இணையவழி விரிவுரைகள்? உண்மையான பிரச்சினை எங்கே? அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் விளக்குகிறது.
தமிழாக்கம் : teachmore.lk
கோவிட் 19 தொற்றுநோயால் பல்கலைக்கழகங்களும் பாடசாலைகளும் சுமார் இரண்டு மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளன. மூடிய பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழக அமைப்பினுள் ஒன்லைன் விரிவுரைகளை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளதோடு அவை ஓரளவிற்கு செயற்பாட்டிற்கு வந்துள்ளன. இந்த திட்டங்கள் தொடங்குவதற்கு முன்பு, பல்கலைக்கழகங்களின் மாணவர் சங்கம் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளுக்கு இது தொடர்பாக எழும் பிரச்சினைகள் குறித்து தெரியப்படுத்தி வந்தன.
இருப்பினும், சில பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலைகளில், கற்பித்தல் செயல்முறை ஒன்லைனில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த செயற்பாடுகள் தொடர்பாக சமூக ஊடகங்களில் விவாதம் நடந்து வருகின்றது.
ஸ்ரீ ஜெயவர்தனபுரா பல்கலைக்கழக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வின் பெறுபேறு கீழே தரப்பட்டுள்ளது. இந்த எல்.எம்.எஸ், மின்னஞ்சல், வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் மூலம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 5000 மாணவர்களைக் கொண்டுள்ள முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த 3545 மாணவர்கள் மட்டுமே பதிலளித்தனர்.
கணக்கெடுப்பின்படி, டெஸ்க்டாப் கணினி / லேப்டாப் கணினி அல்லது ஸ்மார்ட் போன்கள் 99% வீதமானவர்களிடம் காணப்படுகின்றது. ஆனால் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் / லேப்டாப் கம்ப்யூட்டரில் 68% வீதமானவர்கிளிடம் மட்டுமே காணப்படுகிறது. ஒன்லைன் முறையுடன் ஒரு முழுமையான கற்பித்தல் செயல்முறையை நடாத்தினால், விரிவுரையில் சேர மட்டுமல்லாமல், மேலதிக குறிப்புகளை சேமிக்கவும், விரிவுரையாளர் அனுப்பும் மேலதிகமானவற்றை சேமிக்கவும் மேலதிக வாசிப்புகளுக்கானவற்றை சேமிக்கவும் கணினி போன்ற ஏதாவது தேவைப்படும். இருப்பினும், தரவுகளின்படி, அத்தகைய வசதி குறிப்பிடத்தக்கமானவர்களுக்கு இல்லை. இதன் பொருள் ஒன்லைன் கற்பித்தல் ஒரு துணை கற்பித்தல் முறையாகப் பயன்படுத்தப்பட்டாலும் அதனை பிரதான ஒரு போதனையாக பயன்படுத்தும் போது குறிப்படத்தக்கமானவர்களுக்கு வெற்றிகரமானதாக அமையாது.
அடுத்த பிரதான பிரச்சினை உபகரணங்கள் இருந்தபோதிலும் இணைய வசதி பிரச்சினையாகும். இந்த கணக்கெடுப்பின்படி, 26% பேருக்கு மாத்திரமே சிறந்த கவரேஜ் உள்ளது. தொடர்ந்தும் இணைய சேவையைப் பெற முடியாத அல்லது கவரேஜ் பிரதேசத்தில் இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகமாகும்.
இதன் பொருள், தேவையான உபகரணங்கள் இருந்தாலும், இணைய பிரச்சினை காரணமாக நீங்கள் தொடர்ந்து விரிவுரைகளில் இணைந்திருக்க முடியாது.
மற்றொரு காரணி என்னவென்றால், 34% இணையத் தரவு மாதத்திற்கு 400 ரூபாய்க்கும் குறைவாகவே செலவிடப்படுகிறது. ரூபா 1600 க்கும் அதிகமான தொகையை 6 வீதமானவர்களே செலவிடுகின்றனர். இந்த தொற்றுநோய் நிலைமையால் பாதிக்கப்பட்ட அதிகமான மக்கள் உள்ளனர். அதாவது நாளாந்த வருமானத்தை இழந்தவர்கள்.
எனவே இது போன்ற இணைய சேவைகளின் விலை கூடுதல் சுமையாகும். ஏனெனில் விரிவுரையில் இணைந்து கொள்வது மட்டும் படிப்பாக இருக்காது. மேலதிக வாசிப்பு மற்றும் பயிற்சி செய்ய வேண்டும். ஆனால் வீடு என்பது அவ்வாறு மேலதிக வாசிப்புக்கான வசதிகொண்ட இடம் அல்ல. விரிவுரை தொடர்பான மேலதிகக் குறிப்புகளைப் பதிவிறக்குவதற்கும் மேலதிகத் தரவுகளைத் தேடுவதற்கும் டேடா செலவு ஏற்படுகிறது.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலை பீடத்தின் மாணவர்கள் நடத்திய கணக்கெடுப்பின் முடிவுகளைப் பார்க்கும்போது, கவரேஜ் பிரச்சினை காரணமாக பலர் தொடர்ந்து ஒன்லைன் கற்கையில் ஈடுபட முடியாதுள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதன்படி, 9% பேருக்கு மட்டுமே தடையின்றி இணைய வழங்கல் காணப்படுகிறது. 42% மானோர் ஓரளவு சிறந்த கவரேஜ்ஜைக் கொண்டுள்ளனர். ஆனால் 49% மானோருக்கு தொடர்ச்சியான இணைய தொடர்பு இல்லை.
