எண்ணக்கரு உருவாக்கமும் மொழி விருத்தியும்
ந.பார்த்திபன்
எண்ணக்கரு என்பது வெவ்வேறு பொருட்கள், விடயங்கள் ஆகியவற்றிலுள்ள பொதுவான தன்மைகளைக் குறிக்கும் செயன்முறையாகும். அனுபவங்களின் சுருக்கமான தொகுப்பே எண்ணகரு எனக் கொள்ளலாம். கதிரை, பாடசாலை, கரும்பலகை, புத்தகம் போன்ற சொற்களெல்லாம் தமிழ் மொழியிலுள்ள எண்ணக்கருக்களின் குறியீடுகள் என்றும் இவ்வாறான பல சொற்களின் ஒத்த பண்புகளை அடிப்படையாகக் கொண்டு எண்ணக்கரு வளம் விருத்தி அடைகின்றது என்றும் குறிப்பிடலாம்.
மேலும் எண்ணக்கரு என்பது பொதுவான பண்புக் கூறுகளின் ஒழுங்கான அல்லது வகைப்படுத் திய ஓர் அமைப்பெனக் கூறலாம். இதற்கு உதாரணமாக மரம் ஒன் றைப் பார்க்கும் பிள்ளையொன்று மரம் பற்றிய எண்ணக்கரு உருவாக் கத்தைப் பெற்றிருக்கும் நிலையில் வேறு இன மரத்தைப் பார்க்கு – மிடத்து அதனையும் மரம் என்று சொல்லக் கேட்கும் போது அந்த மரத்தினதும் பண்புகளையும் மரத்தின் பண்பென அனுமானித்துக் கொள்கிறான்.இவ்வாறு பல்வேறு வகை மரங்களையும் அவற்றின் பண்புகளையும் இணைத்துப் பார்த்து பல்வேறு பண்புகளைக் கொண்டிருப்பது மரம் என்ற எண்ணக்கருவைப் பெறுகிறான்.
இந்நிலையில் எண்ணக்கரு உருவாக்கம் என்பது பற்றி விரிவாகப் பார்ப்போம். மனிதர்களைச் சூழ்ந்துள்ள சிக்கலான இயல்புகளைப் பகுத்து வகைப்படுத்தியும் தொகுத்து அமைப்பாக்கியும் மொழிவடிவிலான குறியீட்டு நிலைப்படுத்தியும் எண்ணக்கருவாக்கம் மேற்கொள்ளப்படுகின்றது. உதாரணமாக சூழலில் காணப்படுகின்ற உயிரிகளை விலங்குகள் என்றும் தாவரங்கள் என்றும் வகைப்படுத்துதல் எண்ணக்கரு உருவாக்கமாகும். இந்த எண்ணக்கரு உருவாக்கமானது அறிவை ஒழுங்கமைத்தல், சிந்தனையை இயக்குதல், கிரகித்தல் வளப்படுத்துதல், அறிவைக் களஞ்சியப்படுத்திப் பயன்படுத்துதல் முதலாம் அறிகைத் தொழிற்பாடுகளில் சிறப்பார்ந்த இடத்தைப் பெறு-கின்றது’ என பேராசிரியர் சபா ஜெயராசா குறிப்பிடுகின்றார். மேலும் இது அடிப்படை நிலை, உயர்நிலை எண்ணக்கரு உருவாக் கங்களென சிறப்பிக்கப்படுகின்றது.
‘மொழி வளம் குறைந்த சமூகத்தில் எண்ணக்கருவளமும் குறை வாகவே இருக்கும்’ எனவும் மொழி யற்ற சில உயிர் விலங்குகளுக்கு ஒரு சில எண்ணக்கருக்கலோ மனத்தில் உள்ளன’ எனவும் பேராசிரியர் ச. முத்துலிங்கம் குறிப்பிடுகின்றார். மேலும் இவர் பிள்ளையின் வளர்ச்சி நிலையும் அனுபவங்களின் அதிகரிப்பும் எண்ணக்கரு உருவாக் கத்துடன் தொடர்புபட்டது’ எனவும் கூறுகின்றார். இதிலிருந்து எண்ணக் கரு உருவாக்கத்திற்கு மொழி விருத் திக்கும் இடையேயுள்ள தொடர்பை நாம் அறிந்து கொள்ளலாம். உதாரணமாக நாலாம் வகுப்புப்பிள்ளை
தனது குடும்பம் தவிர்ந்த ஏனைய சமூக அமைப்புக்களுடன் தொடர்புற்று அனுபவம் பெற முடியாத நிலையில் அவன் சனநாயகம் பற்றியோ ஐக்கிய நாடுகள் சபை பற்றியோ எண்ணக்கருவைப் பெறமுடியாது. இதிலிருந்து அனுபவங்கள் கூடக்கூட எண்ணக்கரு உருவாக்கம் அதிகரிக்கும். எண்ணக்கரு உருவாக்கம் அதிகரிக்க மொழி விருத்தியும் ஏற்படும் என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.
