கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் ஐந்து வருடங்களுக்குமேல் கடமையாற்றும் பாடசாலை பணியாளர்கள், பாடசாலைக்காவலாளிகள்,ஆய்வுகூட உதவியாளர்கள்,நூலக உதவியாளர்கள்,விடுதிக்காப்பாளர்.உதவி விடுதிக்காப்பாளர் ஆகியோருக்கான வருடாந்த இடமாற்றம்-வருடாந்த இடமாற்றம் 2023
கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் ஆரம்பமட்ட (தேர்ச்சியற்ற) சேவை மற்றும் முகாமைத்துவ உதவியாளர் (தொழிநுட்பம் சாராத)- பகுதி -2 சேவைகளில் ஒரே பாடசாலையில் 05 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றும் அலுவலர்களுக்கான வருடாந்த இடமாற்றம் 01.03.2023 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே இதனை நடைமுறைப்படுத்த மாகாணப் பணிப்பாளரதும் சகல வலயக்கல்விப் பணிப்பாளர்களினதும் பாடசாலை அதிபர்களினதும் பூரண ஒத்துழைப்பு எதிர்பார்க்கப்படுகின்றது.
2. வருடாந்த இடமாற்றத்திற்கு உட்படுத்தப்படவிருக்கின்ற அலுவலர்கள்
1, ஆய்வுகூட உதவியாளர்கள்
2. நூலக உதவியாளர்கள்
3. பாடசாலைப் பணியாளர்கள்
4. பாடசாலைக் காவலாளிகள்
5. விடுதிக் காப்பாளர் / உதவி விடுதிக் காப்பாளர்
3. நோக்கம்
|.இவ்விடமாற்றம் தொடர்பாக கிழக்கு மாகாண அரச சேவைக்கான தாபன நடைமுறை ஒழங்கு விதியின் XVIII ஆம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்ட ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக செயற்படுதல்.
II.
சில ஊழியர்கள் மிகவும் வசதியான நிலையங்களில் தொடர்ச்சியாக பல வருடங்கள் சேவையாற்றிக் கொண்டிருக்க, ஊழியர்கள் கஸ்டமான நிலையங்களில் வருடங்களுக்கு மேல் தொடர்ந்தும் சேவையாற்றிக் கொண்டிருப்பதனால் உண்டாகும் சமமின்மையை சீர் செய்தல்.
|||.ஒரே பாடசாலையில் சிலர் தொடர்ந்தும் கடமையாற்றுவதனால் பாடசாலை நிருவாகத்தில் எழும் பிரச்சனைகளை தீர்த்து பாடசாலைச் செயற்பாடுகளை வினைத்திறமையுடையதாக மாற்றல். IV. ஊழியர்களின் இடமாற்றக் கோரிக்கையினை தீர்த்தல்.