செவ்வாய் கிரகத்தை நோக்கி எனது பயணம் THE MARS GENERATION
இனிவரும் அனைத்து எதிர்கால தலைமுறையினரையும் வியப்பில் ஆழ்த்தப்போகும் நமது தலைமுறையின் நிகரற்ற சாதனை மனிதனை செவ்வாயில் குடியேற்றப்போகும் the mars Generation செயற்றிட்டமாகும். சில விண்வெளி வீரர்களை அல்ல…….. ஆயிரக்கணக்கான மனிதர்களை…………இனி வரலாறுகள் நம்மைப் போற்றும், செவ்வாயில் கால் வைத்த முதல் தலைமுறையினர் என்று. அமெரிக்காவின் NASA விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் செவ்வாய் கிரகத்திற்கான தமது பயணத்திற்கு உலக மக்களை தயார்படுத்தவும் விழிப்புணர்வூட்டவும் Astronaut Abigail Harrison ஆல் தலைமை தாங்கி நடாத்தப்படும் The Mars Generation அமைப்பின் இலங்கையின் தூதுவர் என்ற வகையில் எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
செவ்வாய்க்கிரகத்தை நோக்கி எமது பயணத்திற்கு முன் THE MARS GENERATION அமைப்புடன் ஏற்பட்ட தொடர்பை விளக்க விரும்புகின்றேன். தமது வாழ்க்கையை முடித்துக்கொண்டு மரணப்படுக்கையில் இருந்த வயோதிபர்களிடம் “ வாழ்க்கையில் எந்தவொரு விடயத்திற்காக
கவலைப்படுகின்றீர்கள்?” என்று எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 99 வீதமானோர் கூறியது “ எனது கனவை அடையாமல் ஒரு அடையாளத்தை உலகத்திற்கு விட்டுச்செல்லாமல் வாழ்க்கைப்பயணத்தை முடித்து கொள்கின்றோம்” என்பதே.உங்கள் கனவுகள் எவ்வளவு பெரிதாக வேண்டுமானாலும் அமையலாம்.இன்று நீங்கள் எங்கே உள்ளீர்கள்…. உங்கள் கனவு எங்கே என்பதை சிந்தித்து தினமும் திட்டமிட்டு செயலாற்றுங்கள். சமுதாயத்தில் பெண்களின் கனவுகளிற்கே தடைகள் அதிகம். ஒரு பெண்ணின் சாதனை ஒரு தலைமுறையின் சாதனை ஆகும். மற்றவர்களின் மட்டுப்படுத்தப்பட்ட சிந்தனைகளால் உங்கள் ஆற்றலை மட்டுப்படுத்தாதீர்கள். இனியும் நமது கனவுகள் கலைய வேண்டாம். விண்வெளி வீரராக வேண்டுமென்ற மிகப்பெரிய கனவைத்தவிர அதற்கான வழிகாட்டுதலோ உயர்கல்வி வாய்ப்போ இல்லாத சமுதாயத்தில் இருந்து வந்த எனக்கு எனது விண்கல் கண்டுபிடிப்பிற்கான அங்கீகாரமும் NASA வில் பணிபுரியும் பல விஞ்ஞானிகளின் நேரடி இணைய வழிகாட்டுதல்களும் THE MARS GENERATION அமைப்பின் “ Train Like A Martian “ பயிற்றுவிப்பாளர்களின் வழிகாட்டுதல்களும் பல மாற்றங்களை ஏற்படுத்தின. இவ்வாறு விண்வெளி விஞ்ஞானத்தில் பல சாதனைகளை மேற்கொள்ளும் இளைஞர்களின் படையே THE MARS GENERATION …..DREAM BIG ! ACT BIG ! INSPIRE OTHERS !
