ஆசிரியைகளின் உடையை மாற்றுவதற்கு இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு
.
ஆசிரியைகளுக்கு இலகுவான மற்றும் வசதியான ஆடை அணிவதற்கு அனுமதி வழங்குமாறு கோரப்பட்டுள்ள வேண்டுகோளுக்கு இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.
சங்கம் விடுத்துள்ளஅறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் காலம் காலமாக ஆசிரியர்களுக்கென்று தனித்துவமான பண்பும் உடையும் இருக்கின்றது. அதனை இல்லாமல் செய்வதற்கு சிலர் கங்கணம்கட்டி நிற்கின்றனர். மேலைத்தேய நாடுகளில் உள்ள பண்பாடு கலாசாரம் என்பன வேறாக இருக்கின்றன. இலங்கையில் வாழும் மக்களுக்கு தனித்துவமான அடையாளமும் கலாசார பண்புகளும் இருக்கின்றன. அதிலும் தமிழர்களுக்கு சிறப்பான அடையாளங்கள் உண்டென்பதனை அனைவரும் அறிவர். அதுவே அவர்களின் தனித்துவம். அதனை இல்லாமல் செய்வதற்கு சிலர் முயற்சி செய்கின்றனர். பெண் ஆசிரியைகளை அசிங்கப்படுத்த முனைகின்றனர். அதனை அனுமதிக்க முடியாது. இவ்விடயத்தில் மத்திய கல்வி அமைச்சு இனமத அடையாளங்களுக்கும் அவர்களின் ஆடைகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். பொருத்தமில்லாத அரைகுறை ஆடைகளோடு மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் நிலையை உருவாக்கக்கூடாது. அது பாரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும்.
ஆகையால் பெண் ஆசிரியர்களின் உடை விவகாரத்தை பூதாகாரமாக்காமல் ஆசியைகளுக்கென்றுள்ள பாரம்பரிய உடையை மாற்றுவதை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
https://sinhala.teachmore.lk/?p=881