எதிர்வரும் 14 ஆம் திகதி பாராளுன்றில் முன்வைக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படுவதற்கான முன்மொழிவு இல்லை எனில் 15 ஆம் திகதி முதல் அரச ஊழியர்கள் அனைவரும் தொழில் சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளனர். அரச ஊழியர்களுக்கு 2016 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படவில்லை என்றும் அந்த வருடத்தில் 10000 ரூபா சமபள அதிகரிப்பு வழங்கப்பட்டதாகவும் ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நிலையத்தின் செயலாளர் தம்மிக முணிசிங்க தெரிவித்துள்ளார்.
எனினும் கடந்த முதலாம் திகதி நிதி அமைச்சின் செயலாளரோடு அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் போது அரச ஊழியர்களின் சம்பள மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பாக கவனத்தில் கொள்ளப்படும் என்று செயலாளர் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
https://sinhala.teachmore.lk/?p=884