பண்டாரவளை, பூனாகலையில் பாடசாலைக்குள் வைத்து ஆசிரியரொருவர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எஸ்.பிரதீப் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஆசிியர் சேவைகள் சங்கத்தி்ன் செயலாளர் மகிந்த ஜயசிங்க தலைமையிலான குழுவினர் வட பகுதியில் மேற்கொண்ட விஜயத்தின் ஒரு கட்டமாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு எஸ்.பிரதீப் கருத்துத் தெரிவித்தார்.
வடமாகாணத்தின் பாடசாலைகளில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக குழு கண்டறிந்ததாகவும் இப்பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு எட்டப்படவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
බණ්ඩාරවෙල, පූනකල ප්රදේශයේ පාසල තුළදී ගුරුවරයෙකුට පහරදීමේ සිද්ධියට සම්බන්ධ පුද්ගලයින් අත්අඩංගුවට ගත යුතු බව ශ්රී ලංකා ගුරු සේවා සංගමයේ ජාතික සංවිධායක එස්.ප්රදීප් මහතා පැවසීය.
ශ්රී ලංකා ගුරු සේවා සංගමයේ ලේකම් මහින්ද ජයසිංහ මහතා ප්රමුඛ එස්.ප්රදීප් ප්රමුඛ කණ්ඩායම උතුරු කලාපයේ සංචාරයක කොටසක් ලෙස මාධ්ය හමුවකට එක්වෙමින් මෙම අදහස් පළ කළේය.
උතුරු ප්රදේශයේ පාසල්වල පවතින විවිධ ගැටලු පිළිබඳව කමිටුව විසින් සොයා ගෙන ඇති බවත්, එම ගැටලු කඩිනමින් විසඳිය යුතු බවත් ඔහු සඳහන් කළේය.
இதே நேரம் ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடாத்தி அதன் அறிக்கையை ஒரு வாரத்துக்குள் சமர்ப்பிக்குமாறு, கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார், மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு அவசரக் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
இக்கடிதத்தின் பிரதிகள், ஜனாதிபதி, பிரதமர், கல்வி அமைச்சர், ஊவா மாகாண ஆளுநர், கல்வி அமைச்சின் செயலாளர், ஊவா மாகாண கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
மேலும் இச்சம்பவம் குறித்து சமூக ஊடகங்கள் மற்றும் ஏனைய ஊடகங்களில் தலைப்புச் செய்திளும் வருகின்றன. எனவே இதற்கான முடிவை விரைவில் நாம் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.