தொழில்நுட்பவியல் நிறுவகம் – மொறட்டுவைப் பல்கலைக்கழகம்
தொழில்நுட்பவியல் தேசிய டிப்ளோமா கற்கை நெறிக்கான அனுமதி – 2019/ 2020
தொழில்நுட்பவியல் நிறுவகம், மொறட்டுவைப் பல்கலைக் கழகத்தினால் நடாத்தப்படும் மூன்று (03) வருடகால முழுநேர தொழில்நுட்பவியல் டிப்ளோமா கற்கை நெறிக்குத் தெரிவூசெய்வதற்காக தகுதிவாய்ந்த விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
இக்கற்கை நெறியானது, தியகம, ஹோமாகமவில் அமைந்துள்ள தொழில்
நுட்பவியல் நிறுவகம், மொறட்டுவைப் பல்கலைக்கழக வளாகத்தில் நடாத்தப்படும்.
1. பொதுவானவை.- தொழில்நுட்பவியல் தேசிய டிப்ளோமா கற்கைநெறியானது, இரண்டு வருட முழுநேர கற்றலையூம், ஒரு வருட தொழிற்பயிற்சியையூம் உள்ளடக்கியது. இதன் கற்கைமொழி ஆங்கிலம் ஆகும். கற்கைநெறிகள்
பின்வரும் கற்கைத்துறைகளில் வழங்கப்படுகின்றது :-
(அ) கடல்சார் கற்கைநெறி (வகை i) :
(i) கடல்சார் பொறியியல் தொழில்நுட்பம்
(ii) கப்பற்றுறை கல்வியூம் தொழில்நுட்பமும்.
(ஆ) ஏனைய கற்கைநெறிகள் (வகை ii) :
(i) இரசாயன பொறியியல் தொழில்நுட்பம்
(ii) குடிசார் பொறியியல் தொழில்நுட்பம்
(iii) மின்சார பொறியியல் தொழில்நுட்பம்
(iv) இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் தொழில்நுட்பம்
(v) தகவல் தொழில்நுட்பம் @
(vi) இயந்திரவியல் பொறியியல் தொழில்நுட்பம் @
(vii) பல்பகுதிய தொழில்நுட்பம் @
(viii) புடவை மற்றும் ஆடைத் தொழில்நுட்பம்.
2. தகைமைகள் :
2.1 வயது மற்றும் தகைமைகள்:
(அ) விண்ணப்பதாரிகள் 31.12.2018 ஆந் திகதி யன்று 24 வயதிற்குக் குறைந்தவர்களாக இருத்தல் வேண்டும்
(ஆ) 31.12.2018 இல் 20 வயதிற்குக் குறைந்த விண்ணப்பதாரர்களுக்குக் கப்பற்துறைக் கல்வியூம் தொழில்நுட்பமும், கடல்சார் பொறியியல் தொழில்நுட்பம் ஆகிய பாடநெறிகளுக் கான அனுமதிக்கு முன்னுரிமை வழங்கப்படும். கடல்சார் கற்கைநெறி (வகை 1) இற்கான விண்ணப்பதாரிகள் மருத்துவ பரிசோதனை மற்றும் நேர்முகப் பரீட்சை என்பவற்றுக்கு விசேடமாக தோற்றுதல் வேண்டும்
(இ) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ்வரும் ஏதாவது பல்கலைக்கழகத்திலோ (இலங்கை திறந்த பல்கலைக்கழகம் தவிர்ந்த) அல்லது உயர் கல்வி அமைச்சின் கீழ்வரும் உயர்கல்வி நிறுவனத்திலோ முழுநேர கற்கை நெறிக்கு பதிவூசெய்து கொண்டுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள் ஆவர்.
2.2 கல்வித் தகைமைகள்.-
(அ) விண்ணப்பதாரிகள் க. பொ. த. (உ. த.) பரீட்சையில் கீழ்க்குறிப்பிட்டுள்ள பாடங்களில் மூன்றில் (03) சித்திபெற்றிருத்தல் வேண்டும் :-
(i) பௌதிகவியல்
(ii) இரசாயனவியல்
(iii) இணைந்த கணிதம்
(iv) உயர் கணிதம்
அத்துடன்இ இலங்கை பரீட்சைகள் ஆணையாளரினால் 2016 அல்லது 2017 அல்லது 2018 ஆம் ஆண்டுகளில் நடாத்தப்பட்ட க. பொ. த. (உ. த.) பரீட்சைகளில் ஒன்றில் ஒரே அமர்வில் சித்தியடைந்திருக்க
வேண்டும்.
(ஆ) கடல்சார் கற்கைநெறிகள் (வகை 1) இற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகள் க.பொ.த. (சா. த.) பரீட்சையில் ஆங்கில மொழி பாடத்தில் திறமைச் சித்தி (C pass ) பெற்றிருக்க வேண்டும்:-
3. தெரிவூ முறைமை.-
3.1 கற்கைநெறிக்கான அனுமதி.-
அனுமதிக்கான தெரிவானது க. பொ. த. (உ. த.) பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையிலும், மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தின் தொழில் நுட்பவியல் நிறுவனத்தினரால் நடாத்தவிருக்கும் தகுதிகாண் பரீட்சை முடிவூகளிலும் தங்கியிருக்கும்.
தகுதிகாண் பரீட்சையில் சித்தி எய்தியவர்களில்இ க. பொ. த. (உ.த.) பரீட்சையில் அதிகூடிய பெறுபேற்றையூடையவர்கள், திறமை வரிசையில் தெரிவூ செய்யப்படுவர் அதாவது இசற் – மதிப்பீட்டு
முறை அடிப்படையாகக் கொள்ளப்படும். தெரிவூ செய்யப்படுபவர்களில், 40 % தினர் திறமை அடிப்படையிலும் 6% தினர் மாவட்ட ஒதுக்கீடு முறை அடிப்படையிலும் தெரிவூ செய்யப்படுவர்.
3.2 கற்கைத்துறை
கற்கைத் துறைகளுக்கு மாணவர்களைத் தெரிவூ செய்கையில் தகுதிகாண் பரீட்சைப் பெறுபேறு, விண்ணப்பதாரியின் கற்கைத்துறை தெரிவூ வரிசை என்பன இணைந்து கருத்திற் கொள்ளப்படும்.
விண்ணப்பம் மற்றும் மேலதிக விபரங்கள்