இலங்கையில் இணைய வழிக் கல்வியிலுள்ள சவால்கள்
இன்றைய இடர்காலச் சூழலில்மாணவர்கள் தொடர்ச்சியாகக் கல்வியினைக் கற்க முடியாமல் இடர்படுகின்றார். இச் சூழலில் கற்றல்கற்பித்தல் என்பது சவாலான விடயமாகவேகாணப்படுகின்றது. இந்நிலையில் இலங்கையில் மாணவர்களைத் தொடர்சியாகக் கற்றலின்பால் வைத்து இருப்பதற்காக தேசிய கல்வி நிறுவகமும் கல்வியமைச்சும்இணைந்து தொலைக்காட்சியூடாகக் கற்பித்தலை நடாத்துகின்றது. இதை தவிர மாகாணக் கல்வித்திணைக்களங்களும், வலயக் கல்வி அலுவலகங்களும், பாடசாலைகளும், தனியார் கல்வி நிலையங்களும், தன்னார்வநிறுவனங்களும் இணைய வழிக் கற்றல், செயலட்டை, மாதிரிக் கற்பித்தற் காட்சிகள் என்பவற்றை நடாத்துகின்றன. இருந்தபோதிலும் இவற்றினை பயன்படுத்தல், தயாரித்தலில்பல்வேறுபட்ட சவால்கள் காணப்படுகின்றன.
முதலாவதாகமாணவர் சார்ந்த சவால்களை நோக்குகின்ற போதுமாணவர்களுக்கிடையே காணப்படும் வசதி வாய்ப்புக்கள் ஒவ்வொரு மாணவர்களுக்கும் இடையேவேறுபடுகின்றன. பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர் பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களாகஅன்றாடக் கூலி வேலைகளை மேற்கொள்பவர்களாகவேகாணப்படுகின்றனர். அவர்களிடம் சாதாரண தொலைபேசி ஒன்றுஇருப்பது கூட அரிதாகவே காணப்படுகிறது. இந் நிலையில் அவர்கள்வட்ஸ்அப். வைபர் குழுக்களிலும், நிகழ்நிலைவகுப்புகளிலும் கற்றலில் ஈடுபடுவது எவ்வாறுசாத்தியமானது என்பது முதலாவது வினாவாகும்? இதேவேளை நடுத்தரக் குடும்பங்களில் பிறந்தமாணவர்களிடம் ஓரளவு தொழில்நுட்ப வசதியுள்ள தொலைபேசிகாணப்பட்டாலும் அவற்றைப் பயன்படுத்துவதற்கான தொலைபேசிக்கட்டணங்களைச் செலுத்தும்வசதியுடன் பெரும்பாலான குடும்பங்கள் காணப்படுவதில்லை. ஓரளவு வசதியுள்ள மாணவர்கள்இதனைப் பயன்படுத்திக் கற்கின்றனர் என்பதனை அவதானிக்க கூடியதாகவுள்ளது. அதே சமயம் வசதியுள்ளமாணவர்கள் உள்ள குடும்பங்களிலும் ஒன்றுக்குமேற்பட்ட பிள்ளைகள் உள்ள போதுஒன்றுக்கு மேற்பட்ட தொழில்நுட்ப வசதியுள்ள தொலைபேசிகள்தேவை இதுவும் ஒரு பாதகமானவிடயம் ஆகும்.
இதுஎவ்வாறு இருப்பினும் இலங்கையில் இணைய வேகம் நகர கிராமப் புறங்களுக்குஇடையில் வேறுபாடுகளைக் கொண்டமைந்துள்ளது. சில தொலைத்தொடர்பு நிறுவனங்களின்இணைப்புக்கள் இலங்கையில் எல்லாப் பிரதேசங்களுக்கும் இன்றும்வழங்கப்படவில்லை என்பதுவும் ஒரு சவாலான விடயம்ஆகும்.
இதேவேளைஇடர்காலச் சூழலில் மாணவர்கள் தமதுகுடும்பத் தொழில்களில் ஈடுபடுகின்றமையால் கற்றல் கற்பித்தல் மேலும்ஒரு சவாலாகவே காணப்படுகிறது. இலங்கை கரையோரப் பிரதேசங்களைக் கொண்டஒரு விவசாய நாடாகஇருப்பதனால், பாடசாலைகள் இயங்காத இடர்காலங்களில் மாணவர்கள்தந்தை மற்றும் உறவினர்களுடன் இணைந்துமீன்பிடி, விவசாயம் போன்றவற்றில் ஈடுபடுவதன்ஊடாக தமது குடும்பங்களின் பொருளாதாரஉயர்ச்சிக்கு உதவிபுரிகின்றனர். இவர்களை இணையவழிக்கல்வியின்பால் திருப்புதல் சவாலானவிடயமாகவே காணப்படுகின்றது. இனிவரும் காலங்களில் பாடசாலைஇடைவிலகலும் அதிகரிக்க கூடிய சூழல்உருவாகியுள்ளது.