அவ்வாறே 1349 மாணவர்களில், 376 பேர் மட்டுமே மடிக்கணினியைப் பயன்படுத்துகின்றனர். ஸ்மார்ட்போன் மட்டுமே வைத்திருக்கும் 1009 பேர் உள்ளனர். நீங்கள் ஒரு சொற்பொழிவைக் கேட்க விரும்பினால், அந்த மொபைல் உங்களிடம் இருக்கும். ஆனால் நீங்கள் கூடுதல் மற்றும் பணிகளைத் தேடும்போது?
கேள்விக்குட்படுத்த வேண்டிய மற்றொரு அம்சம் என்னவெனில், கடந்த காலங்களில் 80%. விரிவுரைகளில் கலந்துகொள்ளாதவர்களுக்கு பரீட்சை எழுத அனுமதிக்கப்படவில்லை. மகபொல கொடுப்பனவு நிறுத்தப்பட்டது. ஆனால் தற்போது. எந்தவொரு சொற்பொழிவிலும் பங்கேற்க முடியாத மாணவர்கள் இருக்கும்போது, அவர்கள் விரிவுரையை நடாத்துகிறார்கள். இதன் தர்க்க ரீதியான நியாயம் புலப்படவில்லை.
கற்பித்தல் கூடுதல் முறையாக ஆன்லைன் முறையைப் பயன்படுத்துவதில் பிரச்சினை இல்லை. இவ்வளவு குறைவான வசதிகள் இருக்கும் போது ஒன்லைன் கற்பித்தல் முக்கியமானதொன்றாக மாறியமையே பிரச்சினையாகும். குறைந்த பட்சம் தற்போது விரிவுரைகளில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு, ஒன்லைனில் கற்பிக்கப்பட்டவற்றை கற்பதற்கு வழிமுறை ஒன்று இல்லை என்பதாகும்.
இந்த ஆய்வுகளில் கூட கவனத்தில் கொள்ளப்படாத மற்றொரு முக்கியமான காரணி உள்ளது. அதாவது, வீடுகளில் அல்லது தங்குமிடங்களில் கற்றலுக்கு ஏற்ற சூழல் இல்லை என்பதாகும். அது நிச்சயமாக கவலைக்குரிய விஷயம். உதாரணமாக, தனிமைப்படுத்தப்பட்ட பண்டாரநாயக்க மாவத்தை மற்றும் வாழைத்தோட்ட பகுதியைக் குறிப்பிடலாம்.
இப்பகுதியில் கொரோனா வைரஸ் அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று 61 குடும்பங்களின் 230 பேர் 20 பேர்ச் பரப்பில் வாழ்வதாகும். இதுபோன்ற பகுதிகளிலும், அறைகளிலும் வசிக்கும் மக்கள் இந்த கல்விச் செயல்பாட்டில் ஈடுபடக்கூடிய சூழல் உள்ளதா? குடும்பப் பிரச்சினைகள் அல்லது பொருளாதாரப் பிரச்சினைகள் இதன் மீது தாக்கம் செலுத்தாதா?
மற்றொரு பாரதூரமான விடயம் என்னவெனில், கல்வி உளவியல் பற்றியதாகும். ஒன்லைன் முறை மூலம் கற்பிக்கும் போது, ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையே மிக நெருக்கமான உறவு ஏற்பட முடியாது. ஆனால் கல்வி உளவியலைப் பொறுத்தவரை, ஒரு நல்ல கற்பித்தல் செயல்முறைக்கு ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையே நெருங்கிய உறவு தேவைப்படுகிறது. ஆசிரியர்களுக்கான பயிற்சியின் போது இந்த விஷயங்களை ஆசிரியர்களுக்கு கற்பிக்கிறார்கள். எனவே குறிப்பாக, பாடசாலைகளில் கல்வி நடவடிக்கையை பூரணப்படுத்துவது என்பது ஒரு வகையில் தோல்வியாகும். பல்கலைக்கழங்களின் பாடநெறிகளை தயாரிப்பவர்கள் வதிவிட பாடநெறியாகவே தயாரிக்கின்றனர். அதனை ஒன்லைனில் நிறைவு செய்வது என்பது கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கான உண்மையான நோக்கங்களில் ஏற்படுத்தும் பாதிப்பை நிறுத்த முடியாது.
இதனைக் குழப்பிக் கொள்ள வேண்டாம். இந்த நேரத்திலும் ஆன்லைன் கற்றல் செயல்முறையை மேலதிக கற்பித்தல் செயல்முறையாக தொடர்வதில் எந்த பிரச்சனையும் இல்லை. இருப்பினும், பல்கலைக்கழங்களின் பாடநெறிகள், பாடசாலைகளின் பாடங்கள் முற்றாக ஒன்லைன் முறையில் நடைபெறுமாயின் அது சாதாரண நிலமையின் கீழ் ஏற்றுக் கொள்ள முடியாத தொன்றாகும்.
இந்த விவகாரங்களில் எந்தவொரு முன் விசாரணையும் இல்லாமல் இன்று இந்த செயல்முறை முன்கொண்டு செல்லப்படுகிறது. இது இவ்வாறே தொடர்ந்தால், மாணவர்கள், விரிவுரையாளர்களுக்கு மாத்திரமின்றி பெற்றோர்களுக்கும் ஒரு கடுமையான இது பிரச்சினையாக மாறிவிடும்