2018/2020 குழுவின் பெறுபேறு வெளியானது
தேசிய கல்வியியல் கல்லூரிகளின் 2018/2020 குழுவினரின் இறுதிப் பரீட்சைப் பெறுபேறு இன்று வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மிக நீண்ட காலம் காத்திருந்த இந்த பெறுபேறுகள் தற்போது வெளியிடப்படுவதற்கு தேசிய கல்வியியல் கல்லூரி ஆணையாளர் நாயகம் அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த இறுதிப் பெறுபேறு பின்வருமாறு இடம்பெறும்
உள்ளக கணிப்பீட்டுப் புள்ளிகள் அந்தந்த கல்விக் கல்லூரிகளாலும் பொதுப்பாடங்களுக்கான இறுதிப் பரீட்சை தேசிய கல்வி நிறுவகத்தாலும் தொழில்சார் பாடங்கள் மற்றும் பிரதான பாடங்களுக்கான இறுதிப் பரீட்சை இலங்கை பரீட்சைத் திணைக்களத்தாலும் இறுதி செய்யப்படும்.நடாத்தப்பட்டு பெறுபேறுகள் தேசிய கல்வி நிறுவகத்தின் கல்விக் கல்லூரிக் கிளைக்கு அனுப்பப்பட்டு அங்கு இறுதிப் பெறுபேறு தீர்மானிக்கப்பட்டு தேசிய கல்வி நிறுவகம் கல்விக் கல்லூரி பீடாதிபதிகள் கல்வி அமைச்சு ஆகியோரால் வெளியிடுவதற்கான அங்கீகாரம் பெறப்பட்டு அதன் பின்னர் கல்வி அமைச்சில் உள்ள ஆசியர் கல்விக்குரிய ஆணையாளருக்கு அனுப்பப்பட்டு அவரால் வெளியிடப்படும்.
இதனை அடுத்து மிக விரையில் நியமனத்திற்கான பாடசாலைகளைத் தெரிவு செய்வதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2018/2020 කාණ්ඩයේ ප්රතිඵල නිකුත් විය
ජාතික අධ්යාපන විද්යාපීඨ 2018/2020 කාණ්ඩයේ අවසන් විභාගයේ ප්රතිඵල අද නිකුත් කර ඇති බව අධ්යාපන අමාත්යාංශයේ ආරංචි මාර්ග දන්වා සිටියි.
දිගු කලක් බලා සිටි මෙම ප්රතිඵල ප්රකාශයට පත් කිරීම සඳහා ජාතික අධ්යාපන විද්යාපීඨයේ කොමසාරිස් ජනරාල්වරයා අවසර ලබා දී ඇති බව වාර්තා වේ.
අධ්යාපන අමාත්යාංශයේ ආරංචි මාර්ග සඳහන් කළේ, පත්වීම් සඳහා පාසල් තෝරා ගැනීමේ කටයුතු මින් පසු ඉතා ඉක්මනින් ආරම්භ කෙරෙනු ඇති බවයි.