K.t.Brownsen,
Career Guidance & Counselling,
(J/Aliyawalai C.C.T.M)
&
Assistant Lecturer
( Amazon College)
13 வருட உத்தரவாதக் கல்வித்திட்டம்
( க.பொ.த சாதாரண தரம் சித்தியடையவில்லையென்ற கவலையை விடுங்கள்)
கல்வி அமைச்சினால் இலங்கையின் அனைத்து மாணவர்களுக்கும் முதலாந் தரம் தொடக்கம் பதின்மூன்றாந் தரம் வரைக்கும் தொடர்ச்சியான பாடசாலைக் கல்வியைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் “13 வருட உத்தரவாதக் கல்வி நிகழ்;ச்சித் திட்டம்” அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது கற்கும் உரிமையைப் பாதுகாத்தல் மற்றும் திறன்களை விருத்தி செய்யூம் நோக்கிலான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பின்னர் வெற்றிஇ தோல்வியைப் பொருட்படுத்தாது உள்ளடக்கப்படக்கூடிய புதிய தொழில் முறைப்பாடத்துறையாக இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
“எந்தப்பிள்ளையூம் இடைநடுவில் கைவிடப்படுவதில்லை” என்ற மகுட வாக்கியத்துடன் அனைத்துப் பிள்ளைகளுக்கும் தொடர்ச்சியாகவூம்இ கட்டாயமாகவூம் விருப்பத்துறைசார் கல்வி வழங்க கல்வியமைச்சு 13 வருட உத்தரவாதக் கல்விச் செயற்றிட்டத்தினை 2017 தொடக்கம் அமுல்படுத்த ஆரம்பித்துள்ளது. நாடளாவிய ரீதியில் க.பொ.த சாதாரண தரத்தில் இருந்து 35 சதவீதமான மாணவர்கள் உயர்தரம் செல்ல முடியாமல் பாடசாலைக்கல்வியிலிருந்து இடைவிலகி இருக்கின்றார்கள். இந்நிலையில் 13 வருட உத்தரவாதக் கல்வித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டமை மாணவர்களிற்கு ஒரு வரப்பிரசாதம் என்றே கூறவேண்டும்.
க.பொ.த உயர்தர பாடத்துறைப் பிரிவூகளுக்குரித்தாக சுற்றுநிருப இல. 2016/ 13 குறிப்பிடப்பட்ட பாடத்துறை 06 ஆகும். மேலதிகமாக தொழிற் கல்வித்துறை 7ஆவது பாடத்துறைப்பிரிவாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அவையாவன
1. கலைப்பிரிவூ
2. வணிகவியல் பிரிவூ
3. உயிரியல் விஞ்ஞானப் பிரிவூ
4. பௌதிக விஞ்ஞானப் பிரிவூ
5. பொறியியல் தொழில்நுட்பப் பிரிவூ
6. உயிர் முறைமைகள் தொழில்நுட்ப பிரிவூ
7. தொழிற்துறைப் பிரிவூ
தொழிற்துறைப் பிரிவூ
இப்பாடத்துறை 3 பெரும் பிரிவூகளைக் கொண்டுள்ளது.
1. பொதுப்பாடத்துறை (General Components)
2. பிரயோக விடயத்துறை (Applied Subject – Vocational Area)
3. நிறுவனஞ்சார் தொழிற்பயிற்சி (Industrial Training)
1.பொதுப் பாடத்துறை (General Components) (தரம் 12இ 1ம் தவணை)
பின்வரும் பாடங்களை எல்லா மாணவர்களும் கட்டாயம் கற்க வேண்டும்.
