க.பொ.த.உ/த எந்தவொரு துறையிலும் விவசாய விஞ்ஞானத்தைத் தெரிவு செய்வதால், அதிகளவு கற்கைநெறிக்கான பல்கலைக்கழக அனுமதி கிடைக்கும்!
🍓விவசாய விஞ்ஞானத்தை (Agricultural Science) பின்வரும் துறைகளில் ஒரு பாடமாகத் தெரிவு செய்யலாம்.🍓
📍👉உயிரியல் விஞ்ஞானத் துறை
Biological Science Stream
📍👉பௌதீக விஞ்ஞானத் துறை
Physical Science Stream
📍👉வணிகத் துறை Commerce Stream
📍👉கலைத் துறை
Arts Stream
📍👉பொறியியல் தொழில்நுட்ப பிரிவு
Engineering Technology Stream
📍👉உயிரியல் தொழில்நுட்பத் துறை. Biosystems Technology Stream
இதில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவு, பௌதீக விஞ்ஞானப் பிரிவு ,வணிகப் பிரிவு ஆகியவற்றில் விவசாய விஞ்ஞானத்தை தெரிவு செய்தால், ஏனைய துறையில் பல்கலைக்கழக அனுமதி கிடைக்கும்.
🔥1️⃣ உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் விவசாய விஞ்ஞானத்தின் தெரிவின் முக்கியத்துவம்.
👉2021/22 இல் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் பரீட்சைக்கு தோற்றியோரின் பெறுபேற்றுப் பகுப்பாய்வு மற்றும் பல்கலைக்கழக அனுமதி பற்றிய விபரங்கள்.👇
1️⃣ பரீட்சைக்கு தோற்றியோர்- 34,773
2️⃣ பல்கலைக்கழக அனுமதி தகுதி- 19,215(55.28%)
3️⃣ ஒன்று/இரு பாடங்களில் சித்தி (One/Two Subject Pass) -9,475
4️⃣ மூன்று பாடங்களிலும் சித்தி இன்மை (All F)-6,083(17.51%)
5️⃣ மருத்துவத் துறைக்கு தெரிவு 2,035(5.9%)
6️⃣ பல் மருத்துவத் துறைக்கு தெரிவு 153(0.4%)
7️⃣ மிருக வைத்தியத் துறைக்குத் தெரிவு 130(0.4%)
மேற்படி பகுப்பாய்வை ஆய்வு செய்யும் போது…
🔥15,558 மாணவர்கள் உயர் தரத்தில் சித்தி அடையவில்லை.
🔥சித்தி அடையாத மாணவர்களில் அனேகர் பௌதீகவியல்,இரசாயனவியல் பாடங்களில் சித்தி அடையவில்லை.
🦁ஆகவே உயிரியல் விஞ்ஞானத் துறையில் கற்கும் சகல மாணவர்களும் மூன்று பாடங்களிலும் சித்தி அடைவதை உறுதிப்படுத்த பௌதீகவியல் அல்லது இரசாயனவியல் பாடத்திற்கு பதிலாக விவசாய விஞ்ஞானத்தைத் தெரிவு செய்யலாம்.
🦁மேலும் உயிரியல் விஞ்ஞானத் துறையில் கற்கும் மாணவர்களில் 5.9% மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவத் துறையில் அனுமதி கிடைக்கும் என்பதால் …. ஏனையோர் பல்கலைக்கழக அனுமதியைப் பெற.
…
உயிரியல் விஞ்ஞானத் துறையில் பல்கலைக்கழக அனுமதி கிடைக்கும் 33 கற்கைநெறியில், விவசாய விஞ்ஞானத்தை தெரிவு செய்யும் மாணவர்களுக்கு பின்வரும் 19 கற்கைநெறிகளுக்கு பல்கலைக்கழக அனுமதி இலகுவாகக் கிடைக்கும்.
1👉Agricultural Technology & Management
2👉Agriculture.
3👉Food Science & Nutrition.
4👉Biological Science
5👉Applied Science
6👉Health Promotion
7👉Environmental Conservation & Management
8👉Animal Science & Fisheries
9👉Food Production & Technology Management
10👉Agricultural Resource Management & Technology
11👉Agribusiness Management.
12👉Green Technology
13👉Animal Production &Food Technology
14👉Export Agriculture
15👉Aqutic Resource Management
16👉Applied Chemistry
17👉Indigenous Medical Resources
18👉Aqutic Bioresources
19👉Urban Bioresources.
விவசாய விஞ்ஞானத்துடன் இரசாயனவியல் மற்றும் உயிரியல் உட்பட மூன்று பாடங்களிலும் சித்தி பெற்று பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத மாணவர்களுக்கு பின்வரும் உயர் கல்வி நிறுவனங்களில் இருந்து NVQ Level 5/6 விவசாய டிப்ளோமா பட்டத்தைப் பெறலாம்.
📍👉இலங்கை விவசாயக் கல்லூரி
📍👉உயர் தொழில்நுட்ப நிறுவனம்.
📍👉அக்குனாஸ் பல்கலைக்கழகம்.
🔥2️⃣ பௌதீக விஞ்ஞானத் துறையில் விவசாய விஞ்ஞானத்தின் தெரிவின் முக்கியத்துவம்.
பௌதீக விஞ்ஞானத் துறையில் இரசாயனவியல் பாடத்திற்கு பதிலாக விவசாய விஞ்ஞானம்/தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பாடத்தைத் தெரிவு செய்யலாம்.
இதன் தொடர்ச்சி. மிக விரைவில்….!
திரு.ந.சந்திரகுமார்
மட்டக்களப்பு களுதாவளை
13.12.2022