அரச மொழிக் கொள்கை
புதிய சுற்றறிக்கை தொடர்பான அவதானம்
(சுற்றறிக்கையின் பிடிஎப் வடிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது)
- 2014.01.21 ஆம் திகதிய 01/2014 ஆம் இலக்க சுற்றறிக்கை மூலம் அரச ஊழியர்களுக்கான அரச மொழிக் கொள்கை அமுலானது. அது பல சந்தர்ப்பங்களில் திருத்தப்பட்டது. மொழித் தேர்ச்சிக்கான கால அவகாசம் வழங்கப்பட்டது.
- 2020.10.06 இன் பின்னர் புதிய சுற்றறிக்கையின் ஏற்பாடுகள் அமுலாகும் என 2020.10.05 ஆம் திகதி கூடிய அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
- சித்தியடைய வேண்டிய பரீட்சைக்கு பதிலாக குறிப்பிட்ட மணித்தியாலயங்களைக் கொண்ட பாடநெறி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பதவி நிலைகளைப் பொறுத்து பாடநெறியின் காலம் மாறுபடும்
- ஆரம்ப நிலை – வகுதி 3 – 100 மணித்தியாலங்களை பூரணப்படுத்த வேண்டும்.
- இரண்டாம் நிலை – வகுதி 2 – 150 மணித்தியாலங்களைப் பூரணப்படுத்த வேண்டும்
- மூன்றாம் நிலை – வகுதி 3 – 200 மணித்தியாலங்களைப் பூரணப்படுத்த வேண்டும்
- இதன்படி ஆசிரியர்கள் அனைவரும் 150 மணித்தியாலங்கள் கொண்ட பாடநெறியை பூரணப்படுத்த வேண்டும்.
- அதிபர் சேவையைச் சேர்ந்தோர் அனைவரும் 200 மணித்தியாலங்களை கொண்ட பாடநெறியைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
- பாடநெறி எழுத்து மற்றும் வாய்மொழி பயிற்சியை உள்ளக்கி இருக்கும். மதிப்பீடும் நடைபெறும்.
- இந்த பாடநெறிக்கு ஆகக் குறைந்தது 80 வீத வரவைக் கொண்டிருக்க வேண்டும்.
- தற்போது சேவை ஆரம்ப பயிற்சியில் உள்ளவர்கள் அவர்களுக்குரிய பாடநெறியை தொடர உயர் அதிகாரிகள் சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.
- 2007.07.01 நியமனம் பெற்றவர்கள் எதிர்வரும் 3 வருடங்களுக்குள் இந்த பாடநெறியை பூர்த்தி செய்ய வேண்டும்.
- குறிப்பிட்ட 3 வருடங்களுக்குள் பாடநெறியைப் பூர்த்தி செய்யாத போது, சம்பள ஏற்றம் நிறுத்தி வைக்கப்படும்.
- நியமனத்திற்கு முன்னர் பெற்றுள்ள மொழித் தேர்ச்சிகள் இந்த பாடநெறியுடன் தொடர்பு பட்டதாக கருதப்படமாட்டாது
- ஆங்கில மூலமான நியமனம் பெற்றவர்கள் நியமனத்திற்கு முன்னரோ அல்லது நியமனம் பெற்று 3 வருடங்களுக்குள்ளோ தனது தாய் மொழியில் க.பொ.த சாதாரண தரத்தில் மொழிப் பாடத்திலோ அல்லது இலக்கிய பாடத்திலோ தேர்ச்சி பெற்றிருந்தால். தாய் மொழித் தேர்ச்சி நிபந்தனையில் இருந்து விடுவிக்கப்படுவர். ஆனால் ஏனைய அரச கரும மொழித் தேர்ச்சிக்காக இந்த பாடநெறியை தொடர்வது கட்டாயம்
- 2014/01 சுற்றறிக்கையின் படி மொழித் தேர்ச்சி பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் இப்பாடநெறியைத் தொடரத் தேவையில்லை
- 2007.07.01 இன் பின்னர் நியமனம் பெற்று இதுவரை மொழித் தேர்ச்சியை மற்றும் ஏனைய அரச கரும மொழித் தேர்ச்சியை பூரணப்படுத்தாதவர்கள் குறிப்பிட்ட ஆங்கில மற்றும், ஏனைய மொழித் தேர்ச்சியை பூரணப்படுத்த வேண்டும்.
- இந்த பாடநெறிக்கான விடுமுறையை துறைத் தலைவர் வழங்கு வேண்டும். விடுமுறை வழங்கலின் போது மொழித் தேர்ச்சியை பூரணப்படுத்தப்பட வேண்டிய ஒழுங்கில் முன்னுரிமை வழங்க வேண்டும்.
- பாடநெறியின் பாடத்திட்டத்தை அரச கரும மொழிகள் திணைக்களம் தயாரிக்கும். அரச கரும மொழிகள் திணைக்களம் மற்றும் தேசிய மொழிகள் கற்கை மற்றும் பயிற்சி நிறுவனம் பாடநெறிகளை நடாத்தும்.
- ஏனைய அரச கரும மொழித் தேர்ச்சியை ஊக்குவிப்பதற்காக தேசிய மொழித் தகைமை மதிப்பீட்டுப் பரீட்சை அறிமுகப்படுத்தப்படுகிறது.
- தேசிய மொழித் தகைமையில் புள்ளிகளைப் பெறுபவர்களுக்கு பதவி தரம் என்பவற்றைக் கருத்திற்கொள்ளாது ஒரு முறை வழங்கும் ஊக்குவிப்புத் தொகை வழங்கப்படும்.
- 80-100 புள்ளிகள் பெற்றால் 25000 ரூபாய்
- 65-79 புள்ளிகள் பெற்றால் 20000 ரூபாய்
- 50-64 புள்ளிகள் பெற்றால் 15000 ரூபாய்
- மேலதிகமாக ஓய்வூதியமற்ற ஒரு சம்பள ஏற்றமும் கிடைக்கும்
- 5 வருடங்களுக்கு ஒரு முறை இப்பரீட்சையில் 50 புள்ளிகளுக்கு மேல் பெறுவதன் மூலம் ஓய்வூதியமற்ற சம்பள ஏற்றம் தொடர்ச்சியாக பெற்றுக் கொள்ள முடியும்.
- அடுத்தடுத்த பரீட்சைகளில் கூடுதலான புள்ளிகள் பெற்றால் இரண்டுக்கும் இடையிலான இடைவெளி தொகை பூர்த்தி செய்யப்படுமு உயர்ந்த பட்சம் சேவைக்காலத்தினுள் 25000 பெற்றுக் கொள்ள முடியும்.
- அடுத்தடுத்த பரீட்சைகளில் முன்னரை விட குறைந்த புள்ளிகளைப் பெற்றிருப்பின் முன்னர் செலுத்தப்பட்ட தொகை மீள அறவிடப்படமாட்டாது.
- 2020.10. 16 க்கு முன்னர் அரச கரும மொழிகள் திணைக்களம் நடாத்திய பாடநெறியைத் தொடர்ந்து சித்தியைடந்தவர்கள் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அங்கீகரித்த பல்கலைக்கழகம் அல்லது நிறுவகத்தின் கீழ் ஏனைய மொழி பாடநெறியைத் தொடர்ந்து சிந்தியடைந்தவர்கள் சான்றிதழைச் சமர்ப்பிப்பதன் மூலம் தாம் தொடர் வேண்டிய பாடநெறியில் எவ்வளவு விதிவிலக்கு பெறலாம் என்பதை வினவ முடியும்
- ஆர்வம் காட்டும் அலுவலர்கள் 5 வருடத்திற்கு ஒரு முறை தமது மொழிப் பரீட்சயத்தை புதுப்பித்துக்கொள்வதற்கு வாரத்திற்கு ஒரு நாளுக்கு மேற்படாதவாறு கடமை விடுமுறையை நிறுவனத் தலைவர் வழங்க வேண்டும்.
- பழைய சுற்றுநிருபத்தின் படி, தற்போது எழுத்து பரீட்சையை மாத்திரம் பூர்த்தி செய்துள்ளவர்களுக்கு வாய்மொழி பரீட்சையை பூர்த்தி செய்ய ஒரு முறை சந்தர்ப்பம் வழங்கப்படும். இதில் சித்தியடைந்தால், அரச மொழித் தேர்ச்சியை பூர்த்தி செய்தவராக கருதப்படுவார்.
- அரச கரும மொழித் தேர்ச்சி ஊக்குவிப்பு கொடுப்பனவு பெறுபவர்கள் பாதிக்கப்படாதவகையில் இந்த சுற்றறிக்கை அமுல்படுத்தப்படும்
- இணைப்பு மொழி _ ஆங்கில மொழித் தேர்ச்சி கொடுப்பனவு பழைய சுற்றறிக்கை அடிப்படையில் தொடரும்
- சகல ஆட்சேர்ப்பு மற்றும் சேவை பிரமாணக் குறிப்புகளிலும் அரச கரும மொழித் தேர்ச்சி இந்த சுற்றறிக்கையின் படி திருத்தப்படுகிறது.