இல
|
பொதுப் பாடத்துறை
|
அலகு எண்ணிக்கை
|
மணித்தியால அளவூ
|
1
|
முதலாம் மொழி ( சிங்களம் /தமிழ்)
|
10
|
40
|
2
|
பிரயோக ஆங்கிலம் மற்றும் தொடர்பாடல் திறன்
|
10
|
60
|
3
|
ஆழகியல் நயப்பு
|
04
|
40
|
4
|
தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் திறன்
|
07
|
60
|
5
|
குடியியல் தொடர்பான திறன்கள்
|
08
|
40
|
6
|
சமூக நலனுக்கான சுகாதார மற்றும் வாழ்க்கைத் திறன்கள்
|
07
|
40
|
7
|
சுயதொழிலாண்மைத் திறன்கள்
|
06
|
40
|
8
|
வூpளையாட்டு மற்றும் ஏனைய பாடச் செயற்பாடுகள்
|
30
|
|
9
|
வாழ்க்கை தொழில் வழிகாட்டல் வேலைத்திட்டங்கள்
|
60
|
(இவை 350 மணித்தியாலக் கற்கை நெறியாகும்)
2. பிரயோகப் பாடங்கள் (Applied Subject – Vocational Area) ( தரம் 12, 2ம்,3ம் தவணை)
தரம் 12இல் கல்வி கற்கும் மாணவர்கள் இரண்டாம்இ மூன்றாம் தவணைகளுக்காகப் பிரயோகப் பாடங்கள் மூன்றினைத் தெரிவூ செய்து கொள்ள வேண்டும். ஒரு பாடசாலைத் தவணையில் பாடம் ஒன்றிற்கு 100 மணித்தியாலம் என்ற அடிப்படையில் 300 மணித்தியாலம் ஒதுக்கப்படும்.
1. குழந்தை உளவியல் மற்றும் பாதுகாப்பு (Child Psychology & Care)
2. சுகாதாரமும் சமூகப் பாதுகாப்பும் (Health & Social Care)
3. நீர் வளங்கள் கல்வி (Aquatic Resource Studies)
4. உடற்கல்வியூம் விளையாட்டும் (Physical Education & Sports)
5. கலை நிகழ்ச்சி (Performing Arts)
6. மின் மற்றும் இலத்திரனியல் தொழில்நுட்பக் கல்வி (Electrical Electronic Studies)
7. கலை மற்றும் கைவினை (Art & Crafts)
8. உள்ளக வடிவமைப்பு (Interior Designing)
9. பேஷன் வடிவமைப்பு (Fashion Designing)
10. கிராபிக் வடிவமைப்பு (Graphic Designing)
11. கலை மற்றும் வடிவமைப்பு (Art & Designing)
12. தரை அழகு வடிவமைப்பு (Landscaping)
13. தோட்டக்கலை பயிற்றுவிப்புக் கலை (Applied Horticulture Studies)
14. கால்நடை உற்பத்திக் கலை (Livestock Product Studies)
15. சுற்றாடல் கல்வி (Enviornmental Studies)
16. சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் (Toursim & Hospitality)
17. இணையத்தள வடிவமைப்பு (Web Designing)
18. மென்பொருள் அபிவிருத்தி (Software Development)
19. அலுமினியக் கட்டுமானக் கல்வி (Aluminium Fabrication Studies)
20. உலோக கட்டுமானக் கல்வி (Metal Fabrication Studies)
21. ஜவூளி மற்றும் ஆடைகள் கல்வி (Textile & Apparel Studies)
22. நிகழ்ச்சி முகாமைத்துவம் (Event Management)
23. மோட்டார் வாகன தொழில்நுட்பக் கல்வி (Automobile Studies)
24. கட்டுமானத் தொழில்நுட்பக் கல்வி (Construction Studies)
25. பெருந்தோட்ட உற்பத்திக் கலை (Plantation Product Studies)
26. உணவூ பதப்படுத்தல் கல்வி(Food Processing Studies)
(கடந்த வருடம் இரண்டு பாடங்கள் சேர்கக்ப்பட்டன)
3.நிறுவனஞ்சார் தொழிற்பயிற்சி (Industrial Training) (தரம் 13, 1ம்,2ம்,3ம் தவணை)
• தரம் 12ல் தெரிவூ செய்த பிரயோகப் பாடங்களில் ஒன்றை மட்டும் 13ம் தரத்தில் தெரிவூ செய்து கற்கையைத் தொடரமுடியூம்.
• இப்பாடமானது பின்வருமாறு வகைப்படுத்தப்படும்.
