எமது அன்றாட வாழ்வில் நாம் முன்னெடுக்கும் ஒவ்வொரு செயற்பாடுகளும் ஒரு நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டே அமைகின்றன. நோக்கங்கள் இல்லாத செயற்பாடுகள் இல்லை என்றே சொல்லலாம். அதன் அடிப்படையில் ஆரம்பகாலம் முதல் இன்று வரை கல்வி என்ற எண்ணக்கரு ஒரு நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டே இயங்கிவருகின்றது. அது பொதுவான நோக்கங்களாகவும் அமையலாம் தனிப்பட்ட நோக்கங்களாகவும் அமையலாம். எம் வாழ்வில் அங்கமாக விளங்கும் கல்விக்குரிய நோக்கங்களை நாம் அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமானதொன்றாகும். முதலில் இக் கல்வி நோக்கங்கள் எவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகின்றன என்று பார்த்தால் சமூக நியமங்கள், சமூக பொருளாதார அரசியல் மாற்றங்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு கல்வியின் நோக்கங்கள் தீர்மானிக்கப்படுகின்றன. அதுமட்டுமன்றி கல்வி நோக்கங்கள் காலத்திற்கு காலம் மாற்றமடைந்துகொண்டு செல்கின்றன.
ஆரம்பகாலங்களில் கல்வி நோக்கங்களைப் பார்த்தால் கல்வி அறிவு பெற்றவர்களும் குறைவான அளவிலேயே காணப்பட்டனர். எனவே கல்வியின் நோக்கம் பரந்ததாக இருக்கவில்லை. காரணம் தொழிநுட்ப வளர்ச்சி ஏற்படாத காலமாகவும், தொடர்பாடல்களும் குறைவாகவே காணப்பட்டன. பொதுவாக ஆரம்பகால கல்வி நோக்கங்கள் ஒழுக்கத்தையும் சமய விழுமியங்களையும் மையமாக கொண்டே அமைந்தன. ஆனால் தற்கால கல்வி நோக்கங்கள் முற்றிலும் வேறுபட்டதாகவே காணப்படுகின்றது. இவை பரந்துபட்ட நோக்கங்களை கொண்டுள்ளது. தற்போது வளர்ச்சியடைந்த தொழிநுட்பத்தின் அடிப்படையிலும், தொடர்பாடல் தேவைகளுக்கு ஏற்ப தனியாள் விருத்தி, சமூக விருத்தி, தொழில் விருத்தி, அறிவு விருத்தி, சர்வதிகார விருத்தி என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு கல்வியின் நோக்கங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன.
கல்வியினுடான தனியார் நோக்கங்கள்
நாம் ஒவ்வொருவரும் தனியாள் வேறுபாடு கொண்டவர்களாக காணப்படுகின்றோம். ஓவ்வொருவருக்கும் தனித்துவமான ஆளுமைகள், திறமைகள் உண்டு. அந்த வகையில் நல்ல ஆளுமை மிக்க, சுயமான சுதந்திரமிக்க தனி மனிதனை உருவாக்குவதே கல்வியின் நோக்கமாக காணப்படுகின்றது. இதனை வலியுறுத்தும் விதமாக அறிஞர்கள் பல கருத்துக்களை முன்வைக்கின்றனர். கல்வி மனிதனை விருத்தியாக்கும் ஊடகம் பிள்ளையின் உள்ளே இருக்கும் அனைத்து திறமைளையும் வெளிக்கொணர்வதே கல்வியின் நோக்கமாகும்.
தொம்சனின் கருத்துக்களாக:-சமூகம் தனியாளுக்காக இருப்பு கொண்டுள்ளது. தனியாள் சமூகத்துக்காக அல்ல. தனியாளுக்காகவே சமூகம் தனியாளுக்கு கல்வி கொடுப்பது அவனை அழிவிலிருந்து காப்பதற்காகும்;. தனியாள் தான் கல்வியல் பேறுகள் செயற்பாடுகளுக்கு மையமாக உள்ளனர்.
மேலும் விவேகானந்தரின் கல்வி நோக்கு தனியாளின் கல்விக்கு சிறந்த உதாரணமாகும் மனிதன் தெய்வீகமானவன் அவனுக்கான இலக்கு அவனது உள்ளத்தாலேயே வெளிக் கொண்டுவரப்படுகின்றது.
