இலங்கை – ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவகம் மொரட்டுவை
(கைத்தொழில், வாணிப அலுவல்கள், கூட்டுறவூத்துறை அபிவிருத்தி, நீண்டகால இடம்பெயர்ந்த நபர்களின் மீள்குடியேற்றம், தொழிற்பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சு)
தேசிய தொழில் பயிலுநர் திட்டத்தின் கீழ் முழுநேர பயிற்சி நெறிக்கான அனுமதி – 2019
கீழ்க்காணும் ஆகக்குறைந்த தகைமைகளையூடைய ஆண்/ பெண் இருபாலாரிடமிருந்து 2019 ஆம் ஆண்டு அனுமதிக்கான
விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
தேவையான ஆகக்குறைந்த தகைமைகள் :
01. (அ) வயது : 2019.03.31 ஆந் திகதியன்று 16 வயதிற்கும் 22 வயதிற்கும் இடைப்பட்டிருத்தல் வேண்டும்.
(ஆ) கல்வி : க. பொ. த. (சா./ த.) பரீட்சையில் தமிழ் அல்லது சிங்களம் (போதனாமொழி), கணிதம் உட்பட 06 பாடங்களில் ஒரே அமர்வில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
அல்லது
இலண்டன் சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கிலமொழி, கணிதம் உட்பட 06 பாடங்களில் ஒரே அமர்வில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
விசேட திறமை-
மின்சாரவியல்ஃ இலத்திரனியல்/ இயந்திரவியல் துறைகளில் புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டு தேசிய/ மாகாண மட்டத்தில் இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட முதல் மூன்று
இடங்களில் ஒன்றினை பெற்ற சான்றிதழுடன் (ஆ) கல்வித்தகைமையினை இரண்டுக்கு மேற்படாத அமர்வூகளில் பெற்றிருத்தல் வேண்டும்.
(இ) தேசிய தொழில் பயிலுநர் தொழிற்பயிற்சி அதிகார சபையில் 03 அல்லது அதற்கு மேற்பட்ட வருடங்களுக்கான பயிற்சியினை பெறுவோர் விண்ணப்பிப்பதற்கு தகுதியூடையோர் அல்லர்.
02. பயிற்சி போதனைகள்.- சிங்களத்தில் எல்லா பாடநெறிகளும், மோட்டார் இயந்திரவியல் பாடநெறி மாத்திரம் தமிழிலும் நடத்தப்படும். சிங்கள மொழியறிவூள்ள தமிழ் மாணவர்கள் மற்றைய பாடநெறிகளையூம் கற்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும். (ஆ) இல் இலண்டன் சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் தமிழ் அல்லது சிங்கள
மொழிமூலம் பயிற்சி பெறும் சந்தர்ப்பம் வழங்கப்படும்.