பதுளை மாவட்டத்தின் பசறை, லுனுகலை, மடுல்சீமை, நமுனுகுல உட்பட பல பகுதிகளில் நேற்று (டிச. 7) பிற்பகல் பொழுதிலிருந்து கடும் காற்று வீசியதன் காரணமாக மக்கள் குடியிருப்புகள், பாடசாலைகள், பொது கட்டடங்கள் என பலவற்றுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் பாரிய மரங்கள் வீதிகளிலும் வீடுகளிலும் சரிந்து விழுந்துள்ளன.
இந்நிலையில் காற்று தொடர்ந்து வீசுவதால் சேதம் அதிகரிக்கலாமென அஞ்சப்படுகிறது. லுனுகலை பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஹொப்டன் உள்ளிட்ட பல பகுதிகளில் தோட்டத் தொழிலாளர் குடியிருப்புகள், பாடசாலைகள் என்பன பகுதியளவிலும் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.
இப்பகுதியில் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக நேரடி கள ஆய்வில் ஈடுபட்டுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஈ.எம்.எல்.உதயகுமார தெரிவிக்கிறார்.
இதேவேளை பசறை கல்வி வலயத்தில் அனர்த்த அபாயமுள்ள பாடசாலைகளுக்கு இன்று வியாழக்கிழமை (டிச. 8) முற்பகல் 11 மணிக்கு விடுமுறை வழங்கி பாடசாலை மாணவர்களை பாதுகாப்பான முறையில் பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு ஊவா மாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவி செயலாளர் டபிள்யூ. ரந்தெனிய, பசறை வலயக் கல்வி காரியாலயத்தின் பணிப்பாளருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
බදුල්ල දිස්ත්රික්කයේ පස්සර, ලුණුගල, මඩුල්සීම, නමුණුකුල ඇතුළු ප්රදේශ රැසකට ඊයේ (දෙසැ. 7) පස්වරුවේ හමා ගිය තද සුළඟ හේතුවෙන් නිවාස, පාසල් සහ පොදු ගොඩනැගිලිවලට දැඩි හානි සිදුව තිබේ. එමෙන්ම මාර්ගවලට සහ නිවාසවලට දැවැන්ත ගස් කඩා වැටී තිබෙනවා.
කෙසේ වෙතත්, සුළඟ තවදුරටත් හමා යාම නිසා හානිය තවත් ඉහළ යා හැකි බවටයි බිය පළවන්නේ. ලුණුගල ප්රාදේශීය ලේකම් කොට්ඨාශයට අයත් හොප්ටන් ඇතුළු ප්රදේශ රැසක වතු කම්කරු නිවාස හා පාසල්වලට අර්ධ හා පූර්ණ හානි සිදුව තිබේ.
බදුල්ල දිස්ත්රික් ආපදා කළමනාකරණ මධ්යස්ථානයේ සහකාර අධ්යක්ෂ ඊ.එම්.එල් උදයකුමාර මහතා පැවසුවේ, ප්රදේශයේ සිදු වූ හානිය පිළිබඳව සමීක්ෂණයක් සිදුකරන බවයි.
මේ අතර පස්සර අධ්යාපන කලාපයේ ආපදා අවදානම් සහිත පාසල්වලට අද බ්රහස්පතින්දා (දෙසැ. 8) පෙරවරු 11ට නිවාඩුවක් ලබාදී පාසල් සිසුන් මවුපියන්ට භාරදෙන ලෙස ඌව පළාත් අධ්යාපන අමාත්යාංශයේ ජ්යෙෂ්ඨ සහකාර ලේකම් ඩබ්ලිව්. ආරක්ෂිත ක්රමයක්. රන්තෙණිය පස්සර කලාප අධ්යාපන අධ්යක්ෂවරයාට ලිපියක් මගින් දන්වා ඇත.