இவ்வாறு கல்வியானது தனியாளை நோக்காக கொண்டு இயங்குகின்றது என பல அறிஞர்கள் கூறுகின்றனர். எமது சூழலிலும் தனியாளை மையப்படுத்திய வகையில் தற்கால கல்வி முறைகளும் மாற்றமடைந்து உள்ளதை அவதானிக்க முடிகின்றது. பல துறைகளாக கற்கை நெறிகள் மாணவர்களுக்காக வழங்கப்படுகின்றது. அவர்கள் அவ் அறிவு தேவைக்கும் திறனுக்கும் ஏற்ற வகையில் தமக்குரிய துறைகளை தேர்ந்தெடுத்து உயர்கல்வியிலும் பல்கலைக்கழக கல்வியிலும் கற்று தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொள்கின்றனர்;. எல்லா நாடுகளிலும் முன்பள்ளி பருவத்தில் இருந்தே கற்றல் நடவடிக்ககைகள் ஆரம்பிக்கப்படுகின்றன.
அது மட்;டுமின்றி இணைப்பாட விதான செயற்பாடுகளிலும் மாணவர்கள் தமது தனியாள் விருத்தியை வெளிக்காட்டுகின்றனர். இசை, நடனம், ஓவியம், விளையாட்டு, புத்தாக்க செயற்பாடுகள், விஞ்ஞான கண்டுப்பிடிப்புக்கள், கண்காட்சிகள் என கல்வி தனிமனித ஆளுமையையும், திறமையையும் வெளிப்படுத்த தமது கதவுகளை திறந்து வைத்துள்ளதை அவதானிக்கலாம். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக கற்கும் திறமை காணப்படுகின்றது. ஒவ்வொரு மாணவனதும் ஆளுமைக்கு ஏற்ற வகையில் அவனது தேவைகளை அறிந்தே ஒரு ஆசிரியர் கற்பிக்க வேண்டும் என கல்வி உளவியல் கூறுகின்றது.
கல்வியினுடான சமூக நோக்கங்கள்
நாம் தனியாக கல்வி கற்றாலும் அதை செயற்படுத்தக் கூடிய தளம் சமூகமே ஆகும். மனிதன் ஒரு சமூக பிராணியாவான். எனவே கல்வி செயற்பாடுகள் சமூக செயற்பாடுகளாகவே செயற்படுகின்றான். ரூசோவின் கருத்துப்படி ஒரு குழந்தை நல்லதொரு தனியாளாக காணப்பட்டாலும் அவன் வாழவேண்டியதும் வளர வேண்டியதும் சமூக சூழ்நிலையே ஆகும்.
சமூக நோக்கம் குறுகிய சமூக நோக்கம், பரந்த சமூக நோக்கம் என இரு வகைப்படும். இதில் கல்வி சமூகத்திற்கான பரந்த நோக்கங்களையே மிக முக்கிய பண்பாக கொண்டுள்ளது. சமூகத்திற்கான வினைத்திறனான குடிமகனாகவும் நாட்டிற்கான நற்பிரஜையாகவும் உருவாக்குவதே கல்வியின் முக்கிய நோக்கமாக காணப்படுகின்றது. உதாரணமாக இலங்கை தேசிய கல்வி ஆணைக்குழுவினால் வெளிப்படும் கல்வி கொள்கையின் முதலாவது கொள்கையாக இதுவே காணப்படுகின்றது. அது மட்டுமின்றி எல்லா மனிதனிடத்திலும் திறமை, நம்பிக்கை, ஒற்றுமை என்பவற்றை விருத்தியாக்கி மாணவர்களை சமூகத்திற்கு வெளியிடல். கல்வியின் விசேட பண்பாக விளங்குவது நாட்டின் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வாகவும் நாட்டின் அபிவிருத்தியை மையமாக கொண்டும் விளங்கி வருகின்றது.
