந்த போதிலும் தற்போது கணிசமான காலம் கடந்தும் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்ட மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டதாகக் கூட அறிவிக்கப்படாமையினால் மாணவர்கள் அழுத்தங்களுக:கு ஆளாகியுள்ளனர். இதனை நாம் அனுமதிக்கப்போவதில்லை.
03, அத்தோடு நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில், நாட்டின் கல்வி கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது. இதன் காரணமாகவும் கடந்த சில ஆண்டுகளில் ஏராளமான ஆசிரியர்கள் ஓய்வு பெற்றுள்ளமையினாலும் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறம் என பல பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை தீவிரம் பெற்றுள்ளது.
எனவே, மேற்படி விடங்களைக் கருத்திற்கொண்டு இதுவரையில் நிறைவடைந்த நேர்முகப் பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் எதிர்வரும் கல்வியாண்டுக்கான மாணவர்களை உள்ளீர்க்குமாறும், போதிய ஒதுக்கீட்டை கல்விக் கல்லூரிகளுக்கு வழங்க உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் பொறுப்புடன் கேட்டுக்கொள்கின்றது.