கவலைப்படுகின்றீர்கள்?” என்று எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 99 வீதமானோர் கூறியது “ எனது கனவை அடையாமல் ஒரு அடையாளத்தை உலகத்திற்கு விட்டுச்செல்லாமல் வாழ்க்கைப்பயணத்தை முடித்து கொள்கின்றோம்” என்பதே.உங்கள் கனவுகள் எவ்வளவு பெரிதாக வேண்டுமானாலும் அமையலாம்.இன்று நீங்கள் எங்கே உள்ளீர்கள்…. உங்கள் கனவு எங்கே என்பதை சிந்தித்து தினமும் திட்டமிட்டு செயலாற்றுங்கள். சமுதாயத்தில் பெண்களின் கனவுகளிற்கே தடைகள் அதிகம். ஒரு பெண்ணின் சாதனை ஒரு தலைமுறையின் சாதனை ஆகும். மற்றவர்களின் மட்டுப்படுத்தப்பட்ட சிந்தனைகளால் உங்கள் ஆற்றலை மட்டுப்படுத்தாதீர்கள். இனியும் நமது கனவுகள் கலைய வேண்டாம். விண்வெளி வீரராக வேண்டுமென்ற மிகப்பெரிய கனவைத்தவிர அதற்கான வழிகாட்டுதலோ உயர்கல்வி வாய்ப்போ இல்லாத சமுதாயத்தில் இருந்து வந்த எனக்கு எனது விண்கல் கண்டுபிடிப்பிற்கான அங்கீகாரமும் NASA வில் பணிபுரியும் பல விஞ்ஞானிகளின் நேரடி இணைய வழிகாட்டுதல்களும் THE MARS GENERATION அமைப்பின் “ Train Like A Martian “ பயிற்றுவிப்பாளர்களின் வழிகாட்டுதல்களும் பல மாற்றங்களை ஏற்படுத்தின. இவ்வாறு விண்வெளி விஞ்ஞானத்தில் பல சாதனைகளை மேற்கொள்ளும் இளைஞர்களின் படையே THE MARS GENERATION …..DREAM BIG ! ACT BIG ! INSPIRE OTHERS !
இக்கட்டுரையை படித்துக்கொண்டு இருக்கும் நீங்களோ அல்லது உங்கள் சந்ததியினரோ செவ்வாய் கிரகத்தில் குடியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள்.நான் கூறும் விடயங்கள் வினோதமாகத் தோன்றலாம் ஆனால் உண்மை நிலை இதுவே. 2 ம் உலகத்தை நோக்கி ஆய்வுபயணத்தை மேற்கொள்ளும் தலைமுறையினரும் நாமே. நமது சொந்த உலகத்தை அழித்துக்கொண்டிருக்கும் சுயநலவாதிகளும் நாமே . “ காலநிலை மாற்றம் “ சிறியதொரு சொல் தான் ஆனால் உங்களையும் என்னையும் இந்த உலகத்தையும் அழிக்கப்போகும் கொடிய சீற்றம் .இதை வாசிக்கும் 50 வயதிலும் கூடிய நபராக நீங்கள் இருந்தால் வயோதிபத்தால் நீங்கள் அழியக்கூடும். ஆனால் நானோ எனது தலைமுறையினரோ காலநிலை மாற்றத்தால் அழியப்போகின்றோம். காலநிலை மாற்றத்தின் கொடிய விளைவுகளை அனுபவிப்பது எனது தலைமுறையினரே. எனது சிறுவயதில் அறை வெப்பநிலை 30°c ஐ தாண்டாது ஆனால் நான் இதை எழுதும் போது எனது அறை வெப்பநிலை 39°c ஆகும். சில பில்லியன் வருடங்களுக்கு முன்பு நமது பூமி போலவே செவ்வாய் கிரகமும் வளிமண்டலம், திரவ நீர் என்பவற்றை கொண்டிருந்தது. ஆனால் இன்றோ…….96% காபனீரொட்சைட்டாலான வளிமண்டலத்தைக்கொண்ட பாலைவனம்……..