பல்கலைக்கழக மாணவர்களே, கல்வியற்கல்லூரி மாணவர்களே,
வளவாளர்களே, உத்தியோகஸ்தர்களே உங்களுடைய அளிக்கையின் போது
அவையில் உள்ளோரை கவர்ந்து கொள்வதில் இடர்படுகின்றீர்களா? மேடையில் ஏறியதுமே நீங்கள் கலவரமடைவதாக உணர்கின்றீர்களா?
அப்படியாயின் அவை யாவற்றையும் வெற்றி கொள்ள தொடர்ந்தும் வாசித்து பிறரும் பயன்பெற பகிர்ந்து விடுங்கள்.இல்லையேல் இப்பதிவை கடந்து செல்லுங்கள்.
(நேரம் பொன்னானது என்பதற்காக)
அளிக்கை செய்தல் ( Presentation) என்பது பயணம் ஒன்றில் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை உங்கள் அவையினரை அழைத்துச் செல்லலை ஒத்தது.
கணிப்பீட்டு நோக்கில் மேற்கொள்ளப்படும் அளிக்கைகளாக இருந்தாலும் நிகழ்வுகளின் போதான மேடையேற்ற அளிக்கைகளாக இருந்தாலும் அவையில் உள்ளோர் உங்களுடன் இணைந்து புறப்பட முன்னர் சில அடிப்படையான தகவல்களை அவர்கள் பெற்றுக்கொள்ள விரும்புவர். அத்தகவல்களை அவர்கள் முறையாக பெற்றுக் கொண்டால் உங்கள் அளிக்கை முடியும் வரை கவனமாக நீங்கள் சொல்வதை செவிமடுக்க தயாராகவே இருப்பர்.
அந்த வகையில் இத்தகவல்களை 4 சொற்களில் வழங்கலாம்.
யார்? ஏன்? என்ன? எவ்வாறு ?
#யார்? – முதலில் உங்களை அறிமுகம் செய்ய வேண்டும் உங்களைப் பற்றியும் உங்கள் தொழில் பற்றியும் நீங்கள் கொடுக்கும் தகவல்களும் நீங்கள் பயன்படுத்தும் சம்பிரதாயங்களும் உங்களின் அறிக்கையை பொறுத்ததாகும்.
#ஏன்? – அவர்களுக்கு உங்கள் அறிக்கையின் நோக்கத்தை எடுத்துரைத்து உங்களை செவிமடுத்து இருப்பதற்கான காரணத்தையும் கூற வேண்டும்.
#என்ன? – உங்கள் அளிக்கையில் நீங்கள் குறிப்பிடவிருக்கும் பிரதான விடயங்களையும் அவற்றின் ஒழுங்கையும் கூறுவதாகும்.
#எவ்வாறு? – உங்கள் அவையினரின் நிலையிலிருந்து உங்களை நோக்கி அவர்களை கவனிக்க வைப்பதற்கு எவ்வாறு என்பது உதவுகின்றது. அவையினருக்கு வேறு தேவைகள் இருப்பின் பொதுவாக உங்கள் அளிக்கையை கவனிக்க மாட்டார்கள் எனவே உங்கள் அவையினரை ஈர்க்கும் வகையில் அவர்களின் தொடக்கநிலை வினாக்களுக்கு விடை அளித்தல் அவசியம்.
அளிக்கைக்கான ஆரம்பம் இவ் விடயங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அதேவேளை நீண்டதாக இருக்கக்கூடாது. 90 செக்கன்களுக்குள் இந்த அறிமுகத்தை நிறைவு செய்வது சிறந்தது.
ஆரம்பகட்டத்தை தொடர்ந்து வரும் அளிக்கையை சிறப்பாக்க பின்பற்ற வேண்டிய திறன்கள்.
#பொதுவான_தேர்ச்சிகள்.
மேடையில் ஏறியதும் உங்களுக்குள் ஏற்படும் கலவரத்தை குறைக்க மேற்கொள்ள வேண்டியவை.
1. அவையினர் சிறு தவறுகளை பெரிது படுத்தமாட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளல்.
2. உங்களின் மனக்கலக்கம் கட்புலனாகாது என்பதை உணர்தல்.
3. மூச்சுப்பயிற்சி
4. வசதியான இடத்தில் நின்று ஆரம்பித்தல்.
5. ஆரம்பத்திலேயே அளிக்கை நிகழ்வு விடையத்தை பரிசீலித்தல்.
6. விடயத்தில் கவனத்தைக் குவித்தல்
7. நன்கு தயாரிக்கப்பட்ட அறிமுகத்துடன் மெதுவாக ஆரம்பித்தல்.
8. உறுதியான தெளிவான முடிவுரையுடன் நிறைவு செய்தல்.
9. நன்கு ஆயத்தப்படுத்தி பயிற்சி பெற்று எடுத்தல்.
