புலமைப் பரீட்சை சித்தியடைந்த 130000 பேருக்கு புலமைப் பரிசில் கொடுப்பனவு தாமதம்
புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த குறைந்த வருமானம் பெறும் பெற்றாரின் பிள்ளைகளில் ஒரு லட்சத்தி முப்பதாயிரம் பேருக்கான புலமைப் பரிசில் கொடுப்பனவு ஆறுமாதங்களாக தாமதமடைந்துள்ளது.
மாணவர்களுக்கு இந்தக் கொடுப்பனவு இறுதியாக கடந்த ஏப்ரல் மாதம் கிடைத்துள்ளதாகவும் இது தொடர்பாக மாணவர்கள் இதுவரை அறிவுறுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
குறைந்த வருமானம் பெறும் பிள்ளைகளுக்கு மாதாந்தம் 750 ரூபா வழங்கப்படுவதோடு மாதாந்தம் இதற்காக 9 கோடி 39 இலட்சம் செலவிடப்படுகிறது.
திறைசேரி கல்வி அமைச்சுக்கு வழங்கும் நிதியிலிருந்தே இந்த கொடுப்பனவுகள் வலயக் கல்விக் காரியாலயங்களுக்கு வழங்கப்படுவதுடன் அவை மாணவர்களுக்கு வலயங்கள் மூலம் வங்கிகளில் வைப்பிலிடப்படுகின்றன.
மே மாதம் மற்றும் ஜுன் மாதங்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதற்கு கல்வி அமைச்சுக்கு குறிப்பிட்ட நிதி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவற்றை தற்போது பகிர்ந்தளிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கல்வி அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஏனைய மாதங்களின் கொடுப்பனவுகளை வழங்கும் அளவிற்கு நிதி கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
https://sinhala.teachmore.lk/?p=872