அரசாங்க அலுவலகங்களுக்கு வசதியான ஆடைகளை அணிந்து பணிக்கு சமூகமளிக்கும் வகையில் தமது அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை பாடசாலை ஆசிரியர்களுக்கு பொருந்தாது என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், இப்பாடசாலையை அரச அலுவலகமாக கருத முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, அரச அலுவலகங்களுக்குச் சேவையாற்றும் ஊழியர்களுக்குப் பொருந்தும் வகையில் குறித்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும், ஏனைய சேவைகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு இதனைப் பிரயோகிக்க முடியாது எனவும், இவ்வாறு பிரயோகிப்பது நெறிமுறைகளுக்கு எதிரானது எனவும் செயலாளர் குறிப்பிட்டார்.
பாடசாலை ஆசிரியர்களின் ஆடை தொடர்பான தீர்மானம் கல்வி அமைச்சினால் எடுக்கப்பட வேண்டுமென பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த சுற்றறிக்கை ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என நேற்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
රජයේ කාර්යාල සඳහා සේවයට වාර්තා කිරීමේදී පහසු ඇඳුමකින් සේවයට වාර්තාකිරීමට ඉඩ ලබාදෙමින් සිය අමාත්යාංශය නිකුත් කළ චක්රලේඛය පාසල් ගුරුවරුන්ට අදාළ නොවන බව රාජ්ය පරිපාලන අමාත්යාංශ ලේකම් ප්රියන්ත මායාදුන්නේපවසනවා.
වැඩිදුරටත් අදහස් දක්වමින් ඔහු සඳහන් කළේ පාසැල රජ්යේ කාර්යාලයක් ලෙස හඳුන්වාදිය නොහැකි බවයි.
ඒ අනුව අදාළ චක්රලේඛය නිකුත් කර ඇත්තේ රජයේ කාර්යාල සඳහා වාර්තාකරන සේවකයින්ට අදාළ වන ලෙස බවත් වෙනත් සේවාවන් වල නිරත පිරිස්වලට එය අදාළ කරගත නොහැකි බවත් එසේ අදාළ කර ගැනීම ආචාර ධර්මවලට පටහැනි බවයි ලේකම්වරයා සඳහන් කළේ.
පාසල් ගුරුවන්ගේ ඇදුම සම්බන්ධයෙන් තීරණය කළ යුත්තේ අධ්යාපන අමාත්යංශය බවයි රාජ්ය පරිපාලන අමාත්යංශ ලේකම් ප්රියන්ත මායාදුන්නේ වැඩිදුරටත් සඳහන් කළේ.
ඊයේ (21) පැවති මාධ්ය හමුවකට එක්වෙමින් ලංකා ගුරු සංගමයේ ප්රධාන ලේකම් ජෝසප් ස්ටාලින් සඳහන් කළේ, අදාළ චක්රලේඛය ගුරුවරුන්ටද අදාළ බවයි.