போக்குவரத்து பிரச்சினை காரணமாக வழங்கப்பட்ட தற்காலிக இணைப்புக்கள் அனைத்தும் ரத்துச் செய்யப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
ED/01/27/14/1-2 மற்றும் 2022.06.16 ஆம் திகதிய கடிதத்தில் மூலம் இவ்வருடம் டிசம்பர் 31 வரை செல்லுபடியாகும் வகையில் வழங்கப்பட்ட அனைத்து தற்காலிக இடமாற்றங்களும் ரத்துச் செய்யப்பட்டு ஆகஸ்ட் 31 ஆம் திகதியுடன் முடிவுறுத்தி மீண்டும் தனது நிரந்தர பாடசாலைக்குச் செல்ல வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
எனினும், கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்ட தற்காலிக இடமாற்றங்கள், மருத்துவ சான்றிதழ் அடிப்படையில் வழங்கப்பட் .இடமாற்றங்கள் மற்றும் பாடசாலைகளில் சேவைத் தேவை காரணமாக வழங்கப்பட்ட தற்காலிக இணைப்பு அல்லது இடமாற்றங்கள் தொடர்ந்திருக்கும் என்றும் கல்வி அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அறிக்கையை கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என் ரணசிங்க ஒப்பமிட்டு வெளியிட்டுள்ளார்.