இக்கல்வியாண்டின் மூன்றாம் தவணை இன்று ஆரம்பமாகின்றது. இது எதிர்வரும் மார்ச் 24 ஆம் திகதி வரைத் தொடரும் என கல்விவ அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கோவிட் காரணமாக பாடசாலைகளை மூடவேண்டி ஏற்பட்டது. இதன் காரணமாக டிசம்பர் மாதம் முடிவடைய வேண்டிய தவணை அடுத்த வருடம் மார்ச் வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும் அடுத்த வருடம் பாடசாலைகளின் விடுமுறையைக் குறைத்து முடியுமானவரை போதுமான 210 நாட்களை நடாத்தி குறித்த வருடத்திலேயே தவணையை நிறைவு செய்ய முயற்சிப்பதாகத் தெரிவித்த கல்வி அமைச்சர், அதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
ஏனைய திணைக்களங்கள் மற்றும் நாடுகளில் பின்பற்றப்படுவது போன்று, மேலதிக நேரம் பாடசாலைகளை நடாத்தி இழந்த காலத்தை நிவர்த்தி செய்ய பெற்றார், ஆசிரியர்கள், அதிபர்கள் ஒத்துழைக்க வேண்டும் என கல்வி அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
இதன் மூலம் அடுத்த டிசம்பர் மாதத்திற்குள் பாடத்திட்டத்தை முழுமையாக முடிக்க முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
තුන්වන වාරය අද සිට – පාසල් පැවැත්වෙන කාලය දීර්ඝ කිරීමට අවධානය
මෙම වසරේ 03 වන පාසල් වාරය අදින් ආරම්භ වනවා. ඒ අනුව අදින් ආරම්භ වන 03 වන පාසල් වාරය එළඹෙන මාර්තු මස 24 වනදායින් අවසන් කෙරෙන බවයි අධ්යාපන අමාත්ය සුසිල් ප්රේමජයන්ත සඳහන් කළේ.
කොවිඩ් වසංගතය හේතුවෙන් පාසල් වාරය ආරම්භ වීම අවස්ථා කිහිපයකදී ප්රමාද වුණා. ඒ හේතුවෙන් මෙවර ද දෙසැම්බර් මාසයේදී අවසන්වීමට නියමිතව තිබූ 03 වන පාසල් වාරය මාර්තු මාසයේදී අවසන් කෙරෙනවා. ඒ සම්බන්ධයෙන් වැඩිදුරටත් කරුණු දැක්වූ අධ්යාපන අමාත්ය සුසිල් ප්රේමජයන්ත.
පාසල් පැවැත්වෙන කාලය දීර්ඝ කිරීම සඳහා වෘත්තීය සමිති නායකයින් ඇතුළු සියලුදෙනා ඊට සහය දැක්විය යුතු බව ද අධ්යාපන අමාත්ය සුසිල් ප්රේමජයන්ත වැඩිදුරටත් පෙන්වා දුන්නේ.