1. பாடசாலையில் கற்க வேண்டிய மணித்தியாலம்
2. தொழில்முறைப் பயிற்சி பெற்றுக்கொள்ளும் மணித்தியாலம்
3. அனுப்ப வேண்டிய நிறுவனம்
கற்றல் கற்பித்தல் முறையியல்
இம் மாணவர்களின் வகுப்பறைகள் திறன் வகுப்பறைகளாக நவீன கற்றல் கற்பித்தல் சாதனங்கள் கொண்டதாக அதாவது உயர்வேக இணைய இணைப்புடன் கூடிய கணனிக் கூடம்இ விளையாட்டு உபகரணங்கள்இ ஆலோசனை வழிகாட்டல் அலகுஇ நூலகம்இ செயன்முறைகளுக்கான உபகரணங்கள் என்ற வகையில் பாடவிதானம்இ இணைபாடவிதானம் கற்பிக்கப்படுகின்றது. இவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் தேசிய கல்வி நிறுவகத்தினால் பயிற்சியளிக்கப்பட்டு செயற்பாடு சார்ந்த வகையில் மாணவர்களின் உள்ளார்ந்த ஆற்றல்களையூம் ஆளுமைகளையூம் வெளிக்கொண்டு வரும் வகையில் கற்பித்து வருகின்றனர். இத்துறையில் கற்கும் மாணவர்களும் செயன்முறைசார்ந்த வகையில் ஆர்வத்துடன் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்;.
பாடசாலையில்13 வருட உத்தரவாதப்படுத்தப்பட்ட நிகழ்;ச்சித்திட்டத்தின் ஊடாக NVQ 4 சான்றிதழ் பெற்றுக்கொள்ளல்இ தொழில்நுட்பவியற் கல்லூரிஇ பல்கலைக்கழக கல்லூரிகளில் கற்று (NVQ 5, NVQ 6 வரை) பெற்றுக்கொள்ளல்இ அத்தோடு தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகத்தில் கற்கும் வாய்ப்பின் ஊடாக NVQ 7 பட்டச்சான்றிதழைப் பெற்றுக்கொள்ளல் தொடர்ந்து அவர்கள் வேலை உலகிற்குள் நுழைதல்.
இக்கட்டமைப்பிலே மாணவர்கள் 13 வருட உத்தரவாதப்படுத்தப்பட்ட கல்வியில் கற்கும் போதே வேலை உலகுடன் தொடர்பு கொள்கின்றனர். இதனால் இவர்கள் வருமானம் பெறுவதோடு பொருளாதார அபிவிருத்திக்கும் பங்களிப்புச் செய்கின்றன. தற்போது இலங்கையில் தொழிலொன்றில் பிரவேசிக்கும் போது தேசிய மற்றும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்களாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
1. கல்விப் பொதுத் தராதர (சாதாரண தரம்) பெறுபேற்றுச் சான்றிதழ்
2. கல்விப் பொதுத் தராதர (சாதாரண தரம்) பெறுபேற்றுச் சான்றிதழ்
3. பட்டப்படிப்புச் சான்றிதழ்
என்பன அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டது போன்று இவற்றிற்கு மேலாக தற்போது மேற்கூறப்பட்ட தகைமைக்கு ஈடாக தேசிய தொழிற்றகைமைச் சான்றிதழ் (National Vocational Qualification) அங்கீகாரம் பெற்ற சான்றிதழாக காணப்படுவதால் இதனூடாகவூம் ஒரு மாணவன் பட்டம் பெற முடியூம்.
எனவே தொகுத்து நோக்குமிடத்து பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்கல்விப் பிரிவூ இலங்கையில் உள்ள அனைத்து மாணவ சமுதாயத்திற்கும் ஒரு வரப்பிரசாதம் எனலாம். ஏனெனில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையத் தவறியவர்கள் இத்துறையில் இணைவதன் மூலம் தொழிற்றுறை சார்ந்த வகையில் வருமானத்தைப் பெறுவதோடு பட்டம் பெற்று தமக்கும் தமது தாய் நாட்டிற்கும் பெருமை சேர்ப்பதோடு பொருளாதார அபிவிருத்திக்கும் பங்களிப்புச் செய்ய முடியூம். இதனை மாணவர்கள் சரியான முறையில் பயன்படுத்தி பயன்பெறவேண்டும்.
very useful