ஆசிரியர்களின் போக்குவரத்துச் செலவுகள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் முறைமையொன்றை தயாரிக்குமாறு கல்வி அமைச்சிடம் இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தொலைதூரப் பகுதிகளில் உள்ள ஆசிரியர்கள் தினசரி போக்குவரத்துக்காக அதிகளவு பணத்தை செலவு செய்வதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.
நாளொன்றுக்கு ஆயிரம் ரூபாவுக்கு மேல் செலவு செய்து ஆசிரியர்கள் பாடசாலைகளுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஆசிரியர்களுக்கு போக்குவரத்துக் கொடுப்பனவை அமைச்சின் மூலம் பெற்றுக் கொடுப்பதற்காகவே குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சங்க பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறியதாவது: தொலைதூர பகுதிகளில் உள்ள ஆசிரியர்கள் பாடசாலைக்கு செல்ல தினமும் ஏராளமான பணம் செலவழிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.