அரச சேவையின் ஆட்சேர்ப்பு இடைநிறுத்தம்
அரச சேவைக்கு புதிதாக எந்த நியமனங்களையும் வழங்குவதற்கான பரீட்சைகளை நடாத்த வேண்டாம் என நிதி அமைச்சு பரீட்சைகள் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது.
அவ்வாறே இதற்கு முன்னர் ஆட்சேர்ப்புக்காக நடாத்தப்பட்ட பரீட்சைகளின் முவுகளை வெளியிட வேண்டாம் எனவும் பரீட்சைத் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே நடாத்தப்பட்ட ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிட முடியாத நிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.