60 வயது பூர்த்தியடைந்த 300 ஊழியர்களை சேவையில் வைத்திருக்க ரயில்வே திணைக்களம் அனுமதி பெற்றுள்ளது.
பிரதமரின் செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் தலைமையிலான குழுவின் பரிந்துரைகளுக்கு உட்பட்டே இந்த அனுமதி கிடைத்திள்ளது.
ஒப்பந்த அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்றுவார்கள் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில் சாரதிகள், சாரதி உதவியாளர்கள், புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் ஏனைய தொழில்நுட்ப மற்றும் செயற்பாட்டு உறுப்பினர்கள் சேவைத் தேவைகளின் அடிப்படையில் இவ்வாறான சேவைகளைப் பெறுபவர்களில் அடங்குவதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கூட்டுத்தாபனங்கள் மற்றும் திணைக்களங்களில் உள்ள 30,000 அரச ஊழியர்கள் இன்று (31) ஓய்வுபெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திரு.அசோக பிரியந்த குறிப்பிட்டார்.
වයස අවුරුදු 60 සම්පුර්ණ වූ සේවකයින් 300ක් සේවා අවශ්යතා මත සේවයේ තබා ගැනීමට දුම්රිය දෙපාර්තමේන්තුවට අවසර ලැබී තිබේ.
ඒ, අග්රාමාත්ය ලේකම්වරයාගේ ප්රධානත්වයෙන් යුත් කමිටුවෙන් හා ජනාධිපති ලේකම්වරයාගේ නිර්දේශවලට යටත්වයි.
දුම්රිය දෙපාර්තමේන්තුව පැවසුවේ, අදාල සේවකයින් කොන්ත්රාත් පදනම මත ඉදිරියට කටයුතු කරන බවය.
සේවා අවශ්යතා මත එලෙස සේවය ලබා ගන්නා පිරිස අතර දුම්රිය රියැදුරන්, රියැදුරු සහයකයින්, දුම්රිය නියාමකයින් ඇතුළු තාක්ෂණික හා මෙහෙයුම් සාමාජිකයින් වනබව එම දෙපාර්තමේන්තුව වැඩිදුරටත් ප්රකාශ කළේ ය.
මේ අතර, සංස්ථා හා දෙපාර්තමේන්තුවල රාජ්ය සේවකයින් 30,000ක් අද (31) දිනයේ විශ්රාම යාමට නියමිත බව රාජ්ය අමාත්ය අශෝක ප්රියන්ත මහතා සඳහන් කළේ ය.