4000 அதிபர்கள் நியமனம் விரைவில்
இலங்கை அதிபர் சேவை தரம் 3 க்கான நியமனங்கள் விரைவில் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்படுவதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுன்றில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கடமை நிறைவேற்று அதிபர்கள் மற்றும் 2019 இல் பரீட்சை எழுதி நியமனம் கிடைக்காதவர்கள் என மூன்று தரப்பினருக்கு இந்நியமனங்கள் வழங்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
2019 இல் இடம்பெற்ற பரீட்சையில் புள்ளிகள் பெற்ற போதிலும் நேர்முகத் தேர்வில் குறைந்த புள்ளிகள் பெற்று அதனால் நியமனம் கிடைக்காதவர்கள் 1700 உள்ளனர். அவர்களில் 160 பேர் உயர் நீதி மன்றில் வழங்கொன்றைத் தாக்கல் செய்துள்ளனர். இதன் மூலம் அதிபர் சேவை நியமனங்களை இடைநிறுத்துமாறு இடைக்கால தடைஉத்தரவை பெற்றுள்ளனர்.
கடமை நிறைவேற்று அல்லது பதில் அதிபர்கள் 2682 பேர் பரீட்சைப் பெறுபேறு இருப்பினும் நேர்முகப் பரீட்சையில் புள்ளிகள் குறைந்து நியமனம் கிடைக்காத1700 அதில் வழக்குத் தாக்கல் செய்துள்ள 169 பேர் ஆகியோருக்கு நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறேன் என கல்வி அமைச்சர் விளக்கினார்.
கடமை நிறைவேற்று அதிபர்களுக்கு அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதியைப் பெற்று அதற்கான ஒழுங்குமுறையில் நியமனங்கள் வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், வழக்குத்தாக்கல் செய்துள்ளவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளதாகவும், வழங்கை சமரசமாக்கும் உடன்பாட்டின் அடிப்படையில் நர்த்தல் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்வதன் மூலம் நியமனம் வழங்கவும் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இதன் மூலம் சுமார் 4000 பேருக்கு நியமனங்கள் வழங்க தயாராக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அடுத்த ஒரு மாதத்திற்குள் வழக்கை சமரசத்திற்கு கொண்டுவருவதோடு. அதன் பின் மேலதிக செயற்பாடுகள் முன்னெடுக்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார் .
இந்த நியமனங்களை அடுத்த கல்வி ஆண்டு ஆரம்பமாகவதற்கு முன்னர், அதாவது 2023 மார்ச் மாதத்திற்கு முன்னர் வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். – (teachmore.lk)