புடவை அல்லது ஒசரிக்கு பதிலாக வேறு சில வசதியான ஆடைகளை ஆசிரியைகள் அணிந்து வர அனுமதி வழங்க என்ற கோரிக்கைக்கு மகா சங்கத்தினர் மற்றும் பழைய மாணவர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆசிரியர்களுக்கு புடவைக்கு பதிலாக வேறு ஆடைகளை பரிந்துரைக்க வேண்டாம் எனவும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவிடம் மகாசங்கத்தினரும் அறிவித்துள்ளனர்.
ஆடையை மாற்றும் எண்ணம் இல்லை என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு புடவைக்கு பதிலாக வேறு வசதியான ஆடையை அறிமுகப்படுத்துமாறு கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் செனவிரத்னவிடம் இலங்கை ஆசிரியர் சங்கம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்திருந்தது.
போக்குவரத்து பிரச்சனைகள் காரணமாக அதிகளவான பெண் ஆசிரியர்கள் மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்கு வருவதாகவும் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக புடவைகளுக்கு கணிசமான செலவுகளை செய்ய வேண்டியுள்ளதாகவும் சங்கம் குறிப்பிட்டிருந்தது. மோட்டார் சைக்கிள்களில் பயணிக்கும் போது புடவைக்கு பதிலாக மற்ற வசதியான ஆடைகள் பொருத்தமானவை எனவும் சங்கம் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
https://sinhala.teachmore.lk/?p=875