மாணவ மாணவியரின் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பத்தின் போது அனுமதிக்கு அபேட்சகரின் மாவட்டத்தினை தீர்மானிப்பதற்கு இறுதி மூன்று வருட காலப்பகுதியில் கல்வி கற்கப் பதிவு செய்திருந்த பாடசாலைகள் தொடர்பான ஆதாரங்கள் கட்டாயமாக சமர்பிக்கபட வேண்டும்.
இந் நோக்கத்திற்காக பாடசாலை பரீட்சார்த்திகள் வழங்கப்படுகின்ற தகவல்கள் பாடசாலைப் பதிவேடுகளின் அடிப்படையில் சரியானவை என்பதை மாணவரின் விண்ணப்ப படிவத்தில் அவர்களது தற்போதைய பாடசாலை அதிபர் உறுதிப்படுத்தல் வேண்டும் மேலும் வெளிவாரி மாணவர்களால் வழங்கப்படும் தகவல்கள் பாடசாலை பத்திரத்தின் அடிப்படையில் சரியானவை என சமாதான நீதிவான் ஒருவர் உறுதிப்படுத்தல் வேண்டும்.
அதன் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதி பெறுவதற்காக கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைபெற்ற மாதத்திற்கு உடனடியான முந்திய மாதத்தின் கடைசி நாளன்று முடிவடையும் மூன்று வருட காலம் பின்னோக்கி கணக்கிடப்படும்.
உதாரணமாக உயர் தரப்பரீட்சை நடந்தது ஆகஸ்ட் மாதம் எனில் முன்னைய மூன்று வருடங்களைக் கணிப்பது அவ்வருட ஜூலை 31 இலிருந்து பின்நோக்கி ஆகும்.
அவ்வாறு கருத்தில் கொள்ளப்படும் மூன்று வருட காலப் பகுதியினுள் குறைந்தது ஒரு வருடம் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு பரீட்சார்த்தி கல்வி கற்ற பாடசாலை அமைந்துள்ள மாவட்டமே அவரது பல்கலைக்கழக அனுமதிக்கான மாவட்டமாக கருதப்படும்.
மேற்குறிப்பிட்ட மூன்று வருட காலப்பகுதிக்குள் ஒரு பரீட்சார்த்தி ஒன்றுக்கும் மேற்பட்ட பாடசாலைகளில் கல்வி கற்று இருப்பின் குறிப்பிட்ட மாணவன் அதிக நாட்கள் கல்வி கற்ற பாடசாலை அமைந்துள்ள மாவட்டம் அவரது பல்கலைக்கழக அனுமதிக்கான மாவட்டமாக கருதப்படும். எவ்வாறாயினும் இக்காலப்பகுதி கட்டாயமாக குறைந்தது ஒரு வருடம் அல்லது அதற்கு மேற்பட்டிருத்தல் வேண்டும்.
உதாரணமாக ஒரு மாணவன் ஒரு மாவட்டத்தில் அமைந்துள்ள பாடசாலையில் ஒருவரிடமும் மூன்று மாதங்களும் ஒரு மாவட்டத்தில் அமைந்துள்ள பாடசாலையில் எஞ்சிய ஒரு வருடமும் 9 மாதமும் கல்வி கற்று இருந்தால் அவரது பல்கலைக்கழக அனுமதிக்காக ஒரு வருடமும் ஒன்பது மாதமும் கல்வி கற்ற பாடசாலை அமைந்துள்ள மாவட்டமே கருத்தில் கொள்ளப்படும்.
எவ்வாறாயினும் எந்தவொரு மாணவரும் ஒரு மாவட்டத்தில் அமைந்துள்ள பாடசாலையில் 11 மாதங்களும் வேறு மாவட்டத்தில் அமைந்துள்ள இரு வேறு பாடசாலைகளில் முறையே ஒன்பது பத்து மாதங்களும் கற்று இருப்பார் எனக் கருதப்பட்டால் இரண்டாவது மாவட்டமே பல்கலைக்கழக அனுமதிக்கான பரீட்சார்த்தியின் மாவட்டமாக கருதப்படும் ஏனெனில் இரண்டாவது மாவட்டத்தில் கற்ற மொத்த காலம் 1 வருடமும் 7 மாதங்களுமாகும். இது முதலாவது மாவட்டத்தில் கற்ற காலத்தை அதாவது 11 மாதங்களை விட அதிகமாகவும் அதேவேளை மொத்தமாக கல்வி கற்ற காலப்பகுதி ஒரு வருடத்தை விட அதிகமாகவும் இருப்பதனால் ஆகும்.
அக்காலப்பகுதியில் பரீட்சார்த்தி எந்த ஒரு மாவட்டத்தில் இருந்தும் ஒரு வருடத்திற்கும் குறைவான காலமே பாடசாலையில் கல்வி கற்றிருந்தால் அல்லது அக்காலப் பகுதியில் பரீட் சார்த்தி எந்தவொரு பாடசாலையிலும் உயர்தரவகுப்பில் பதிவுசெய்து கல்வி கற்கவில்லையாயின் பரீட்சார்த்தியின் நிரந்தர வதிவிடம் அமைந்துள்ள மாவட்டம் பல்கலைக்கழக அனுமதிக்கான மாவட்டமாக கருதப்படும் விண்ணப்பதாரியின் நிரந்தர வதிவிடத்தை உறுதி செய்வதற்காக பின்வரும் இரண்டு ஆவணங்கள் விண்ணப்பத்துடன் கட்டாயம் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
1.பாடசாலைகள் விடுகைப் பத்திரத்தின் ( Original of the school leaving certificate) அல்லது மாணவர் பதிவு அறிக்கையின் ( original of the pupil’s record sheet) மூலப்பிரதி.
2. பிரதேச செயலாளரினால் மேலொப்பமிடப்பட்டு முத்திரையிடப்பட்ட கிராம சேவகரின் சான்றிதழின் மூலப்பிரதி.
குறிப்பு.
தனிப்பட்ட பரீட்சார்த்திகள் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்ப படிவத்துடன் அவர்களது பாடசாலை விடுகைப்பத்திரத்தின் மூலப்பிரதியினை சமர்ப்பிப்பது அத்தியாவசியமாகும்.
உசாத்துணை
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இலங்கை.
2019/2020 கையேடு..
S.J.Aathy.
Mu/ vidyananda college.