ஜயவர்தன புர பல்கலைக்கழகத்திற்கு பொறியியல் பீடமும், களனி, சப்ரகமுவ மற்றும் ரஜரட்ட பல்கலைக்கழகங்களுக்கு தொழிநுட்ப பீடங்களும் அமைப்பதற்கான பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதனடிப்படையில் ஒரு வருடத்தில் 830 மாணவர்கள் உயர் கல்விக்காக மேலதிகமாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
இவற்றுக்கான 26400 மில்லியன் ரூபா முதலீட்டுக்கான அனுமதியை உயர் கல்வி அமைச்சர் ரவுப் ஹக்கீம் அமைச்சரவையிடம் சமர்ப்பித்திருந்தார். குறித்த திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.