பாடசாலை மாணவர்களுக்கான இணைப் பாதுகாப்பு தொடர்பான இலவசப் பாடநெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இணைவழியில் தொடரும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இப்பாடநெறியை கல்வி அமைச்சு, சேவ் த சில்ட்ரன், வேர்ட் விசன், லீட்ஸ் ற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகனை முடிவுக்கு கொண்டுவரல் ஆகிய அமைப்புக்கள் இணைந்து ஒழுங்கு செய்துள்ளன.
பாடநெறியை பூர்த்தி செய்யும் மாணவர்களுக்கு பெறுமதியான சான்றிதழ் வழங்கப்படும்.
13 வயதிற்கும் 18 வயதிற்கும் இடையப்பட்ட சிறுவர்கள் இந்த பாடநெறியில் பங்குபற்ற முடியும்.
உங்கள் பிள்ளைகள் இணையத்தில் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க முடியும் என அவர்களாகவே கண்டறிவதற்கு, ஈ-தக்சலாவில் இவ்இலவச செயல்முறையிலான பாடநெறியில் இணைவதற்கு அவர்களை ஊக்கமூட்டுங்கள்
1) இணைய உலகிற்கான அறிமுகம்
2) நீங்கள் ஒன்லைனில் தகவல்களை எவ்வாறு பாதுகாப்பாக பகிர்வீர்கள்?
3) இணைய அடாவடித்தனமும் அதன் விளைவுகளும்
4) நிகழ்நிலையிலுள்ள வெவ்வேறான அச்சுறுத்தல்கள் எவை? அவற்றை எவ்வாறு நீங்கள் கையாளலாம்
முதலான தலைப்புக்களை இந்த பாடநெறி கொண்டிருக்கும்
ஈ தக்ஸலாவ வுடன் இணைந்து இந்த இணையவழி பாதுகாப்பு தொடர்பான பாடநெறி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது
பாடநெறியைத் தொடர பின்வரும் இணைப்பில் செல்க