இதேவேளைஇணைய வழிக் கற்றலை மேற்கொள்கின்ற மாணவர்கள் கூடுதலாகதொலைபேசியூடாகவே கற்கின்றனர். தொலைபேசியின் திரை சிறியதாக இருப்பதால்தொடர்சியாக அதனை அவதானிப்பதன் மூலம்கண் காது போன்றஉறுப்புக்களில் கோளாறு ஏற்படலாம் எனமருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மாணவர்கள் பெரியதிரைகளையுடைய கணனிகளில் கற்கும் வாய்ப்புகுறைவாகவே காணப்படுகின்றது. இது ஒரு சவாலானவிடயமாகும் அத்துடன் மாணவர்கள்இணையத்துக்கு அடிமையாகக் கூடிய சாத்தியமும் காணப்படுகின்றது. இதேவேளை கடந்த நல்லாட்சி அரசாங்கம்பெரிய திரைகளைக் கொண்ட கணனிகளைமாணவர்களுக்கு இலவசமாக விநியோகிக்க முயற்சிஎடுத்தது அரசியல் காரணங்களுக்காக அதுகைவிடப்பட்டு இருந்திருக்காவிட்டால் இன்று இணையக்கல்வி அடுத்தகட்டத்திற்கு நகர்ந்து இருக்கும் என்பது வெளிப்படையானது.
மாணவர்கள்தொடர்ச்சியாக இணைய இணைப்பை பயன்படுத்துவதன்ஊடாக தேவையற்ற இணையத்தளங்களுக்கு நுழையக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. இதனை தடுப்பதற்கானவழிமுறைகள் உள்ள போதும் பெற்றோருக்குஇவை தொடர்பான தொழில்நுட்பஅறிவு குறைவாகவே இருப்பது இணையம்மூலமான கற்றலில் ஒரு சவாலானவிடயம் ஆகும்.
இதேவேளைஇன்று ஆரம்ப இடைநிலை வகுப்புமாணவர்களுக்கும் இணையம் மூலமான பரீட்சைகள்நடைபெறுவது அவர்களின் மனநிலையப் பாதிக்கின்றவிடயம் ஆகும். தொடர்ச்சியாகக் கற்றலில், ஈடுபடாமையினால் பாடத்தை மறந்து விடுவார்கள். எனவேதான் இணையவழிப் பரீட்சை என்கிறார்கள். கல்வி என்பது மனப்பாடக் கல்வியாகஇருப்பதனையே இது குறிக்கின்றது. ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு சூழலுடன் இணைந்த கற்றலேமுக்கியமானது. உண்மைப் பொருட்கள் மற்றும்நேரடி அனுபவங்கள் ஊடாக கற்றல் அனுபவங்களைவழங்குகின்ற போதே ஆரம்பப் பிரிவுமாணவர்களுக்கு எண்ணக்கரு விருத்தி ஏற்படும். இங்கு குழந்தைகளுக்கு கல்வி இயற்கையின் ஊடாகவேவழங்கப்பட வேண்டும் என்கின்ற இயற்கைவாதியானரூசோவின் கருத்தும் நோக்கத்தக்கது.
இன்று இலங்கையில் நடைபெறும் இணையவழி வகுப்புக்கள்கால நேரம் அற்றுகாலை 3 மணி தொடக்கம் இரவு11 மணி வரை நடைபெறுகின்றது. வசதிவாய்ப்புள்ள மாணவர்கள் இதனை பயன்படுத்தும்போது களைப்படைகின்றனர் பொருத்தமான ஆசிரியரை தேர்ந்து எடுப்பதிலும்இடர்படுகின்றனர். அத்துடன் சில பிரபலஆசிரியர்கள் இதை சாட்டாக வைத்துபெற்றோரின் உழைப்பை சுறண்டுகின்றனர். அதேவேளை தேசியகல்விநிறுவகம், மாகாணக்கல்வித்திணைக்களங்கள், வலயக்கல்வி அலுவலகங்கள்போன்றஅரசநிறுவனங்கள்தமக்குள்ஒருஇணைந்த நேர அட்டவணையின்றி சமநேரத்தில் இணையவழி வகுப்புக்களை நடாத்துவதால்மாணவர்கள் எந்த வகுப்பில் கலந்துகற்பது என்பதில் இடர்படுகின்றனர். அத்தோடுஅரச நிதியும் வீண்விரயம்செய்யப்படுகின்றது.
