உயர் தரப் பரீட்சை திகதிகளில் மாற்றம் இல்லை – கல்வி அமைச்சர்
டிசம்பரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சை திட்டமிட்ட திகதியில் நடைபெறும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், பரீட்சைகளை ஒத்திவைக்குமாறு மாணவர்களும் அரசியல்வாதிகளும் வரலாற்றுல் ஒருபோதும் கோரவில்லை என்றார்.
இதன்படி, அடுத்த வருடம் மார்ச் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய கல்வியாண்டு டிசெம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
எனினும், உயர் தரப் பரீட்ணையை ஒத்திவைக்காத அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுக்களை தாக்கல் செய்யவுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
A/L පැවැත්වෙන දිනවල කිසිඳු වෙනසක් නැහැ – අධ්යාපන ඇමති
දෙසැම්බර් මාසයේ පැවැත්වීමට සැලසුම් කර ඇති මෙවර උසස් පෙළ විභාගය නියමිත දිනට පැවැත්වෙන බව අධ්යාපන අමාත්ය සුසිල් ප්රේම්ජයන්ත් පවසනවා.
විභාග කල් දමන ලෙස ඉතිහාසයේ කෙදිනකවත් ශිෂ්යයින් හා දේශපාලඥයින් ඉල්ලීම් නොකළ බවයි මාධ්ය වෙත අදහස් දක්වමින් අමාත්යවරයා සඳහන් කළේ.
ඒ අනුව ලබන වසරේ මාර්තු මාසයෙන් ආරම්භ වන නව පාසල් වර්ෂය දෙසැම්බර් මාසය වන විට සම්පූර්ණයෙන් අවසන් කිරීමට බලාපොරොත්තු වන බවයි අමාත්යවරයා වැඩිදුරටත් සදහන් කළේ.
කෙසේ නමුත් විභාගය කල් නොදැමීමේ රජයේ තීරණයට එරෙහිව ශ්රේෂ්ඨාධිකරණයේ සහ අභියාචනාධිකරණය හමුවේ පෙත්සම් ගොනු කරන බව පිවිතුරු හෙළ උරුමයේ නායක පාර්ලිමේන්තු මන්ත්රී උදය ගම්මන්පිල පවසනවා.