ජනවාරි මාසයේ රාජ්ය සේවක වැටුප් ගෙවීම දැඩි ගැටලුකාරි තත්ත්වයක් මතුකර ඇති බව කැබිනට් මාධ්ය ප්රකාශක අමාත්ය බන්දුල ගුණවර්ධන පවසනවා.
රාජ්ය සේවක වැටුප් සහ විශ්රාම වැටුප් සