தற்காலத்தில் பிள்ளைகளிடத்தில் கல்விச் சமூகமயமாக்கலை ஏற்படுத்துவதில் நவீன ஊடகங்களின் பங்களிப்பு
தற்காலச் சமூகங்களின் சமூகக் கட்டமைப்பானது E-society என அழைக்கப்படும் அளவிற்கு இணையத்துடனும் சமூக ஊடகங்களுடனும் பின்னிப் பிணைந்ததாக உள்ளது. ஏனெனில் இன்றைய நவீன தொழில்நுட்ப சூழலில் மக்களின் வாழ்க்கை முறைகள் அனைத்தும் சமூக ஊடகங்களைச் சார்ந்ததாகவே அமைந்துள்ளன. சமூக ஊடகங்கள் என்பது மக்கள் நிகழ்நிலை (online ) மூலம் ஒருவரோடு ஒருவர் இடைவினை கொள்வதற்குப் பயன்படுத்தும் ஊடகங்களாகும்.
விரைவான தகவல் பரிமாற்றத்திற்கு உதவுகின்றது. கற்றல்-கற்பித்தல் செயன் முறையில் தகவல் பரிமாற்றத்தின் அவசியமானது இன்றியமையாததாகும். அவ்வகையில் விரைவான தகவல் பரிமாற்றமானது விரைவான சமூகமயமாக்கலுக்கு இட்டுச் செல்வதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. Zoom class இன் மூலம் ஆசிரியரிடமிருந்து மாணவனுக்கு கற்பிக்கும் விடயம் தொடர்பாக மற்றும் ஏனைய பொதுவான அறிவு பற்றிய விடயங்களும் மிகவும் விரைவான முறையில் தகவல் பரிமாற்றமானது நடை பெறுகின்றது. இதன் மூலம் சமூகமயமாக்கல் தன்மையானது பிள்ளைகளிடத்தில் விரைவுபடுவதனை எம்மால் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
இன்றைய காலகட்டத்தில் நவீன ஊடகங்களின் மூலம் பிள்ளைகள் தமக்கு தேவையான எவ்வாறான விடயங்களையும் எந்நேரத்திலும் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பானது அதிகரித்துக் காணப்படுவதனை காணக்கூடியதாக உள்ளது. முன்னர் ஒரு விடயம் தொடர்பான தகவலினைப் பெற்றுக் கொள்வதற்கு பிள்ளை பத்திரிகைள், சஞ்சகைகள், இலக்கியங்கள் போன்றவற்றை தேடி எடுத்துப் பெற்றுக் கொள்ளும் தன்மையானது காணப்பட்டது. அவ்வாறான சந்தர்ப்பத்தில் நேரம் வீண்விரயமாக்கப்படும் தன்மையானது காணப்பட்டது. ஆனால் இப்போது எவ்வாறான தகவலாக இருந்தாலும் நவீன ஊடகங்களின் மூலம் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பானது அதிகரித்துள்ளமையானது விரைவான சமூகமயமாக்கல் தன்மையினை ஏற்படுத்துவதாக உள்ளது.
இன்றைய காலகட்டத்தில் அதிலும் Covid 19 தொற்றுக் காரணமாக மாணவர்கள் தமது கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகளை முழுமையாக நவீன ஊடகங்களின் மூலம் செயற்படுத்தப்படுவதனை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. Youtube, Zoom, whatapp , LMS போன்றவற்றினை மாணவர்கள் பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பமானது அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கப் பெறுவதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இதன் மூலம் விரைவான சமூகமயமாக்கல் தன்மையானது வளர்ச்சியடைவதனை எம்மால் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
மாணவர்கள் நேரில் கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்வதனை விட நவீன தொழில் நுட்பத்தின் மூலம் கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது பிள்ளைகளுக்கு அதிக கவன ஈர்ப்பு ஏற்படுகின்றது. அதிகமான முறையில் பிள்ளைகளின் கவனத்தினை ஈர்க்கும் வகையிலான செயற்பாடுகள் நவீன ஊடகங்களின் மூலம் உருவாக்கப்படுவதனை காணலாம். Video, வரைபு முறைகள் மற்றும் படங்களைக் காண்பித்துக் கற்பித்தல் போன்ற பல விடயங்களின் மூலம் மாணவர்கள் அதீக கவன ஈர்ப்புக் கொண்ட வகையில் கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர்.
இன்றைய நிலையில் சமூகம் தீவிரமாக வளர்ச்சி பெற நவீன ஊடகங்களின் பங்களிப்பானது இன்றியமையாததாகக் காணப்படுகின்றது. அவ்வகையில் சமூகத்தில் வாசிப்பு வீதமானது அதிகமாகின்ற போது சமூகமயமாக்கல் தன்மையும் அதிகரிப்பதனைக் காணக்கூடியதாக உள்ளது. நவீன தொழில் நுட்ப சாதனங்களின் ஊடாக மாணவர்கள் தமக்கு தேவையானவையினை விரைவான முறையில் வாசித்துக் கொள்கின்ற தன்மையானது அதிகரித்துள்ளமையினை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இதன் மூலம் பிள்ளைகள் பல விடயங்களை அறிந்து கொள்வதுடன் விரைவான சமூகமயமாக்கல் தன்மைக்கு வழிகோலுவதாக நவீன ஊடகங்கள் காணப்படுவதனை எம்மால் அவதானிக்கக் கூடியாக உள்ளது.
ஒரு விடயத்தினைத் தேடிப்போய்க் கற்பதற்கான வாய்ப்புக்கள் இன்றி இலகுவான முறையில் online மூலம் கற்றலுக்கான வாய்ப்புக்கள் அதிகமாக் காணப்படுகின்றது. வீட்டில் இருந்தவாறே கற்றல்- கற்பித்தல் செயன் முறையினை மேற்கொள்ளும் வகையில் கற்றலுக்கான வாய்ப்புக்கள் நவீன தொழில்நுட்ப சாதனங்களின் மூலம் வழங்கப்படுவதன் காரணத்தினால் விரைவான சமூகமயமாக்கல் தன்மைக்கு இட்டுச் செல்வதாக நவீன தொழில்நுட்பமானது காணப்படுகின்றது. Online மூலம் கருத்தரங்குகள் மற்றும் மேலும் பல பட்டப்படிப்பிற்கான வாய்ப்புக்களும் கிடைக்கப் பெறுவதன் மூலம் பிள்ளைகளை சமூகமயமாக்கல் தன்மைக்கு இட்டுச் செல்வதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
செலவு குறைந்த தன்மை காரணமாக நவீன தொழில் நுட்பத்தின் மூலம் கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்வதன் காரணத்தினால் இலகுவான முறையில் கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. Online மூலம் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்வதன் காரணத்தினால் கற்றலுக்காக பயன்படுத்தப்படும் உபகரணங்கள் வாங்குவதற்கான செலவுகள் மற்றும் ஏனைய புத்தகங்களை வாங்குவதற்கான செலவுகள் என்பன இல்லாது தேவையான புத்தகங்களை மற்றும் தேவையான விடயங்களை Smart phone களின் மூலம் பெற்று கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர்.
கல்வியின் அனைத்து அம்சங்களையும் பிள்ளை விளங்கிக் கொள்வதன் மூலமே சிறந்த சமூகமயமாக்கல் தன்மையினை ஏற்படுத்த முடியும். அவ்வகையில், நவீன தொழில்நுட்ப தொடர்பு சாதனங்களானது மாணவர்கள் மத்தியில் கல்வியின் அம்சங்களை உடனுக்குடன் அவர்களுக்கு விளங்கும் வகையில் மாணவர்களின் மத்தியில் நேர வீண்விரயம் அற்ற தன்மையுடன் எடுத்துச் செல்வதனை எம்மால் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
பிள்ளைகள் கற்றல்-கற்பித்தல் மற்றும் பொதுவான விடயங்களைப் பெற்றுக் கொள்வதற்காக தூர இடங்களுக்குச் சென்றுதான் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும் என்னும் தன்மையானது சில சந்தர்ப்பங்களில் ஏற்படுகின்றது. ஆனால் நவீன தொலைத் தொடர்பு சாதனங்களின் மூலம் வீட்டில் இருந்தவாறே தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கான தன்மையானது பிள்ளைகளை இலகுவான முறையில் சமூகமயப்படுத்துவதாக அமையப் பெறுகின்றது. தூர இடங்களில் நூலகம் இருக்குமாயின் நூலகத்திற்குச் சென்று தான் சில விடயங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டுமாயின், அவ்விடயத்தினைப் பெற்று அதுதொடர்பான அறிவினை ஏற்படுத்துவதில் காலதாமதமானது ஏற்படும். ஆனால் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் உடனுக்குடன் அத்தகவல்களைப் பெற்றுக் கொள்வதன் மூலம் பிள்ளை பல விடயங்களை அறிந்து சமூகமயமாக்கல் தன்மை ஏற்படுவதற்கு பங்களிப்புச் செய்வதாக அமையப் பெற்றுள்ளது. நூல் நிலையங்களில் உள்ள நூல்களை e-library மூலம் அறிந்து கொள்ளுதல். இவ்வாறான வசதிகள் சமூகமயமாக்கல் தன்மைக்கு இட்டுச் செல்வதாக அமையப் பெறுவதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
எனவே தற்காலத்தில் பிள்ளைகளிடத்தில் சமூகமயமாக்கலை விரைவுபடுத்துவதில் தொழில்நுட்ப அறிவு வளர்ச்சியடைதல், அரசியல் நிலமைகள் பற்றி அறிந்து கொள்ளுதல், உலக நிகழ்வுகள் பற்றி அறிந்து கொள்ளுதல், நோயற்றவாழ்க்கை தொடர்பான விழிப்புணர்வுக் கருத்துக்களைப் பெற்றுக் கொள்ள முடிதல், விரைவான தகவல் பரிமாற்றம், எந்தத் தகவலையும் பெறக்கூடிய தன்மையானது காணப்படுதல், கற்றல்-கற்பித்தல் தொடர்பான நவீன ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கான போதியளவு சந்தர்ப்பம் பிள்ளைகளுக்கு கிடைக்கப் பெறுகின்றமை, ஏனைய வரைபு முறைகள் மற்றும் படங்களைக் காண்பித்துக் கற்பித்தல், விரைவான வாசிப்புத் தன்மை பிள்ளைகளிடத்தில் வளருதல் தூர இடங்களில் பெற முடியாத விடயங்களையும் இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடிதல் போன்ற விடயங்களின் அடிப்படையில் நவீன ஊடகங்களின் பங்களிப்பானது முக்கியத்துவம் பெற்றுள்ளமையினை காணமுடிகின்றது.
உசாத்துணைகள்.
1. கருணாநிதி.மா, (2008), கல்விச் சமூகவியல், குமரன் புத்தக இல்லகம் கொழும்பு, (பக் -1-25).
2. சந்திரதிலக.கே.எல்: (1976), சமூகவியல் மூலக் கோட்பாடு, கல்வி வெளியீட்டுத் திணைக்களம், (பக்-11-19).
3. சண்முகலிங்கம்.என், (2008), சமூகவியல் கோட்பாட்டு மூலங்கள்- அமைப்பும் இயங்கியலும், கரிகரன் வெளியீடு யாழ்ப்பாணம், (பக்-45-69).
4. சந்திரசேகரன்.சோ, (1994), கல்வியியல் கட்டுரைகள், பூபாலசிங்கம் புத்தகசாலை, (பக்-40–46).
5. ஜெயவர்த்தன.கு, (1987), இலங்கையின் இன வர்க்க முறன்பாடுகள், குமரன் புத்தக இல்லம், (பக்கம் 30-35).
சிவசேகரம் ராதிகா,
நான்காம் வருட கல்வியியல் சிறப்புக் கற்கை மாணவி,
கல்வி மற்றும் பிள்ளை நலத்துறை,
கலை கலாசார பீடம்,
கிழக்குப் பல்கலைக்கழகம்.