கடமை நிறைவேற்று / பதில் அதிபர்கள் தொடர்பான தகவல்களை கல்வி அமைச்சு கோருகிறது
2021.07.01 முதல் 2023.06.30 வரை மாகாண பாடசாலைகளில் நிலவும் அதிபர் தர வெற்றிடங்களின் எண்ணிக்கையை தரம் 1, 2, 3 என வகைப்படுத்தி, வலயங்கள் அடிப்படையில் தொகுத்து அனுப்பு மாறு கல்வி அமைச்சு வேண்டியுள்ளது.
அத்தோடு, அதிபர் பதவி வெற்றிடம் காணப்படும் பாடசாலைகளில் இதற்போது கடமை நிறைவேற்று அதிபராக செயற்படும் ஆசிரியர் சேவையைச் சேர்ந்த அதிகாரிகளின் எண்ணிக்கையையும் வலயங்கள் அடிப்படையில் அனுப்புமாறு கல்வி அமைச்சு வேண்டியுள்ளது.
அத்தோடு, 2023.06.30 ஆம் திகதி வரை மாகாணப் பாடசாலைகளில் அதிபர் பதவிகளில் பதில் கடமை மேற்கொள்ளும் இலங்கை ஆசிரியர் சேவையைச் சேர்ந்தவர்களது தகவல்களை விபரமாக எதிர்வரும் 2023.07.04 ஆம் திகதிக்கு முன்னர் கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைக்குமாறும் அமைச்சு கேட்டுள்ளது.
கலாநிதி ஐ.எம்.கே.பீ. இலங்கசிங்க, கல்விச் சேவைகள் – மேலதிக செயலாளர் அனைத்து வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.