கற்றவர்கள் வாழ்கின்ற சமூகம் பிரச்சினைகளற்ற புரிந்துணர்வு, விட்டுக்கொடுக்கும் பண்புடைய சமூகமாக காணப்படும். அதுமட்டுமன்றி ஒவ்வொரு சமூகத்தின் தலைமுறைகளுக்கிடையில் தத்தமது கலாசாரத்தையும் பண்பாடுகளையும் கடத்தும் சாதனமாக கல்வி காணப்படுகின்றது. சமூகமானது கடந்த காலத்தை மட்டுமன்றி எதிர்காலத்தில் ஒரு இலக்குடன் பயணிக்க கல்வி மிக முக்கிய விடிவெள்ளியாக திகழ்கின்றது. சமூகத்தில் வினைத்திறனுள்ள தனியாள் அவனது வாழ்க்கை தேவைகளை தானே பூர்த்தி செய்கின்றான். அவன் தனது ஒழுக்க, சமூக தரங்களையும் தானே விருத்தி செய்கின்றான் என ஜோன் டியூஸ் கூறுகின்றார்.
மிக அழகாக விளங்கிக் கொள்ள வேண்டும் என்றால் அனுபவித்துக் கொண்டு இருக்கும் எமக்கு பயன் தரும் கண்டுப்பிடிப்புக்கள் அனைத்தும் சமூக தேவைகளுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளன. நாம் பாடசாலை, பல்கலைக்கழக கல்வியை கற்று மீண்டும் சமூகத்திற்கு சமூகத்தோடு சமூகத்திற்காகவே சேவை செய்ய வேண்டும். சமூகத்தில் அந்தஸ்து கல்வியின் மூலம் உயர்ந்திடும்.
கல்வியினுடான அறிவு நோக்கங்கள்
அறிவு என்பது வெறுமனே ஏட்டுக்கல்வி மட்டுமல்ல ஒரு குழந்தை கருவில் உருவாக தொடங்கும் அந்த நொடியில் இருந்தே கற்க தொடங்குகின்றது. இது அனுபவ கற்றலாகும். குழந்தை பிறந்து பாடசாலை செல்லும் வரை பிள்ளையின் அறிவு மட்டம் அனுபவத்தின் மூலமே விருத்தியாகின்றது. குடும்பம், சமூகம், அயலவர்கள், உறவினர் என அனைவரிடத்திலிருந்தும் பிள்ளை கற்கின்றது. பாடசாலையில் வழங்கப்படுவது வெறும் ஏட்டுக்கல்வி மாத்திரமே ஆகும். ஏன் மனிதன் தான் இறக்கும் வரை பல துறைகள்சார் அறிவைப் பெற்றுக் கொண்டே இருக்கின்றான். வெறுமனே பாடப்புத்தகத்தை மாத்திரம் படித்து பரீட்சையில் மதீப்பீடு பெறுவது மட்டும் அறிவு விருத்தி அல்ல அது கற்றலும் அல்ல. அவை மாணவனது அறிவு மட்டத்தை அளவிடுவதற்கு அல்லது மதிப்பீடு செய்வதற்கு மாத்திரமே பரீட்சைகள் பயன்படுத்தப்படுகின்றன.
மேலும் கல்;வியில் ஒழுக்க நோக்கங்கள் மிக முக்கியமானதொன்றாகும் “ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்”. எனும் வள்ளுவர் வாக்கு ஒழுக்கம் இல்லையேல் சமூகத்தில் தலை நிமிர்ந்து வாழ முடியாது. ஒழுக்கத்தையும், கல்வியையும் மிகவும் பெறுமதியான ஒன்றாக அன்று முதல் இன்று வரை பாதுகாக்கின்றனர.; அதனை குருகுலக்கல்வி முதல் தற்கால பாடசாலை கல்வி வரை பேணுவதை காணலாம். எடுத்துக்காட்டாக “மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின்.” என்ற குறளும் ஒழுக்கத்தையே வலியுறுத்துகின்றன.
