கம்பஹ பாடசாலை சிற்றுண்டிச்சாலையில் போதைப் பொருள் – 42 வயது பெண் கைது
கம்பஹ பாடசாலை ஒன்றின் சிற்றுண்டிச்சாலையில் ஒழித்து வைத்து விற்பனை செய்யப்பட்டு வந்த போதை மாத்திரைகள் 37 மற்றும் சிறிய அளவிலான ஐஸ் போதைப் பக்கட் 7 ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ள பொலிஸார் சிற்றுண்டிச் சாலையை நடாத்திச் சென்ற பெண் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
மல்வத்து ஹிரிபிடி பிரதேசத்தில் வசிக்கும் 42 வயது பெண் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் சிற்றுண்டிச்சாலை பரிசோதிக்கப்பட்ட போது இவற்றைக் கைப்பற்றியதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
உணவுப்பொருள் காட்சிக்கு உள்ள ஷோகேஸ் இன் கீழ் மறைத்து வைத்திருந்த 37 போதை மாத்திரைகளையும் 7 ஐஸ் போதைப் பக்கட்களையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கம்பஹ நீதிமன்றில் இன்று (6) சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ගම්පහ පාසලක කැන්ටිමේ මත්ද්රව්ය- 42 හැවිරිදි කාන්තාවක්වක් අත්අඩංගුවට
ගම්පහ පාසලක ආපන ශාලාව තුළ සඟවා තිබූ මත් කරල් 37ක් සහ කුඩා ප්රමාණයේ අයිස් මත් පැකට් 7ක් සමග එම ආපන ශාලාව පවත්වාගෙන යන කාන්තාව ඊයේ ( 5) අත්අඩංගුවට ගෙන තිබේ
මල්වතු හිරිපිටිය ප්රදේශයේ පදිංචි 42 හැවිරිදි කාන්තාවක්ව මෙසේ අත්අඩංගුවට ගෙන තිබේ.
මල්වතු හිරිපිටිය පොලිසිය සඳහන් කළේ ලද තොරතුරක් මත ඊයේ ( 5) උදෑසන පාසලේ ආපන ශාලාව පරීක්ෂාවට ලක්කර බවයි
එහිදී ආහාර ප්රදර්ශනය කර තිබෙන ෂෝකේස් එක යට සුරක්ෂිතව සඟවා තිබියදී මත් කරල් 37ක් සහ අයිස් මත්ද්රව්ය පැකට් 7ක් පොලිසිය සොයාගෙන තිබේ.
අත්අඩංගුවට ගත් සැකකාරිය ගම්පහ මහෙස්ත්රාත් අධිකරණය හමුවට අද ( 6) ඉදිරිපත් කිරීමට නියමිතයි.