கல்வி வலய அலுவலகங்களில் அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக -ஆசிரியர் ஓய்வூதிய விண்ணப்பங்களை 40% திருப்பி அனுப்பப்படுவதாக ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
ஓய்வூதிய திணைக்களத்திற்கு மாதாந்தம் ஆசிரியர்களின் ஓய்வு தொடர்பான 500 ஆவணங்கள் கிடைக்கப்பெறுவதாகவும் அவற்றில் 40 வீதமானவை முழுமையடையாத காரணத்தினால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் ஏ.ஜகத் டி.டயஸ் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் இருபத்தி ஏழாயிரம் அரச ஊழியர்கள் ஓய்வு பெறுவதாகவும், அவர்களில் சுமார் ஐயாயிரம் பேர் ஆசிரியர்கள் என்றும் அவர் கூறினார்.
ஆனால் கல்வி வலய அலுவலகங்களில் கடமையாற்றும் ஓய்வுபெறவுள்ள அதிகாரிகளின் தகவல்கள் சரியாக அனுப்பப்படுவதாகவும் ஆனால் ஆசிரியர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
உத்தியோகத்தர் ஓய்வு பெறுவதற்கு 6 மாதங்களுக்கு முன்னரே ஓய்வூதிய திணைக்களத்திற்கு உரிய தகவல்களை சமர்ப்பித்திருக்க வேண்டியிருந்தாலும், கல்வி வலய அலுவலகம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாததே ஆசிரியர்களின் ஓய்வூதியம் தாமதத்திற்கு காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.
https://sinhala.teachmore.lk/?p=856