தற்காலத்தில் பாடசாலைகளில் நேரம் தவறாமை, பெரியோரை கனம் பண்ணுதல் என விழுமிய கல்வியை வழங்குவதை காண்கின்றோம். ஒழுக்கவியல் எனும் தனிதுறையும் உண்டு. மனித வாழ்வில் பணமோ, அதிகாரமோ, திறமையோ, உடல் வலிமையோ அவசியமில்லை ஒழுக்கம் மட்டுமே இவை அனைத்தையும் ஈடு செய்யகூடியது. நாம்; கற்கும் கல்வியானது முதலில் ஒழுக்கத்தை தர வேண்டும். அது எல்லாத் துறையிலும் எல்லா மொழியிலும் அதனையே கூறுகின்றன. நேமண்ட் என்ற ஆசிரியர் கல்வியின் இறுதி நோக்கம் பிரிவின்மையையும் தூய ஒழுக்கத்தையும் கட்டி எழுப்ப வேண்டும் என்கின்றார். மேலும் சுவாமி விவேகானந்தர் மனிதனை தூயவனாக உருவாக்குவதே கல்வியின் நோக்கமாகும் என்கின்றார். இன்றைய காலத்தில் அதிகரித்துவரும் துஸ்பிரயோகங்கள், போதைப்பொருள் பாவனையாளர்கள், குற்றச்செயல்களில் ஈடுப்படுபவர்கள் இவை அனைத்திற்கும் ஒரே தீர்வாக பாடசாலையினூடாக ஒழுக்கம் நிறைந்த சந்ததியினரை சமூகத்திற்கு கொண்டு வருதலாகும். இவை இன்று மாணவர்களின் பாடத்திட்டங்களுடாக புகுத்தப்பட்டு ஒழுக்க கல்வி வழங்கப்படுகின்றது.
கல்வியினுடான ஒழுக்க நோக்கங்கள்
ஒழுக்கமும் சமயமும் ஒன்றாக கலந்த விடயமாகும். மனித குலம் தமக்கு மேல் ஒரு சக்தி உண்டு என நம்பியது. இதனால் இறை வணக்கம் உருவாகி அவை ஒவ்வொன்றின் வழியாகவும் இறைவனை சென்றடையும் மார்க்கங்ளாகவே சமயங்கள் தோன்றின. எந்த சமயமாக இருந்தாலும் சரி இது இறைவனை அடையும் நல்ல வழியையே நன்நடத்தைகளையே வலியுறுத்துகின்றது. அவற்றை தமது சமய போதனைகள் வழியாக வெளியிடுகின்றன. தனிமனித வாழ்வை இச்சமயமும் இயக்குகின்றது. ஆகவே கல்வி சமய நோக்கங்களையும் கொண்டு இயங்குகின்றது.
நல்ல குடிகளின்; அடிப்படை ஒழுக்கமானது மனித நம்பிக்கையில் தங்கியுள்ளது என கான்ட் கூறுகின்றார். இவரது கருத்துப்படி சமயமற்ற வாழ்வு பூரணமற்றதாகும் மேலும் இ.N;ஜ. பேட்டன், இராதகிருஷ்ணன் என்போர் சமயக் கல்வியை வழியுறுத்துகின்றனர். ஆரம்பத்தில் பாடசாலைகள் கோயில்களையும், தேவாலயங்களையும் மையமாகக் கொண்டே தோன்றின. அது மட்டுமன்றி பாடசாலைகளில் சமயப்பாடங்களும் கற்பிக்கப்படுகின்றது. இதன் மூலம் சமய விழுமியங்கள் மாணவர்களிடையே வளர்வதற்கு வழிவகுக்கப்படுகின்றது. வெள்ளிக்கிழமைகளில் சமய வழிபாடுகள் நடைபெறுகின்றன. மேலும் சரஸ்வதி பூஜை, ஒளிவிழா, நோன்பு திறக்கும் நிகழ்வுகள் போன்றன கொண்டாடப்படுகின்றன .
கல்வியினுடான தொழில் நோக்கங்கள்
தற்காலத்தில் கல்வி ஒரு நாகரிகமாக மாறிவிட்டது. “தொழிலுக்காகக் கற்று மேல் நாட்டவர் நம்மை ஆண்டதன் பயனாக கிடைக்கப்பெற்றது வெள்ளையரின் உத்தியோகமாகும்” என பேராசிரியர் மா. செல்வராஜா அவர்கள் கூறுகின்றார். நாடு சுதந்திரமுற்று அரை நூற்றாண்டுக்கு மேலாகியும். இன்னும் வெள்ளையரின் எழுது வினைஞர் தேவையை பூர்த்தியாக்கும் கல்வி முறையில் இருந்து நாம் இன்னும் மாறவில்லை அதன் பயனாக வேலையற்ற பட்டதாரிகள் காணப்படுகின்றனர். இன்று கல்வி தொழில் நோக்கத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என கருதுகின்றோம். ஒருவரின் வாழ்வில் முக்கியக் கட்டம் அவன் தொழில் செய்யும் காலம்தான் அதற்காகவே நாம் கற்கின்றோம்.
