புதிய கல்வியாண்டில் புதிதாக இரண்டு பாடநெறிகளை அறிமுகப்படுத்த உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பேராதனைப் பல்கலைக்கழத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் இந்த இரண்டுபுதிய பாடநெறிகளும் சமூக வாண்மைத்துவம் மற்றும் புவியியல் தகவல் விஞ்ஞானம் ஆகிய பெயர்கள் கொண்டு அழைக்கப்படுகின்றன.
ஒரு பாடநெறிக்கு 50 மாணவர்கள் வீதம் 2018/2019 கல்வி ஆண்டில் 100 மாணவர்கள் மேலதிகமாக உள்ளீர்க்கப்படவுள்ளனர்.
இம்முறை 31158 பேர் பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்க்கபடவுள்ளதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.