அதிபர் சேவை நியமனத்திற்கு எதிரான வழக்கில் சமரசம்
அதிபர் சேவை நியமனத்திற்கு எதிராகத் தொடுக்கப்பட்டவழக்கு நேற்று சமரசத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பரீட்சையில் சித்தியடைந்து நேர்முகப் பரீட்சைக்குச் சென்றும் நியமனம் கிடைக்காத சிங்கள தரப்பினரால் தொடடுக்கப்பட்ட வழக்கே இவ்வாறே சமரசம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்று திங்கள் கிழமை இந்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது பரீட்சைக்குத் தோற்றியோருக்கு நியமனம் வழங்கப்படும் என கல்வி அமைச்சு சார்பா உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து இந்த சமரசம் இடம்பெற்றுள்ளது.
இதே நேரம் தமிழ் மொழி மூலமான பரீட்சார்த்திகள் சார்பாகத் தொடுக்கப்பட்ட வழங்கு எதிர்வரும் 16 ஆம் திகதி விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக தமிழ் மொழி பரீட்சார்த்திகள் சார்பான தரப்பின் ஏற்பாட்டாளர் நவாஸ் செளபி தெரிவித்தார். இந்த வழக்கும் சமரசத்திற்கு கொண்டுவரப்பட்டால் கல்வி அமைச்சர் பாராளுன்றில் ஏற்கனவே அறிவித்தது போல், அதிபர் பரீட்சையில்சித்தியடைந்த 4718 பேருக்கும் நியமனம் வழங்கப்படுவது உறுதி என நவாஸ் செளபி தெரிவித்தார்.
විදුහල්පති සේවය පත්කිරීමට එරෙහි නඩුව සමථයකට
විදුහල්පති සේවය පත්කිරීමට එරෙහිව පවරා ඇති නඩුව සමථයකට පැමිණ ඇති බව වාර්තා වේ.
සම්මුඛ පරීක්ෂණයෙන් සමත්ව තිබියදීත් පත්වීම් නොලැබුණු අපේක්ෂිකයන් විසින් ගොනුකර තිබූ නඩුව මෙලෙස සමථයකට පත්වී ඇති බව වාර්තා වේ.
සඳුදා නඩුව විභාගයට ගත් අවස්ථාවේදී විභාගය සමත් අයදුම්කරුවන් සියල්ලන්ටම පත්වීම් ලබා දෙන බවට අධ්යාපන අමාත්යාංශය සහතික වීමෙන් පසු මෙම නඩුව සමථයකට පත් වී තිබේ.
ඒ සමගම දෙමළ භාෂා අපේක්ෂකයින් වෙනුවෙන් ඉදිරිපත් කර ඇති නඩුවේ කරුණු දැක්වීම ලබන 16 වැනිදා විභාගයට ගන්නා බව දෙමළ භාෂා අපේක්ෂකයින්ගේ පාර්ශ්වයේ සංවිධායක නවාස් සවුෆි මහතා පැවසීය. මෙම නඩුව සමථයකට ගෙන ආහොත් අධ්යාපන අමාත්යවරයා විසින් දැනටමත් පාර්ලිමේන්තුවේදී ප්රකාශ කර ඇති පරිදි විදුහල්පති විභාගය සමත් අපේක්ෂකයින් 4718 දෙනෙකුට පත්වීම් හිමිවන බව නවාස් මහතා පැවසීය.