MEELAD NABI CELEBRATION IN SCHOOLS –
மீலாத் நபி கொண்டாட்டம் 2022 தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் அனைத்து முஸ்லிம் பாடசாலைகளின் அதிபர்களுக்கும் முஸ்லிம் மாணவர்கள் பயிலும் பாடசாலை அதிபர்களுக்கும் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.
அறிவித்தல் வருமாறு
மேற்படி விடயம் தொடர்பாக கல்வி அமைச்சின் 312015 இலக்கமும் 2015.12.11 ஆம் திகதியும் கொண்டசுற்றுதிருபத்தின் பால் உங்கள் கவனம் ஈர்க்கப்படுகின்றது.
20 ஒக்டோபர் 20122 ஆம் திகதி நாடு முழுவதிலுமுள்ள முஸ்லிம் பாடசாலைகளிலும் முஸ்லிம் மாணவர்கள் பயிலும் பாடசாலைகளிலும் முஸ்லிம் சமய விழுமியங்களை மேம்படுத்தும் வகையில் மீலாதுன் நபி விழா கொண்டாடப்படுதல் வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்விழாவினை கொண்டாடுவதன் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் சுபீட்சம் மற்றும் சௌபாக்கியம் கிடைக்கப் பெற பிரார்த்திக்குமாறும் கேட்டும் கொள்கின்றேன்.
03. அதிபர்கள் இவ்விடயம் பற்றி சால ஆசிரியர்களுக்கும் முன்கூட்டியே தெரியப்படுத்துவதுடன் பாடசாலையில் மீலாதுன் நபி விழா நடாத்தப்படும் விதம் தொடர்பாக தீர்மானித்து பாசாலையின் மாணவிகளுக்கும் அதுபற்றி அறிவித்தல் வேண்டும். இவ்விழாவில் மதகுருமார், அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா உத்தியோகத்தர்கள். மாணவர்கள், மற்றும் பாடசாலை சமூகம் சார்த்தவர்களை பங்குபற்ற செய்து கல்வி நடவடிக்கைகளுக்கு பாதகமில்லாதவாறு நடாத்தப்படுதல் வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றேன். அவ்வாரத்தில் பாடசாலையும் பாடசாலை சூழலும் சுத்தம் செய்யப்பட்டு இஸ்லாமிய கலை அம்சங்களுடல் நேர்த்தியான முறையில் அலங்கரிக்கப்படுதல் சாலச் சிறந்ததாகும். 2022 ஆம் ஆண்டு ஒரே நாளில் தேசிய ரீதியில் மீலாதுன் நபி விழாவினை வெற்றிகரமாக நடாத்துவற்கு தேவையான ஒத்துழைப்பினை உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றேன்.