10. என்னால் முடியும் ( Yes i can do it) என்னும் மனநிலையை ஏற்படுத்திக் கொள்ளல்.
#பார்வையாளர்களை_ஈர்த்தல்.
1. எப்போதும் பார்வை ஈர்ப்பில் அவையினரை வைத்திருத்தல்.
2. அவையினருடன் பார்வைத் தொடுகையில் உள்ள போது நீங்கள் சொல்வதை குறித்த மாற்றங்கள்/ அபிப்பிராயங்கள் அவையினரால். வெளிப்படுத்தப்படும்.
3. பார்வை ஈர்ப்பினால் அவையோர் கூடுதலான ஈடுபாட்டை காட்டுவார்.
4. மாறாக பார்வையை அவையோரிலிருந்து விலக்கி வேறு திசைகளின் பார்த்தலை தவிர்த்தல்.
#உடல்_மொழி.
உடல் மொழி பின்வருவனவற்றை
ஆற்றாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
1. சாய்ந்து நிற்றல், ஓர் இடத்திலேயே உறுதியாக நிற்றல்.
2. உடம்பை குலுக்குதல் மெதுவாக சாய்ந்தாடுதல்.
3. அசையாது நிற்றல்.
4.மீண்டும் மீண்டும் ஒரே வகையான சைகையை பயன்படுத்தல்.
5. விரல் நகங்களை கடித்தல் அல்லது பரிசீலித்தல்.
6. கை கட்டிக்கொண்டு நிற்றல்.
7. பென்சில், பேனைபோன்றவற்றை கையில் வைத்துக்கொண்டு தட்டுதல் கிளிக் செய்தல்.
8. எதையாவது மென்று கொண்டிருந்தல்.
9. ஒலிவாங்கியை நோக்கி உடம்பை வளைத்தல்.
10. தேவையின்றி குறிப்பு எழுதிய கலைத்தல்.
11. கழுத்து ரையை இறுக்குதல் விரல்களை நொடித்தல்.
12. திறப்பு கோர்வையை கையில் வைத்துக்கொண்டு சுழற்றுதல் அல்லது ஒலிக்கச் செய்தல்.
13. சலிப்பு / வெறுப்பை வெளிப்படுத்தல்.
14. மெல்லிய புன்னகை இன்றி முகத்தை கடுகடுத் தன்மையுடன் கொண்டிருத்தல்
#குரல்
1. தெளிவாக உரைத்தல், உச்சரிப்பு
2. உரையின் போதான சிறு இடைவெளிகள்
3. தாழ்ந்த மட்ட இலக்கணத்தை தவிர்த்தல்
4. ஒரே வகையான உணர்ச்சி வெளிப்பாடுகளை தவிர்த்தல்.
5. பேச்சின் வேகம் பேச்சின் உரப்பு என்பவற்றில் கவனமெடுத்தல்.
6. சொற்களை நிறப்பவும் தொடர்ச்சித் தன்மைக்காகவும் Umm, uh போன்ற சொற்கள் இடுவதை தவிர்த்தல்.
#காட்சித்_துணைக்கருவிகள்.
1. பின் வரிசையிலிருந்து வாசிக்கக்கூடிய எழுத்தின் அளவு.
2. ஆறு வரிகள் கொண்டிருத்தல்.
3. ஒரு வரியில் ஏழு சொற்களுக்கும் மேற்படாமல் இருத்தல்.
4. தெளிவாக இருத்தல்.
5. சிவப்பு நிறம், நிழற்றல் அதீத உயிரியக்கம் ( Animation) போன்றவற்றை தவிர்த்தல்
6. குழப்பமில்லாத பின்னணி( background)
#வினாக்களும்_விடைகளும்
1. வினாக்களுக்கு ஆயத்தமாய் இருத்தல் 2. ஒத்திகை பார்த்தல்.
3. விடைகளை சுருக்கமாக கையாளல்
4. எதிர்மறையான சொற்களையும் வினாக்களையும் தவிர்த்தல்.
5. அவையினருடன் தர்க்கித்தலை தவிர்த்தல்.
6. முழுமையாக வினாவை கேட்டல். விடையளிக்கும் முன்னர் சிறிய இடை வெளியை கொடுத்தல்.
7. வினா கேட்டவரை முதலில் நோக்கி பின்னர் ஏனையோரையும் நோக்குதல்
#நிறைவு_செய்தல்
1. அளிக்கையை நிறைவு செய்வதற்கான சமிக்ஞையை வழங்குதல்.
2. ஏற்கனவே செய்யப்பட்டவற்றைச் சுருக்கமாக பொழிப்புச் செய்தல்.
3. அளிக்கை மூலம் மேற்கொள்ளும் முடிவை வெளிப்படுத்தல்.
4. நன்றி சொல்வதன் மூலமும் கையேடுகளை வழங்குவதன் மூலமும் நிறைவு செய்தல்.
S.j.Aathy
Child psychology Teacher.
Mu/vidyananda college.