இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக எரிசக்தி அமைச்சு அதிக எரிபொருள் இருப்பை உறுதிப்படுத்துவதற்காக பணம் செலுத்தியுள்ளது.
டீசல் கப்பல் ஒன்றிற்காக நேற்று பணம் செலுத்தப்பட்டதாகவும், இறக்கும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தலா ஒரு பெற்றோல் மற்றும் டீசல் கப்பல்களுக்கு பகுதி முன்பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) ஜெட் எரிபொருளை வழங்குவதற்கான 1 வருட ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர் வெளிப்படுத்தினார்.
ஒப்பந்தத்தின் கீழ் ஜெட் எரிபொருளின் முதல் கப்பல் ஆகஸ்ட் 12 முதல் 14 வரை பெறப்படும் என்று அமைச்சர் மேலும் கூறினார்.
நேற்று இரவு 09 மணி நிலவரப்படி 05 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டுக்காக பதிவு செய்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மொத்தம் 5,274, 800 பேர் பதிவு செய்துள்ளதாகக் கூறிய அவர், நேற்று மட்டும் 119, 238 பேர் பதிவு செய்துள்ளனர்.
நாடளாவிய ரீதியில் 902 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நேற்று 579,050 பரிவர்த்தனைகள் இடம்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.