எண்ணக்கரு உருவாக்கம் புலக்காட்சியிலிருந்து ஆரம்பிக்கின்றது. பொருட்களின் ஒத்த பண்பு களையும் வேறுபட்ட பண்புகளையும் பிரித்தறியும் ஆற்றல் புலக்காட்சியிலிருந்து ஆரம்பிக்கின்றது. ஐம்புலன்களால் பெறப்படும் புலக்காட்சியை பார்த்தல் விம்பங்கள், கேட்டல் விம்பங்கள், சுவைத்தல் விம்பங்கள், ஸ்பரிசித்தல் விம்பங்கள் என ஐந்தாகப் பிரிக்கலாம். ஆரம்ப வகுப்புகளில் மொழி கற்றலில் புலக்காட்சி பெறுதல் முக்கிய இடத்தைப் பெறு கின்றது. எண்ணக்கரு உருவாக்கமும் மொழி கற்ற லும் புலக்காட்சியிலிருந்தே ஆரம்பிக்கின்றன சூழலில் காணப்படுகின்ற பெருந்தொகையான பொருட்களை குறிப்பிட்ட எண்ணக்கருக்கட்டமைப்பினுள்ளே அடக்கிக் கொள்ள (சுருக்கிக் கொள்ள ) புலக்காட்சி உதவுகின்றது. உதாரணமாக எத்தனை – யோ உயிரினங்களை விலங்கு என்ற ஓர் எண்ணக் கருவினுள் சுருக்கிவிடக் கூடியதாகவுள்ளது.
இந்தச் செயற்பாடு மனிதரது சிந்திக்கும் ஆற்ற லைச் சிக்கனப்படுத்தி வினைத்திறனாக்கியும், உதவு கின்றதனால் எளிதானதும் சிக்கனத்தன்மை பொருந் தியதுமான தொடர்பாடல் ஏற்படுத்த முடிகின்றது. இதன் மூலமாக அறிகைச் செயற்பாட்டின் ஒரு சிறப்புப் பண்பாகிய அனுமானித்தலை வளர்ப்பதற் குரிய விசை கொண்ட ஆற்றலும் உருவாக்கப்படு – கின்றது. மேற்கூறிய விசை கொண்ட ஆற்றலினால் அனுமானித்தல், அறிகை என்பவற்றால் மொழி விருத்தி ஏற்படுகின்றது. மொழிக்கொள்கையாளர் விகொற்ஸ்கி சிந்தனை விருத்திக்கும் மொழி விருத்திக்கும் இடையிலான தொடர்பை விளக்கு கிறார். இவர் தன்மையப் பேச்சு (நுபழஉநவெசiஉ வயடம) என்ற தமக்குத் தானே பேசுதல் என்ற நிலையில் சொற்களை பிள்ளைகளினால் உள்மயமாக்கப்படுவதே சிந்தனை என்றும் சிந்திப்பதற்கு மொழி மிகவும் அவசியம் என்றும் எடுத்துரைக்கின்றார்.
எண்ணக்கரு உருவாக்கமானது பண்பு பிரித்தறிதல், பொதுமையாக்கல் எனும் இரு செயன் முறைகளைக் கொண்டது. பண்பு பிரித்தறிதல் என் பது பல பொருட்கள், விடயங்களில் உள்ள பண்புக் கூறுகளை அவதானித்தல் என்றும் பல்வேறு அனுபவங்களிலிருந்து பண்புகளைப் பிரித்தெடுத்து அவற்றைப் பொதுமைப்படுத்தல் பொதுமையாக்கல் என்றும் கூறலாம். பிள்ளையானது பல்வேறு அனுப் வங்களையும் பண்பு பிரித்தறிந்து பின்னர் பொது மையாக்கி எண்ணக்கரு உருவாக்கத்தை மேற்கொள்ளும் போது பல்வேறு எண்ணக்கருக்கள் – வாயிலாக அறிவு பிள்ளையின் உள்ளத்தில் பதிவு செய்யப்படுகின்றது. அவை மொழி எண்ணக்கருக் கள், கணித, சமூக, அழகியல் எண்ண க்கருக்கள் என்றவாறு பாடத்துறைகளோடு இணைந்த எண்ணக்கருக்களாக காணப்படுகின்றன. இந்நிலையில் மொழி எண்ணக்கருக்கள் எல்லாப் பாடத்துறை களோடும் பின்னிப்பிணைந்திருப்பதால் அதிகளவில் மொழிவிருத்தி ஏற்படுகின்றது.
