ஆரம்ப கால மாணவர்களுக்கும், இன்றைய கால மாணவர்களுக்கும் இடையே பாரிய வித்தியாசம் உள்ளது. இவ்வாறேதான் ஆசிரியர்களது நிலையும் உள்ளது. எனவே மீண்டும் முன்பிருந்த மாணவர்களது ஒழுக்க நிலையை நிலைநிறுத்த வேண்டிய பாரிய கடமை இன்றைய கல்வித் துறையினருக்கும், பெற்றாருக்கும், சமூகத்துக்கும் உள்ளது. இதனை விரைந்து செயற்படுத்த நாம் தவறுவோமேயானால் பாரிய விளைவுகளை சமூகம் எதிர்நோக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை ஏற்படும்.
இன்றைய நிலையில் மாணவர்களின் கட்டுக் கோப்பானது பெரிதும் சீர்குலைந்துள்ளது. இதனை விட பிள்ளைகள் பின்பற்ற வேண்டிய எமது கலாசார பாரம்பரியத்துக்கு உரித்தான உயர் குணப் பண்புகளும் அருகிய நிலையிலேயே உள்ளன. சில மாணவர்கள் ஒழுக்கம் குன்றியவர்களாகக் காணப்பட்டாலும் இரு, ஒழுக்கம் உள்ள மற்றய மாணவர்களைப் பாதிப்பதையும் எம்மால் அவதானிக்க முடிகிறது. இன்று சில பாடசாலைகளில் ஆசிரியர்களை தாக்க முற்படுதல், ஆசிரியைகளை தவறான வார்த்தைகளால் ஏசுதல் ஆகிய முறைப்பாடுகள் பரவலாகக் கிடைக்கின்றன. மாணவர்களின் ஒழுக்க மீறலை இது தெளிவாகக் காட்டுகிறது.
இன்றைய கால கட்டத்தில் மாணவர்களிடம் ஏற்படும் மாற்றங்களை அவதானிக்கையில், பிள்ளைகளின் வீட்டுச் சூழல் என்பது பெரிதும் சவால் நிறைந்ததாகக் காணப்படுகிறது. வரையறையின்றி நண்பர்களுடன் பழகுதல், நாகரிகமற்ற தொலைக்காட்சி ஒலிபரப்புகள். தொலைபேசிப் பாவனை, சர்வதேச கணனி வலைப்பின்னல் மூலமான ஆபாசம் என்பன கோடிக்கணக்கான மக்களைப் பாரிய அழிவுக்குள்ளாக்குகின்றது. இதனைவிட, பல சரக்குக் கடைகளைப் போல் காணப்படுகின்ற மதுபானச் சாலைகள் சமூக சீர்கேடுக்குக் காரணமாகின்றன. நேரக் கட்டுப்பாடு. வயது வரம்பு இன்றி, மது வகைகளை விற்பனை செய்தல் மது அருந்துவோர் கண்ட கண்ட இடங்களில் மது அருந்துவது போன்றவையும் சீரழிவுக்குக் காரணங்களாகின்றன. இது மட்டுமன்றி உலக மயமாக்கல் என்னும் பொருளாதார ஏகாதிபத்தியத்தின் காரணமாக எமது நாட்டின் பொருளாதார மட்டத்தில் பின்தங்கிய சமூகம் மென்மேலும் சீர்குலைந்து வருகிறது. இதன் தீய விளைவாக பிள்ளைகளைப் பிரிந்து பெற்றோர் குறிப்பாக இளந் தாய்மார் உழைப்பில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. இதனால் பிள்ளைகள் பல்வேறு விதமான நெருக்கீடுகளுக்கு உள்ளாகின்றனர்.
எனவே இவ்வாறான நிலைமைகள் ஒன்று சேருகின்ற இடம் பாடசாலைகள் என்பதால் மாணவர்கள் பல்வேறு விதமாக ஒழுக்க நிலைகளை மீறுகின்ற சந்தர்ப்பங்கள் உள்ளன. எனவே இவ்வாறான நிலைமைகளை மெல்ல மெல்ல அகற்றி நல்ல நாட்டுக்கு ஏற்ற பிரசைகளாக மாணவர்களை மாற்ற வேண்டிய பொறுப்பு உள்ளது. எனவே மாணவர்களுக்கான ஒழுக்க நெறிக் கோவையை முதலில் அறிமுகம் செய்ய வேண்டிய நிலைமை உள்ளது. எந்தவொரு பிள்ளையையும் நற்பிரசையாக்க வேண்டிய பொறுப்பு தற்போது பாடசாலைகளில் பெரும்பாலும் தங்கியுள்ளது. ஆனால் இதனைச் சரிவர நிறைவேற்ற மாணவர்களிடத்தில் ஒழுக்க விழுமியங்கள், வளர்க்கப்பட வேண்டும். மாணவர்களிடத்தில் ஒழுக்கம் இலாமல் போகும் போது. அவர்களின் அடைவு மட்டங்களில் பின்னடைவு பெறுவதை அவதானிக்க முடிகிறது. இந்த ஒழுக்க விதிக் கோவையானது மாணவர்களை நல்வழிப் படுத்தி அவர்களை சாதனையாளர்களாக மாற்று வதை இலட்சியமாகக் கொண்டதாகும். ஆனால் இதன் விதிகளை எதிர்மறை யாக எவரும் பிரயோகிக்க முற்படுவதோ பிள்ளைகளை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்குவதோ தவிர்க்கப்பட வேண்டும்.