அடுத்ததாகஆசிரியர் சார்ந்த சவால்களை நோக்குகின்றபோது இன்றைய ஆசிரியர்கள் பலர் நவீன தொழில்நுட்பம்சார்ந்த அறிவு குறைந்தவர்களாகக் காணப்படுகின்றனர். இது இணையவழிக் கல்வியின்ஒரு சவாலாக் காணப்படுகின்றது. ஓர் ஆசிரியர் ஒவ்வொருநாளும் தங்களைப் புதுப்பித்துக் கொள்ளவேண்டும். ஏன் எனில் கற்கும்மாணவர்கள் வேகத்துடன் இருக்கின்றனர். நவீன தொழிநுட்பங்களை வேகமாகஉள்வாங்கிக் கொள்கின்றனர். எனவே ஆசிரியர் அதேவேகத்துடன் ஓடியாக வேண்டும். ஆசிரியர்மட்டுமல்ல ஏனைய தொழில்துறையினரும் அதேவேகத்துடன் ஓடவேண்டும். ஒரு தையல்காரன் 2000 ஆண்டுதைத்தது போல் இன்று தைத்துக்கொண்டிருக்க முடியாது. இன்றைய சூழலில்உள்ள வடிவமைப்புக்கு ஏற்ப அவர் தைக்கவில்லைஎனில் அவருக்குத் தொழில் இல்லை. ஒருதையல் வேலைக்கே புதிய நுட்பம்அவசியமாகின்ற போது அடுத்த தலைமுறைக்குஅறிவை போதிக்கும் ஆசிரியர்களுக்கு நவீன தொழில்நுட்ப அறிவுதேவையானது. ஒரு தையல் காரன்நவீன நுட்பங்களைப் பயன்படுத்தாவிடின் அது அவனது நஷ்டம்ஆனால் ஆசிரியர் நவீன தொழிநுட்பத்தைபயன்படுத்தாவிடின் ,காலத்தால் பின்தங்கியிருப்பின் அதுஅந்த மாணவர் சமூகத்துக்கு தான்நஷ்டம். எனவே ஆசிரியர் தன்னைசார்ந்த துறைகளை அறிந்து இருப்பதும்எப்போதும் புதுமைகளை உள்வாங்கத் தயாராகஇருப்பதும் அவசியமானதாகும்.
ஆசிரியர்பயன்படுத்தும் கற்பித்தல் முறையும் இணையவழிக் கல்வியில்ஒரு சவாலே இன்றுஇணையக்கல்வி மூலம் நடாத்தப்படும் அநேகபாடங்கள் விரிவுரை முறையிலேயே நடைபெறுகின்றன. பின் நவீனத்துவ கல்விச்சிந்தனையாளர் போலேபிறைறி கூறுவது போல் ஆசிரியர்களுக்குவிபரிப்பு நோய்யுள்ளது என்றே தோன்றுகின்றது. ஒவ்வொருமாணவர்களும் வேறு வேறானவர்கள் அவர்களின்தனித்தன்மையினை கருத்தில் கொண்டே கற்றல் கற்பித்தல்திட்டமிடப்பட வேண்டும். ஆனால் இன்றையஇணையவழிக் கல்வியில் அனைத்து மாணவர்களுக்கும்ஒரே முறையிலேயே கற்பித்தல்நடைபெறுவதனையே அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இவ்வாறான கற்றல் கற்பித்தலின் விளைவுகள் சந்தேகத்துக்குரியதே.
இதேவேளைஆசிரியர்களின் உளப்பாங்கும் இணையவழிக் கல்விக்கு சவாலாகவேகாணப்படுகின்றது. இன்றைய ஆசிரியர்கள் வகுப்பறையில்தாம் நேரடியாகக் கற்பிப்பதைத் தவிர்த்து மாற்றுக் கல்விமுறைதொடர்பான எதிர்மனப்பாங்குடனேயே பெரும்பாலானவர்கள் காணப்படுகின்றனர். அவர்களின் மனப்பாங்கில் வயது, அனுபவம், தொழிற்தகமை, பயிற்சியின் தரம் என்பன தங்கியுள்ளதாகஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. இன்றைய ஆசிரியர்களில் சிலர்தாம் வேலைக்குப் பாடசாலைக்குச் செல்வதனையே தியாகம் செய்வதனைப் போல்உணர்கின்றனர். அவர்கள் மேலதிகமாகத் திட்டமிட்டுஇணையக்கல்வியில் ஈடுபடுவதுஎன்பது கற்பனைக்குரியதாகவே காணப்படுகின்றது.
