கல்வி முதுமானி கற்கைநெறி – 2020/2021
கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் கல்வி, பிள்ளை நலத்துறையினால் நடாத்தப்படவிருக்கும் கல்வி முதுமாணிக் கற்கை நெறிக்கான விண்ணப்பங்கள் தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து கோரப்படுகின்றன.
அனுமதிக்கான தகைமைகள் :
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது உயர்கல்வி நிறுவனமொன்றில் பெறப்பட்ட நான்கு வருட கற்கையுடனான கல்விமாணிப் பட்டம்.
அல்லது
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது உயர் கல்வி நிறுவனமொன்றில் பெறப்பட்ட யாதாயினுமொரு பட்டத்துடன் பட்டப்பின் கல்வி டிப்ளோமா. இத்துடன் ஆகக் குறைந்தது ஐந்து வருட கால கற்பித்தல் அனுபவம்.
தெரிவுமுறை:
எழுத்துமூலப் பரீட்சையும், நேர்முகப் பரீட்சையும்
எழுத்துப் பரீட்சை இரு பிரிவாக அமையும்
1. நுண்ணறிவு
2. கல்வியியல் பொது அறிவு
பாடநெறிக் கட்டணம்:
ரூபா 210,000.00
(பதிவுக்கட்டணம், பரீட்சைக்கட்டணம், நூலகக்கட்டணம் என்பன உள்ளடங்கலாக)
காலம்: 01 வருடம்
விண்ணப்ப முடிவுத் திகதி: 16.04.2021
மொழி மூலம்: தமிழ்
மேலதிக விபரங்களையும் விண்ணப்பப்படிவத்தினையும் கிழக்குப் பல்கலைக்கழக இணையத்தளத்தில் (www.esn.ac.lk) பெற்றுக்கொள்ள முடியும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் ரூ. 500.00 ஐ கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கணக்கிலக்கம் 227100190000390 மக்கள் வங்கி, செங்கலடிக் கிளையில் வைப்பிலிட்டு பெற்றுக்கொண்ட பற்றுச்சீட்டுடன் இணைத்து அனுப்பி வைக்கப்படல் வேண்டும். விண்ணப்பப்படிவங்களை கிழக்குப் பல்கலைக்கழக கல்வி விவகாரங்கள் பகுதியில் மேற்படி பற்றுச்சீட்டினை சமர்ப்பித்து நேரடியாகவும் பெற்றுக்கொள்ள முடியும். தபால்மூலம் விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ள விரும்புவோர் மேற்படி பற்றுச் சீட்டுடன் 9”x 6” அளவுடைய ரூபா. 15.00 இற்கான முத்திரை ஒட்டப்பட்ட சுயவிலாசமிடப்பட்ட கடித உறையையும் இணைத்து சிரேஸ்ட உதவிப் பதிவாளர்/கல்வி விவகாரங்கள் பகுதி, கிழக்குப் பல்கலைக்கழகம் இலங்கை, வந்தாறுமூலை, செங்கலடி எனும் முகவரிக்கு 25.03.2021 இற்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் சிரேஸ்ட உதவிப்பதிவாளர்/கல்வி விவகாரங்கள் பகுதி, கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை, வந்தாறுமூலை, செங்கலடி எனும் முகவரிக்கு 16.04.2021 இற்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.
மேலதிக விபரங்களை சிரேஸ்ட உதவிப் பதிவாளர்/கல்வி விவகாரங்கள் பகுதிக்கு, 065 2240584 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்.
பதிவாளர்
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை
வந்தாறுமூலை,
செங்கலடி.
10.03.2021.