இதற்குக் காரணம் செவ்வாயில் ஏற்பட்ட காலநிலை மாற்றமே ஆகும்.முன்னொரு காலத்தில் செவ்வாயிலும் உயிர்கள் வாழ்ந்து அழிந்திருக்கலாம். இப்போது விளங்கியிருக்கும்……… நாம் அனுபவித்துவரும் காலநிலை மாற்றமும் எதிர்காலத்தில் நமது மனிதவர்க்கத்தை அழிக்கக்கூடிய ஆற்றலுடையது என்று . பூமியின் அந்தாட்டிக் பகுதியில் 1000 மைல் ஆழத்தில் இருந்த பனிக்கட்டியில் அகப்பட்ட வளிக்குமிழிகளின் மூலமே ஆதி வளிமண்டலம் பற்றிய அறிவு எட்டியது.அதேபோல் செவ்வாயிலும் இதே முறை மூலம் மனிதர்களை அனுப்பி செவ்வாயில் நிகழ்ந்த காலநிலை மாற்றத்தின் வரலாறுகளை ஆராய்வதன் மூலம் நமது உலகத்தை காலநிலை மாற்றத்திலிருந்து பாதுகாக்கலாம். இதுவே செவ்வாய் கிரகத்திற்கான ஆய்வுப்பயணத்திற்கு உலக விஞ்ஞானிகள் முன்வைக்கும் 150 காரணங்களுள் முதன்மையானது.
செவ்வாயில் உயிரைக் கண்டுபிடிக்க NASA விஞ்ஞானிகள் 20 வருடங்களுக்கு மேலாக தமது ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். என்றாவது யோசித்துள்ளோமா ? வேற்றுக்கிரகங்களில் உயிரைக் கண்டு பிடிப்பதால் நமக்கு என்ன நன்மை என்று ? ………..விஞ்ஞானத்தின் அனைத்து கண்டுபிடிப்புகளும் மனித வர்க்கத்தின் நன்மைக்கே…….பூமியில் தோன்றிய அனைத்து உயிர்களுக்கும் எனக்கும் உங்களுக்கும் நீங்கள் வளர்க்கும் செல்ல நாய்க்குட்டியிற்கும் மூலக்கூற்றியல் அடிப்படை ஒன்றே.நாம் அனைவரும் ஒரே ஆதி உயிரிலிருந்தே கூர்ப்படைந்து வந்துள்ளோம். மூலக்கூறுகளின் ஒழுங்கமைப்பும் எண்ணிக்கைகளுமே பூமியில் அங்கிகளுக்கிடையே வேறுபடுகின்றது. ஆனால் செவ்வாயில் நாம் உயிரைக் கண்டுபிடித்தால் அதற்கும் நம்மைப் போல் DNA ,அமினோ அமிலமாகக் காணப்படாது. செவ்வாயின் உயிரி தனித்துவமான மூலக்கூற்று அடிப்படையைக் கொண்ட அங்கியாக இருக்கும். இதிலிருந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு கண்டுபிடிக்கப்பட்ட புதிய உயிர் மூலக்கூறுகளிலிருந்து பூமியில் மனிதரின் நோய்களைக் குணப்படுத்த மருந்துகளைக் கண்டுபிடிக்கமுடிவதுடன் மருத்துவம் மற்றும் உயிர் இரசாயன துறையில் பாரிய மாற்றங்கள் உருவாகும்.எனவே செவ்வாய் கிரகத்திற்கான ஆய்வுப்பயணமானது புவியையும் மனித குலத்தையும் காப்பாற்றும் மிக உன்னதமான திட்டமாகும் . விண்வெளிக்கான ஒவ்வொரு ஆய்வுப்பயணமும் விண்வெளியை மட்டும் பற்றியது அல்ல. புவியின் மேன்மைக்கே.
