மாணவர்களுக்கு நியாயம் கிடைக்கிறதா?
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானவுடன் இஸட் ஸ்கோர் பற்றிய கதையும் மீண்டும் ஆரம்பித்துவிட்டது. இஸட் ஸ்கோர் முறை நாட்டுக்கு ஏன் அவசியம்? உயர்தர மாணவர்களுக்கு அதன் மூலம் நியாயம் கிடைக்கின்றதா? அதனால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வென்ன?
கேள்வி: ஏன் இஸட் ஸ்கோர் முறை அவசியமாகவுள்ளது?
பதில்: சுதந்திரத்துக்குப் பின்னர் தேசியக் கல்விக் கொள்கையொ ன்றை நடைமுறைப்படுத்த பொறுப்பு வாய்ந்தவர்கள் தவறியதாலேயே இஸட் ஸ்கோர் ஏற்படுத்தப்பட்டது. அதன் விளைவுகளை இந்நாட்டு இளைஞர் பரம்பரை இன்று அனுபவிக்கின்றது.
கல்வி அதிகாரிகளின் எதிர்காலத்தில் ஏற்படும் பிரச்சினை பற்றி புரிந்துணர்வு இல்லாமையால் இன்று உயர் தரத்தில் சிறந்த பெறுபேறை பெற்றாலும் பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத நிலைமையுள்ளது. இலவச கல்வியை சரியான முறையில் வழிநடத்திச் செல்லாமையினால் பல பிரச்சினைகள் தோன்றியுள்ளன. அவற்றுக்கு நிரந்தரத் தீர்வுகள் இதுவரை பெற்றுக் கொடுக்கப்படவில்லை. அதில் இஸட் ஸ்கோர் பிரச்சினையும் அது போன்ற ஒன்றாகும். உயர்தரப் பரீட்சைக்கு மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தோற்றுகின்றார்கள்.
அதில் ஒரு இலட்சத்து எழுபத்தையாயிரம் பேர் பல்கலைக்கழகத்துக்கு அனுமதி பெற்றாலும் பல்கலைக்கழகத்துக்குச் சென்று கல்வி கற்கும் வரத்தை முப்பதாயிரத்துக்கும் குறைவானவர்களே பெறுகின்றார்கள். பல்கலைக்கழகத்துக்கு தெரிவா இல்லையா என்பதை முடிவு செய்வது இந்த இஸட் ஸ்கோராகும். அது எவ்வாறு தயாரிக்கப்படுகின்றது என்பதை மாணவர்கள் மாத்திரமல்ல கற்பிப்பவர்களும் அறிய மாட்டார்கள்.
கேள்வி: கல்விமான்களுக்கே சரியான தெளிவில்லாத போது இந்த முறையில் வெளிப்படைத் தன்மை இல்லையல்லவா?
பதில்: புள்ளிகள் அடிப்படையில் பல்கலைக்கழக தெரிவு நடைபெற்ற வேளையில் வெளிப்படைத் தன்மை காணப்பட்டது. கஷ்டப் பிரதேசங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதியைப் பெற சந்தர்ப்பம் வழங்குவதற்காக இஸட் ஸ்கோர் முறை அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இன்று அதன் காரணமாக பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
நகர்புறங்களில் 3 ஏ. பெறுபேறுகள் பெறும் மாணவருக்கு பல்கலைக்கழகம் செல்ல சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. அதேவேளை கஷ்டப் பிரதேசத்தில் அதைவிட குறைந்த பெறுபேறை பெறும் மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்ல தகுதி பெறுகின்றார்கள். இவ்வாறான முறையில் பிள்ளைகளின் அறிவை கணித முறைமூலம் கணிப்பது நியாயமானதா என ஆராய வேண்டும். ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையை தடுக்க எடுக்கும் முடிவுகள் அதைவிடவும் மோசமாகக் காணப்பட்டால் அது சட்டியிலிருந்து அடுப்பில் விழுந்த கதை போலாகும்.
பல்கலை க்கழகத்துக்கு அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யாதிருப்பது கவலைக்குரிய விடயமாகும். எமது மனிதவளம் வீணடிக்கப்படுகின்றது. அவர்களிடமிருந்து பிரயோசனத்தைப் பெற முடியவில்லை. அது அவர்களுக்கும் நாட்டுக்கும் செய்யும் நியாயமற்ற செயலாகும். தற்போது காணப்படும் இந்த நிலைமைக்கு பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். அது குறுகிய கால தீர்வாகும். அந்நிலைமையை தொடர்ந்து பேணவும் வேண்டும். அதேவேளை நாட்டுக்குத் தேவையான தொழிற்பயிற்சி கல்வியையும் பல்கலைக்கழகங்களில் அறிமுகம் செய்ய வேண்டும்.
அதேபோல் முறையாக வழங்கப்படும் கல்வியை மாணவர்கள் அனைவரும் சமமாகப் பெற வழி செய்ய வேண்டும். பிள்ளைகளுக்கு சமமான கல்வி உரிமையை வழங்கும் போதுதான் நாட்டின் அநேகமான பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்.
கேள்வி: அதிகப் புள்ளிகளைப் பெறும் மாணவர்களுக்கு இந்த முறை மூலம் ஏற்படும் பாதிப்பை நீங்கள் எவ்வாறு நோக்குகின்றீர்கள்?
பதில்: இஸட் ஸ்கோர் முறையை கணக்கிடும் போது ஒரே மாவட்டத்தில் ஏதேனும் பிரிவில் 250 புள்ளிகள் பெற்ற மாணவனுக்கும் பல்லைக்கழக அனுமதி கிடைக்காத போது 244 புள்ளிகள் பெற்ற மாணவனுக்கு பல்கலைக்கழக அனுமதி கிடைக்கின்றது. குறிப்பிட்ட பாடப்பிரிவில் அந்த வருடம் சிரமமான பாடத்துக்கு அதிகப் புள்ளிகளைப் பெற்ற மாணவனின் மொத்தம் புள்ளி குறைவாக இருந்தாலும் அவருக்கு அதிகளவு இஸட் ஸ்கோர் கிடைக்கலாம். இவ்வாறான பிரச்சினை இந்த முறையில் காணப்படுவதால் பாதிக்கப்படுவது மாணவ சமூகமேயாகும்.
அனைத்துக்கும் முன்னர் பல்கலைக்கழக அனுமதிக்கான மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து புதிய பட்டப்படிப்புகளை உருவாக்க வேண்டும். அவ்வாறான திட்டமொன்றை நடைமுறைப்படுத்த இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
பேராதனைப் பல்கலைக்கழக
முகாமைத்துவப்பீட வர்த்தக
நிதி திணைக்களத்தின் சிரேஷ்ட
விரிவுரையாளர் திலக் சதருவன் சுபசிங்க
முகாமைத்துவப்பீட வர்த்தக
நிதி திணைக்களத்தின் சிரேஷ்ட
விரிவுரையாளர் திலக் சதருவன் சுபசிங்க