இன்றையஆசிரியச் செயலமர்வுகள், பயிற்சிகளில் கற்றல் கற்பித்தல் தொடர்பானஉளவியல்,சமூகவியல் கோட்பாடுகளுடன் இணைந்துதொழில்நுட்பம் தொடர்பான கற்கைகளையும் பயிற்சிகளையும்இணைப்பதன் ஊடாக இவ் சவால்களைவெற்றி கொள்ளமுடியும்.
இன்றையசூழலில் சுயமாகவும், மேலதிகாரிகளின் அழுத்தம் காரணமாகவும் பாடசாலைமட்டங்களில் வகுப்பறை மட்ட வைபர்குழுக்கள் மூலம் கற்பித்தல் நடைபெறுகின்றது. இவ் செயலிகளின் தகவல்பாதுகாப்பு சிந்திக்க வேண்டிய விடயம்அத்துடன் பெண் ஆசிரியைகளின் தொலைபேசி இலக்கங்கள்சமூகமட்ட வைபர் குழுக்களில் காணப்படுவதனால்பெண் ஆசிரியர்கள் தேவையற்ற தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். இவை போன்ற பல்வேறுபட்ட சவால்கள் இணையவழிக் கற்றலில்காணப்படுகின்றது.
கற்றல்பரந்துபட்டது அதை வகுப்பறையில் அடைக்கக்கூடாது மாணவனுக்கு தனது வகுப்பறையையும் தாண்டிகற்றலுக்கு பல வழிகள்உண்டு என இவ்காலம் உணர்த்துகின்றது. அவற்றில் ஒன்று தான்இணையவழிக்கல்வி. எவற்றை பயன்படுத்தியும் மாணவர்கள்கற்க முடியும் ஆனால் மாணவர்களைஎதன் முன்பும் தொடர்சியாக உட்காரவைப்பதால் மாத்திரம் முழுமையான கற்றல்நடைபெறுவதில்லை என்பதை அனைவரும் உணரவேண்டும்.
இணையவழிக்கல்விஅனைத்து மாணவருக்கும் சமனான வாய்ப்பைத் தராது. பாகுபாடு உடையது. வசதியுடையவர் வாய்ப்பைபயன்படுத்தி முன்னேறவும் வசதி குறைந்தவர்கள் பின்தங்கிநிற்கவும் வழிவகுக்கும். முதலில் வசதியுள்ள வசதிகுறைந்தஅனைத்து மாணவர்களுக்கும் சமனான கற்றல் சூழலைஉருவாக்க வேண்டும். கன்னங்கராவால் அறிமுகப்படுத்தப்பட்டஅனைவருக்கும் சமத்துவமான இலவசக்கல்வி என்ற எண்ணக்கருவையே இணையக்கல்வி ஆட்டங்காண வைத்துவிடும். இன்றையஉலகில் சமத்துவத்தை விட ஒப்புரவுக்கு உயர்ந்தஇடம் வழங்கப்படுகின்றது. வசதி வாய்ப்பு குறைந்தவர்களுக்குமேலதிக வசதிகளை வழங்கி கல்வியினூடாகவசதி வாய்ப்பு உடையவர்களாக மாற்றுதல்வேண்டும். பின் நவீனத்துவ கல்விச்சிந்தனையாளர்இவான் இலிச் கூறுவது போலசமத்துவம் என்பது வசதியுடைவர்களை வசதியுடையவர்களாகவும்வசதியற்றவர்களை வசதியற்றவர்களாகவும் வைத்திருக்கவே பயன்படும் இதேயே இணையவழிக்கல்வியும் மேற்கொள்கின்றது.
கற்றல்பெரும்பாலும் வகுப்பறையில் நடைபெறுவதில்லை. சகபாடிகள், சூழல்கள் மூலமாகவே கூடுதலானகற்றல் இயற்கையில் நடைபெறுவதாக இவான் இலிச் கூறுகிறார்.
எதுஎவ்வாறு இருந்த போதும் மாணவர்களைஏதோ ஒரு வழிமுறைமூலமாக ஆவது கற்றலுடன் தொடர்புபடுத்திவைத்திருத்தல் நல்லது. எனவே ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி அதிகாரிகள், கல்வியியலாளர்கள்இணைந்து செலவில்லாத தொழில்நுட்பத்துடன் பாடங்கள் மாணவர்களைச் சென்றடையும்சாத்தியம் குறித்து சிந்திக்க வேண்டும்.
இராமச்சந்திரன்நிர்மலன்
ஆசிரியர், வ/கனகராயன்குளம் மகா வித்தியாலயம்