ஒரே ஒரு விண்கல் நம் உலகத்தை அழித்துவிட முடியும். பல ஆண்டுகளுக்கு முன்பு புவியில் ஆட்சியாக இருந்த டைனோசர் இனத்தை அடியோடு அழித்த விண்கல் நம் இனத்தையும் உருக்குலைக்க முடியும். நான் அவதானித்து கண்டுபிடித்து பெயரிட்ட SPW0101 என்ற விண்கல் சர்வதேச விண்கல் ஆராய்ச்சி மையத்தாலும் NASA வாலும் ஏற்றுக்கொண்ட இன்று இக்கட்டுரையை எழுதுவதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். புவியை நோக்கி ஆயிரக்கணக்கான விண்கற்களின் அச்சுறுத்தல்கள் ஏற்பட்ட வண்ணமே உள்ளது . சாதாரணமாக ஒரு விண்கல்லின் தாக்கம் அணுகுண்டு வெடிப்பை விட 30 மடங்கு தாக்கத்தை ஏற்படுத்தும். மற்றும் வைரசுக்களாலும் மனித இனத்திற்கு அழிவு ஏற்பட கூடும் என விஞ்ஞானிகள் எதிர்வுகூறியுள்ளனர். மற்றும் காலநிலை மாற்றத்தால் அழிந்து கொண்டிருக்கின்றோம். ஆய்வுப்பயணத்தை மேற்கொள்ளும் ஆவல் நமது மரபணுவிலேயே உண்டு. ஆபிரிக்காவில் தோன்றிய நாம் உலகம் முழுவதும் வியாபித்து தற்போதைய வளர்ச்சியை அடைந்துள்ளோம். விண்வெளி ஆய்வுப்பயணம் ஆடம்பரம் என்று எதிர்க்கும் மனிதரும் உள்ள சமுதாயத்தில் 2 ம் உலகத்திற்கான தேடுதல் பயணத்தின் கட்டாயதில் உள்ளோம். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மாற்றத்தை ஏற்றுக்கொள்ளவே வேண்டும். இந்த பூமியின் அழிவு நமது அழிவாக அமையக்கூடாது.நாமே The Mars Generation.
நாம் செல்லவிருக்கும் உலகத்தைப் பற்றிய ஒரு சிறிய குறிப்பை நோக்குவோம். இது நமது பூமியைவிட சிறியது. பூமியின் வளிமண்டலத்தை விட 100 மடங்கு மெல்லிய நம்மால் சுவாசிக்க முடியாத 96% காபனீரொட்சைட்டைக் கொண்ட வளிமண்டலத்தைக் கொண்டது. மேற்பரப்பு வெப்பநிலை -81°F ஆகும்.இது பூமியின் ஈர்ப்புவிசையின் 38% ஐக் கொண்டது. ஒரு புவிநாளைவிட அதிகமாக 39 நிமிடங்கள் ஒரு செவ்வாய் நாள் கொண்டது.