மகாத்மா காந்தி அவர்கள் உண்மையான கல்வி தொழிலுக்கான ஒரு காப்புறுதியாக அமையவேண்டும் என குறிப்பிடுகின்றார். தேசிய உற்பத்தியை பெருக்கிக் கொள்ளவும் நாட்டினை அபிவிருத்திக்கு இட்டுச்செல்லவும் கற்ற தொழிலாளர்கள் தேவையாக உள்ளனர். இதை எமது தொழிலில் கல்வி பூர்த்தி செய்கின்றது. கல்வியானது எதிர்காலத்தில் ஊதியத்தை தருகின்ற ஒன்றாக இருக்க வேண்டும். படித்துவிட்டு வேலை தேடும் அர்த்தமற்ற கல்வியை காட்டிலும் கல்வியானது தொழில் நோக்கம் கொண்டதாக அமைய வேண்டும். உதாரணமாக காந்தியடிகள் வாழ்ந்த காலத்திலுள்ள கல்வித் திட்டங்கள் செயல்முறை கல்வியை அடிப்படையாக கொண்டவை ஆகும். இன்றைய இலவச கல்வித் திட்டங்கள் தற்கால வேலைத்தள பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் சீரமைக்கப்பட்டு வருகின்றன.
உதாரணமாக :- தொழிற்;பயிற்சி நிலையங்கள் (ஏவுயுஇ Nயுஐவுயுஇ ளுNவுயு) என்பன உருவாக்கப்பட்டு; கா.பொ.த உயர்தரம் மற்றும் சாதாரண தரம் முடித்த மாணவர்களுக்காக தொழில் முனைப்பு எனும் திட்டம் பாடசாலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
கல்வியினுடான சர்வாதிகார நோக்கங்கள்
அரசியல் மாற்றங்கள் கல்வியின் நோக்கங்களில் பங்களிப்பு செய்கின்றன ஒவ்வொரு அரசாங்கத்திற்கும் ஒவ்வொரு கோட்பாடுகள் மாற்றமடையும் அவை எவராலும் மறுக்க முடியாத ஒன்றாக அமையும் சர்வாதிகார ஆட்சி, நினைத்ததை கல்வியில் அடையும் நோக்கம் ஒன்றைக் கொண்டிருக்கும் உதாரணமாக :- பொது உடைமை நாடாக இருந்தால் அவர்களது கல்வி திட்டங்கள் பொது உடைமை வாதத்தை மையப்படுத்தியதாக காணப்படும் உதாரணமாக ரஷ்யா, N;ஜர்மனி, இத்தாலி போன்ற நாடுகள் இக்கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு கலைத்திட்டம், கல்வி திட்டம், கல்வி முறைகள், பாடத்திட்டம் என்பன காணப்படும். எமது நாட்டிலும் சில எண்ணக்கருக்களை மையமாக கொண்ட கல்வி கொள்கைகள் மாற்றப்பட்டுள்ளன. மாணவர் மையக்கல்வி, அனைவருக்கும் கல்வி, நாட்டின் அபிவிருத்தியை அடிப்டையாக கொண்ட கல்வி என நாட்டில் அரசியல் மாற்றங்களால் கல்வியின் நோக்கங்களும் மாற்றியமைக்கப்படுகின்றன. இவற்றை அடிப்படையாக கொண்டே எமது பாடத்திட்டம் மற்றும் கலைத்திட்டங்களும் வடிவமைக்கப்பட்டு வழங்கப்படுகின்றது.
ஆகவே நாமும் தனிமனித ஆளுமையை விருத்தி செய்யக்கூடிய, சமூகத்தோடு பயனுள்ள சகலவிதமான அறிவையும் பெறக்க்கூடிய, ஒழுக்கத்தை தரக்கூடிய, தற்கால உலகிற்கு ஏற்ற தொழிலை வழங்கும் கல்வியின் நோக்கங்களை புரிந்து செயற்பட்டு நல்ல பிரiஐகளாக நாட்டிற்கு சேவை செய்வது எமது கடமை என்பதை உணர்ந்து கற்போம்.
ஜெயசீலன் கிறிஸ்ரினா
2ம் வருடம்
கல்வியியல் சிறப்புக்கற்கை
கல்வி பிள்ளை நலத்துறை
கிழக்குப் பல்கலைக்கழகம்.