கல்வித்தறை சார்தவர்கள் தமது வௌிநாட்டுப் பாடநெறிகளை தொடர்வதற்கான ஒழுங்குவிதிகளை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளர் ( பாடசாலை நடவடிக்கைகள்) 2019/01/14 ஆம் திகதிய ED/09/40/04/06 எனும் இலக்கத்தைக் கொண்ட கடிதத்தினூடாக கல்வி அமைச்சின் அனைத்து நிறுவனங்களினதும ்தலைவர்களுக்கு இவ்வறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதன் படி
வௌிநாட்டு பாடநெறி ஒன்றைத் தொடர்வதற்கான சம்பளத்துடனான கற்றல் விடுமுறை, குறித்த பாடநெறி ஊழியரின் கடமைக்கூறுடன் தொடர்புடையதாக காணப்பட்டால் மாத்திரமே அனுமதிக்கப்படும். குறிப்பிட்ட ஊழியரின் சேவையோடு பாடநெறி தொடர்புற்றதாக என்பதை நிறுவனத்தின் தலைவரே தீர்மானிக்க முடியும். இந்த பாடநெறிகளுக்கு விண்ணப்பிக்க முன்னர் கல்வி அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோரின் முன் அனுமதி பெறப்பட்டதன் பின்னரே வௌிநாட்டுப் பாடநெறி ஒன்றுக்கு ஊழியர் ஒருவர் விண்ணப்பிக்க முடியும். அவ்வாறின்றி நேரடியாக குறித்த கல்வி நிலையங்களுக்கு விண்ணப்பித்து பின்னர் கல்வி அமைச்சுக்கு அறிவிக்கப்படும் அனைத்து விண்ணப்பங்களினதும் விடுமுறை வழங்கல் நிராகரிக்கப்படும்.
எனவே, வௌிநாட்டு நிறுவனங்களின் பாடநெறிகளுக்கு விண்ணப்பிக்க உத்தேசித்துள்ள அலுவலகர்கள் தமது விண்ணப்ப பத்திரத்தை இரு வாரங்களுக்கு முன்னர் விண்ணப்ப படிவத்தை அல்லது உத்தேச பெயர் விபரங்களை முன் அனுமதிக்காக கல்வி அமைச்சுக்கு சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளர் அக்கடிதத்தில் வேண்டியுள்ளார்.