இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மிகப் பெரிய தொழில் பயிற்சி நிலையமான இலங்கை – கொரியா தேசிய தொழில் பயிற்சி மத்திய நிலையம் எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதி மாணவர்களுக்குக் கையளிக்கப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபையின் கீழ் நிர்மாணிக்கப்படும் இது, மார்ச் மாதம் 31 ஆம் திகதி நிர்மாணப்பணிகள் முடிவடைந்து முதல் தொகுதி மாணவர்களை உள்ளீர்க்கத் தயாராக உள்ளது.
ஒருகொடவத்தை பிரதேசர்தில் 16.85 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்நிலையத்திற்கு கொரியாவின் எக்ஸிம் வங்கி நிதியளித்துள்ளது.
கொரியவாவின் பொருளாதார மற்றும் தொழிநுட்ப வல்லுனர்களின் திட்டத்தின் அடிப்படையில் 21 ஆம் நூற்றாண்டுக்கு தேவையான தேர்ச்சி பெற்றவர்களை உருவாக்கும் அனைத்து வசதிகளையும் கொண்ட தொழில் பயிற்சி மத்திய நிலையமான இது இளைஞர் யுவதிகளுக்கான பல்வேறு பாடநெறிகளை ஆரம்பிக்க உள்ளது.
மிகவும் நவீன வசதிகளுடன் கூடிய இந்த நிலையம், தேவையான தொழிநுட்ப பயிலரங்கு, கேட்போர்கூடம், விரிவுரை மண்டபம், வாசிகசாலை வசதிகள், மொழி ஆய்வு கூடம், கணனிக் கூடம் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
மோட்டார் வாகன தொழிநுட்பம், குளிரூட்டி, வாகன குளிரூட்டி தொழிநுட்பம், தொழிநுட்பம், மின் தொழிநுட்பம், இலக்ட்ரோனிக் தொழிநுட்பம், CNA தொழிநுட்பம் மற்றும் Automation and Roboticதொழிநுட்பம் உட்பட பல தொழிநுட்ப பாடநெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.