மாணவர்களே!
#ஆங்கிலப்பாட சித்தியை பெற தவறியவர்கள் மீண்டும் ஒருமுறை !!! முயன்று பாருங்கள் ஏனெனில்??
#க.பொ.த (சா/த) பெறுபேறுகள் பல்கலைக்கழகத்தெரிவில் தாக்கம் செலுத்தும்.
#கலைப்பிரிவு -11 கற்கைகள் மற்றும் வெவ்வேறு பாடப்பிரிவுகளிலிருந்தும் மாணவர்கள் தெரிவு செய்யக்கூடியவைகளில் 27 கற்கைகள்.
#வணிகப்பிரிவு – 06கற்கைகள் மற்றும் வெவ்வேறு பாடப்பிரிவுகளிலிருந்தும் தெரிவு செய்யக்கூடியவைகளில் 28 கற்கைகள்
#உயிரியல் பிரிவு – 27 கற்கைகள் மற்றும் வெவ்வேறு பாடப்பிரிவுகளிலிருந்தும் தெரிவு செய்யக்கூடியவைகளில் 32 கற்கைகள்
#கணிதப்பிரிவு – 11 கற்கைகள் மற்றும் வெவ்வேறு பாடப்பிரிவுகளினதும் கீழ் தெரிவு செய்யக்கூடியவை 39 கற்கைகள்
#பொறியியல் தொ.நு – 1 கற்கை மற்றும் வெவ்வேறு பாடப்பிரிவுகளினதும் கீழ் தெரிவு செய்யக்கூடியவை 18 கற்கைகள்
#உயிர்முறை தொ.நு – 1 கற்கை மற்றும் வெவ்வேறு பாடப்பிரிவுகளினதும் கீழ் தெரிவு செய்யக்கூடியவை 18 கற்கைகள்
#தகவல் தொடர்பாடல் தொ.நு – 1 கற்கை மற்றும் வெவ்வேறு பாடப்பிரிவுகளினதும் கீழ் தெரிவு செய்யக்கூடியவை 14 கற்கைகள்
இங்கு சராசரியாக ஒவ்வொரு பாடப்பிரிவினரும் தமது பிரிவுக்கு மேலதிகமாக 20 கற்கைகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.
இருப்பினும் விண்ணப்பிக்கக் கூடிய மொத்த பட்டக் கற்கைநெறிகளில் 20 கற்கைகளுக்கு க.பொ.த (சா/த) ஆங்கிலப் பெறுபேறு அவசியமானதொன்றாக கருதப்படுகின்றது. அவையாவன
1.Nursing
2.Pharmacy
3.Medical laboratory science
4.Radiography
5.Physiotherapy
6.Green technology
7.Quantity surveying
8.Town and country planning
9.Architecture
10.Fashion design and product development
11.Landscape Architecture
12.Design
13.Law
14.Facilities management
15.Information technology and management
16.Information systems
17.Information and communication technology
18.Food business management.
19.Communication studies (E.uni)
20.Arts(sp) – Co.uni
க.பொ.த (சா/த) ஆங்கில பாடப் பெறுபேற்றில் குறைந்தது திறமைச் சித்தியில்லையேல் உங்களால் மேலே குறிப்பிட்ட கற்கைகளுக்கு விண்ணப்பிக்க முடியாது.ஆதலால் க.பொ.த சாதாரன தர மாணவர்களே தங்களது ஆங்கில பாடப் பெறுபேற்றில் குறைந்தது திறமைச்சித்தியை (C) உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
இதுமட்டுமில்லாது மேலும் 20ற்கு மேற்பட்ட கற்கைநெறிகளின் விரிவுரைகள் ஆங்கில மொழி மூலம் மட்டுமே இடம்பெறும்.
இளமானிப் பட்டக் கற்கை முதல் கலாநிதிப் பட்டக் கற்கை வரை ஆங்கில மொழித் திறன் தேவைப்பாடு அதி உச்சமாகவே காணப்படுகின்றது. சமகாலத்தில் தமிழ் மாணவர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கான புலமைப் பரிசில்களை பெறுவதில் தோற்றுப்போவதற்கான மூல காரணமும் கூட ஆங்கிலம் தான்.
S.J.AATHY (B.A Hons)
Mu/Vidyananda college.
உசாத்துணை
2018/2019 கையேடு