தேசிய கல்வியியல் கல்லூரிகளின் நடவடிக்கைகள் தொடர்பாக கல்வி அமைச்சு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
அனைத்து தேசிய கல்வி கல்லூரிகளின் கல்வி நடவடிக்கைகளை ஆகஸ்ட் 15, 2022 அன்று ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, பொது விடுமுறை நாட்களைத் தவிர, கல்வி நடவடிக்கைகளை தவணை அட்டவணையின்படி செயல்படுத்து உறுதி செய்யப்படும்.
பாடசாலை நாட்களைக் கருத்திற் கொண்டு, கற்பித்தல் செயல்முறைக்கு இடையூறு ஏற்படாத வகையில், கட்டுறுப் பயிலுநர் மாணவர்களின் மேற்பார்வை நடவடிக்கைகளைத் திட்டமிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து கல்விசாரா ஊழியர்களையும், கற்றல் மற்றும் கற்பித்தல் செயல்முறை மற்றும் பொது முகாமைத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்ள வாரத்தில் ஐந்து நாட்களும் அவர்களது கடமைகளைச் செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
தேசிய கல்வி டிப்ளோமா இறுதி எழுத்துப் பரீட்சை செப்டம்பர் 19 முதல் 29 வரை நடைபெறும் என்பதால், தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு வரும் 21 நாட்களுக்கு மேற்படாத கற்றல் விடுமுறை வழங்க வேண்டும்.
என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.