தேசிய கல்வி நிறுவகத்தின் கல்விமாணி 2013/2015 கல்வியாண்டின் இறுதிப் பரீட்சைப் பெறுபேறுகள் கடந்த வாரம் வெளியானது.
பரீட்சார்த்திகளுக்கு பெறுபேறுகள் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எனினும் தனிப்பட்ட ரீதியாக தேசிய கல்வி நிறுவகத்திற்கு தொலைபேசி அழைப்புக்களை எடுத்து பெறுபேற்றை விசாரிக்க வேண்டாம் என உரிய அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தள்ளனர்
கல்வி மாணி இறுதி பெறுபேறு அடுத்த மாதம் நடைபெறும் நிறுவக சபையில் அங்கீகரிக்கப்பட்டதும் வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.