பிள்ளைகளிடத்து ஏற்படும் எண்ணக்கரு உருவாக்கம் மற்றும் அறிகை விருத்தி ஆகியவற்றை பியாஜே விருத்திப்படி நிலைக்கட்டங்களாக விளக்கி யுள்ளமையும் எண்ணக்கரு உருவாக்கத்திற்கு மொழி விருத்திக்கும் இடையேயுள்ள தொடர்புக்கு சான்றாகும். பியாஜே இரண்டு வயது தொடக்கம் ஏழு வயது வரை உள்ளூணர்வுப் பருவம் நிகழ்கின்றது என்றும் எண்ணக்கருக்கள் மொழிக்குறியீட்டுடன் தொடர்புபடுத்தும் ஆற்றல் வளர்ச்சியடையத் தொடங்குகின்றது எனக் குறிப்பிடுகின்றார். மேலும் ஏழு வயது தொடக்கம் பதினொரு வயது வரை, பதினொரு வயது தொடக்கம் பதினாறு வயது வரையுள்ள பருவங்களை திட்டவட்டமான சிந்தனை இயக்கப் பருவம், வரன் முறையான சிந்தனைப் பருவம் எனக் குறிப்பிட்டு முறையே நன்கு ஒழுங்கமைந்த தருக்க முறையிலே எண்ணக்கருக்களை உருவாக்கிக் கொள் – ளுதல், தருக்க பூர்வமாகவும் பகுத்தறிவு பூர்வமாகவும் எண்ணக்கருக்களை இனங்காணுதல் எனக் குறிப்பிடுவதிலிருந்து மொழி விருத்திக்கு எண்ணக்கரு உருவாக்கம் எத்துனை முக்கியத்துவமானது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
பற்றீசியா அர்லின் (Pயவசiஉயை யுசடin) நியம சிந்தனைப் பருவத்தின் பின்னர் மிக விரிந்த நோக்குடன் பிரச்சினைக்குத் தீர்வு காணல், விளைவுதரும் வினாக்களை உருவாக்குதல், கருத்துக்களைப் புதிய வடிவில் தொகுத்தல், சமச்சீருக்கு முரண்பாடான நிகழ்வுகளைப் புலனாய்வு செய்து அறிவைத் திரட்டிக் கொள்வதில் பரந்த அணுகு முறைகளைப் பயன்படுத்துதல், அறிகை எல்லைகளை மீளாய்வு செய்தல், பொருண்மை மட்டங்களைக் கண்டறிவதில் அதிக மான விரிப்புடமை , ஆக்கமலர்ச்சி மற்றும் தன் – முனைப்பு ஆகியவற்றில் விருப்புரிமை கொள்ளல் போன்ற எண்ணக்கருக்களை உருவாக்குவதற்கும் நியம சிந்தனைக்கும் பிற்பட்ட பருவத்தினரை விளக்கியுள்ளார். இவை மொழி விருத்தியை மேலும் விருத்தியாக்கும் எனக் கூறலாம்.
பிள்ளைகளின் முதிர்ச்சிச் செயற்பாட்டோடு மொழியைத் திரட்டும் செயற்பாடும் இணைந்து செல்லும் என்று கூறுகிறார்கள் மொழியியலாளர்கள். ஆரம்ப வகுப்புகளில் காட்சிப் பொருளின் அதிகளவு உதவியோடு எண்ணக்கரு உருவாக்கத்தைப் பெற்று மொழி விருத்தியை அடையும் பிள்ளைகள் காலப் போக்கில் காட்சிப்பொருட்களின் குறைந்தளவு பயன்பாட்டோடு கருத்துப் பொருளிலேயே எண்ணக்கரு உருவாக்கத்தைப் பெற்று மொழி விருத்தியையும் அடைந்து கொள்வர். இந்நிலையில் ஆரம்பப் பிரிவு ஆசிரியர்கள் பிள்ளைகளின் வயது, ஆற்றல், மொழி விருத்தியைப் பெற வழிவகுக்க வேண்டும்.
ந.பார்த்திபன்,
ஆசிரியர் கல்வியியலாளர்,
தேசியக் கல்வியியற் கல்லூரி,
வவுனியா.
நன்றி அகவிழி
.