எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சைக்கான சகல நடவடிக்கைகளும் தற்போது தயார்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன, பகுதி இரண்டின் வினாப்பத்திரமே முதலில் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் பகுதி ஒன்று வினாப்பத்திரமே முதலில் வழங்கப்பட்டது.
பகுதி ஒன்று வினாப்பத்திரம் என்பது நுண்ணறிவு வினாக்களை கொண்டதாகும்.
பகுதி ஒன்று வினாப்பத்திரம் கடினமானது என்பதால் பாட விடயதானங்கள் அடங்கிய பகுதி இரண்டின் வினாப்பத்திரத்தை முதலில் வழங்குமாறு பெற்றோர்களால் கோரப்பட்டிருந்ததாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார்.
ලබන ඉරිදා පැවැත්වීමට නියමිත ශිෂ්යත්ව විභාගයට අදාළ සියලු කටයුතු සූදානම් කර ඇති බව විභාග දෙපාර්තමේන්තුව දැනුම් දී තිබේ.
මේ සම්බන්ධයෙන් මාධ්ය වෙත අදහස් දක්වමින් විභාග කොමසාරිස් ජනරාල් එල්.එම්.ඩී ධර්මසේන සඳහන් කර ඇත්තේ දෙවන කොටසේ ප්රශ්න පත්රය පළමුව නිකුත් කරන බවයි.
පළමු කොටස ප්රශ්න පත්රය තීක්ෂ්ණ බුද්ධි ප්රශ්න වලින් සමන්විත වේ.
පළමු කොටසේ ප්රශ්න පත්රය දුෂ්කර බැවින් විෂය කරුණු ඇතුළත් දෙවැනි කොටසේ ප්රශ්න පත්රය පළමුව ලබාදෙන ලෙස දෙමාපියන් ඉල්ලා සිටි බව විභාග කොමසාරිස් ජනරාල් එල්.එම්.ඩී.ධර්මසේන මහතා පැවසීය.