மாணவர்களுக்கான ஒழுக்க நெறிக் கோவையானது பின்வரும் விடயங்களைச் சார்ந்ததாக வகுக்கப்படுகிறது.
நடத்தையும், கடப்பாடுகளும்
(1) பாடசாலைகளில் சேருதல்
(2) மாணவர்களில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தோற்றம்
(3) பாடசாலைகளுக்கு வெளியேயான நடத்தை
(4) வரவு மற்றும் கற்றல் அடைவு மட்டங்கள் மீதான கடப் பாடுகள்
(5) பாடசாலையினுள் சக மாணவர்களுடனான நடத்தை
(6) பாடசாலையினுள் அதிபர், ஆசிரியர்களுடனான நடத்தை
(7) பல்வேறு இணைப்பாட விதான நிகழ்ச்சிகள் போட்டிகளில் பங்கு பற்றுதல்
(8) மாணவ தலைமைத்துவ அர்ப்பணிப்பு
(9) பாடசாலையின் புகழை வெளிச் சமூகத்துக்கு கொண்டு செல்லல்.
(10) அரசின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்படல்
(11) பாடசாலையில் இருந்து விடுகை பெறல்
பாராட்டுகள்
(1) சிறந்த மாணவன்ஃ மாணவிக்கான பாராட்டுகள்
(2) நல்லொழுக்கஃ உயர் குண பதிவேடு பேணல்
தண்டனைகள்
(1) எச்சரிக்கை பத்திரம் வழங்கல்
(2) பாடசாலையிலிருந்து இடை நிறுத்தல்
(3) பாடசாலையிலிருந்து விலக்குதல்
(4) வகுப்பேற்றத்தைப் பிற்போடல்
(5) திணைக்களப் பரீட்சைகளுக்கு தோற்றலைப் பிற்போடல்
(6) தண்டப் பணம்ஃ நட்ட ஈடு செலுத்தல்
பாடசாலையுடனான பெற்றார் உறவு
(1) பாடசாலையுள் நுழையும் போது கவனிக்க வேண்டியவை
(2) பெறN;றாரின் பாடசாலை அபிவிருத்தி சங்க கூட்டங்களில் பங்குபற்றதல்
(3) பிள்ளைகளின் நாளாந்த வரவைப் பெற்றார் உறுதிப்படுத்தல்
(4) தொலைக்காட்சி, தொலைபேசிப் பயன்பாடு தொடர்பான விழிப்பு ணர்வு
(5) தனது பிள்ளையைப் போல் மற்றய பிள்ளைகளை நேசித்தல்
பாடசாலைகளில், மாணவர்களின் நடத்தைகள் மிக முக்கியமானதாகும். சீருடை, தோற்றம், பாடசாலை உள்ளன, வெளியான நடத்தைக் கோலம், சக மாணவர்களுடனான நடத்தை, பாடசாலைக்கான சீரான வரவு பாடங்களில் கூடிய கவனம், அடைவு மட்ட உயர்வு, இணைப் பாட விதான நிகழ்வுகளில் கூடிய பங்களிப்பு, அதிபர், ஆசிரியர்களுக்கு பணிவான நடத்தை, மேற்கூறப்பட்ட விடயங்கள். மாணவரிடையே ஒழுக்க சீலங்களை பெரிதும் வளர்க்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிள்ளைகள் ஒழுக்க சீலர்களாக வளர்வதற்கு பாடசாலைகளுடன் இணைந்து பெற்றார்களின் வழிகாட்டல் ஒத்துழைப்பு பெரிதும் விரும்பப் படுகிறது. பெற்றார் – ஆசிரியர் தொடர்பு அதிகரிப்பு நண்பர் சேர்க்கை, தொலைபேசி, தொலைக்காட்சி விடயங்களில் கூடிய கட்டுப்பாடு, மாணவர் அடைவு மட்டங்களில் கூடிய கரிசனை. எனவே மாணவர்களுக்கான ஒழுக்கக் கோவை சகல பாடசாலைகளிலும் அமுலாக்கம் செய்யப்படுகின்ற போது நாட்டுக்கு ஏற்ற நல்ல பிரஜைகளை எதிர்காலத்தில் எம்மால் உருவாக்க முடியும்.
வி.பிரசாந்தன்