இனி நமது 2 ம் உலகத்திற்குச் செல்லத் தயாராகுவோம். 1950 களில் விஞ்ஞானம் நிலவில் காலை வைத்தது.இதற்கு APOLLO விண்வெளி வீரர்களுக்கு 3 நாட்கள் தேவைப்பட்டது. ஆனால் நாம் செல்லவிருப்பது அதை விட 1000 மடங்கு தூரத்தில் இருக்கும் செவ்வாய் கிரகத்திற்கு….. இதற்கு சுமார் 8 மாதங்கள் செல்லும்.புவியின் ஒழுக்கில் புவியும் செவ்வாயின் ஒழுக்கில் செவ்வாயும் ஒன்றையொன்று நோக்கியவாறு அமையப்பெறும் தருணம் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்கின்றது. இதன்போது செவ்வாய்ப்பயணத்திற்காக வடிவமைக்கப்பட்ட Space launch System விண்ணில் ஏவப்படும். இம்மிக நீண்ட பயணத்தின்போது உயிர்வாழத் தேவையான நீரைச் சுமந்து வருவது என்பது இயலாத காரியமாகும். எனவே செவ்வாயில் வெற்றிகரமாக குடியேற செவ்வாயில் திரவநீரை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இதுவரை NASA வால் அனுப்பப்பட்ட Rover கள் செவ்வாயில் துருவப் பகுதிகளிலும் பள்ளத்தாக்குகளிலும் நிலத்தடியிலும் உறைநிலை நீர் உள்ளதையும் செவ்வாய் மணலில் 60% நீர் உள்ளதையும் கண்டறிந்துள்ளன. செவ்வாயில் குடியேறவிருக்கும் முதல் தலைமுறை விண்வெளி வீரர்கள் தமது 80% மான உணவை புவியிலிருந்து உலர்த்தப்பட்ட உணவாகவே கொண்டு செல்வார்கள்.மிகுதி 20% உணவு செவ்வாயில் பயிர்ச்செய்கை மேற்கொண்டு பெறப்படும்.செவ்வாயில் தேவையான அளவு திரவ நீர் பெறப்பட்டவுடன் பயிர்ச்செய்கையின் அளவு கூட்டப்படும். செவ்வாயில் விண்வெளி வீரர்களின் உடை வானியல் கதிர்ப்புகளை எதிர்கொள்ளக்கூடிய வகையிலும் செவ்வாயின் மிகமெல்லிய வளிமண்டலத்தினால் ஏற்படுத்தப்படும் மிகச்சிறிய வளிமண்டல அமுக்கத்திலிருந்து பாதுகாக்க செயற்கை அமுக்கம் வழங்கக்கூடிய வகையிலும் குளிரைத் தாங்கக் கூடிய வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
NASA தனது 2020 ரோவரில் உலகமக்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட chip ஐ செவ்வாய்க்கு அனுப்ப பெயர்களை விண்ணப்பிக்க கோரியிருந்தது. இதே Rover இல் Maxie எனும் உபகரணமும் இணைக்கப்பட்டு உபகரணத்தை செவ்வாயில் பரீட்சித்துப் பார்ப்பதற்காக செல்லவிருக்கின்றது.இந்த உபகரணம் செவ்வாயின் வளிமண்டலத்திலிருந்து வாயுக்களை உறிஞ்சி ஒட்சிசனாக மாற்றியமைக்கக்கூடியது. இதுவே முதல்தலைமுறை Martian களுக்கு தேவையான ஒட்சிசனை வழங்கும். முதற்கட்டமாக செவ்வாயில் தரையிறங்கிய மனிதன் செயற்கை அமுக்கமளிக்கப்பட்ட உறையுளில் தங்குவான். NASA வின் ரோவரால் செவ்வாயின் மணல், கட்டிடக்கற்களை செய்யக்கூடிய திறமை வாய்ந்தது எனக் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே இம்மணலுடன் பல்பகுதிய பிளாஸ்டிக்கை கலந்து நுண்ணலைக்கனலியில் இட்டு தடிப்பான சுவர்களையுடைய கட்டடங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் செவ்வாயில் தற்காலிகமாக வாழ வழிகோலும் முறை எனவே . செவ்வாயில் குடியேறுவதன் நிரந்தர நோக்கம் என்ன? செவ்வாய் கிரகத்தை நமது புவியைப் போல் மாற்றியமைக்க வேண்டும். இது Re-engineering Mars அவ்லதுterraforming Mars என அழைக்கப்படும்.
நமது தலைமுறையினர் செவ்வாயை மாற்றியமைக்கச் செய்யவேண்டிய முதல்படிமுறை மிகவும் பெரிய சூரிய தெறியியை வட,தென் துருவங்களை நோக்கி சூரிய ஒளியை தெறிக்கவிடுமாறு விண்வெளியில் நிலைநிறுத்த வேண்டும்.இதனால் வெப்பத்தைப் பெற்ற உறைநிலை காபனீரொட்சைட்டும் நீரும் ஆவியாகி வளிமண்டலத்திற்குச் செல்ல தடிப்பான வளிமண்டலம் உருவாகும்.தடிப்பான வளிமண்டலம் செவ்வாயில் மனித வாழ்க்கையைச் சாதகமாக்கும். வெளியேறும் காபனீரொட்சைட் நீராவி என்பன பச்சைவீட்டு வாயுக்கள் என்பதால் செவ்வாயில் வளிமண்டல வெப்பநிலை அதிகரிக்கும்.இதனால் உறைநிலைநீர் திரவ நீர் ஆகும். வளிமண்டலத்தின் நீராவி ஒடுங்கி மழைவீழ்ச்சி நடைபெறும். தடிப்பான வளிமண்டலத்தினால் வானியல் கதிர்ப்புக்களிலிருந்தது பாதுகாப்பும். மனிதன் செவ்வாயில் உயிர்வாழத் தேவையான அமுக்கமும் கிடைக்கும். Terraforming இன் இரண்டாவது படிமுறை செவ்வாயில் ஒளித்தொகுப்பை மேற்கொள்ளும் தாவரங்கள் மூலம் வளிமண்டலத்திலிருக்கும் காபனீரொட்சைட்டை ஒட்சிசனாக மாற்றுதல். மூன்றாம் படிமுறை இவ்வாறு உருவாகும் ஒட்சிசனின் ஒருபகுதியை Ozone ஆக மாற்றி சூரியக்கதிர்ப்புகளிலிருந்து பாதுகாத்தல்.இதுவே செவ்வாயை பூமி போல் மாற்றும் திட்டமாகும்.
இவ்வாறு முழுமையாக மாற்றியமைக்க சுமார் 1000 வருடங்கள் எடுப்பினும் மனிதர்களாகிய நாம் இலகுவாக இசைவாக்கமடைய கூடியவர்கள். காலப்போக்கில் நமது மரபணுவும் செவ்வாய் கிரகத்திற்கேற்றவாறு இயற்கையாக மாறும்.இதுவரை செவ்வாய்க்கிரகம் ரோபோக்களால் மட்டுமே ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகின்றது.ஆனால் ரோவரால் 6 மாதத்தில் செய்யக்கூடிய விடயத்தை மனிதனை செவ்வாய்க்கு அனுப்பினால் 2 மணித்துளிகளில் செய்து முடித்துவிட முடியும். NASA வின் OPPORTUNITY ROVER 26 மைல்களைக்கடக்க 11 வருடங்கள் ஆனது. விஞ்ஞானத்தின் ஒவ்வொரு முன்னேற்றமும் மனித இனத்தின் நிலையான வாழ்விற்கே.
பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு நாம் கொடுக்கும் ஆதரவின் ஒரு பகுதியையாவது நம் நாட்டு விஞ்ஞான வளர்ச்சிக்குக் கொடுப்போம் . இலங்கையில் உள்ள எத்தனை பேருக்கு Taprobane 1.0 ஐப்பற்றி அறிவீர்கள்?..
இலங்கையின் முதல் Mars rover …. முற்றுமுழுதாக இலங்கை மாணவர்களால் உருவாக்கப்பட்ட ரோவர். இதை உருவாக்கிய SEDS SRILANKA அமைப்புடன் இணைந்து பணியாற்ற பெருமிதம் கொள்கிறேன்.விண்வெளி ஆராய்ச்சிக்கு எதிர்காலமில்லையேல் முழு மனித வர்க்கத்திற்குமே எதிர்காலமில்லை என்கிறது தற்கால விஞ்ஞானம்…எல்லைகள் தாண்டுவோம். பூமியின் முடிவு எங்கள் இனத்தின் முடிவு அல்ல. “ வானமே எல்லை” என்பதையும் நம் தலைமுறை பொய்யாக்கும். நாமே THE MARS GENERATION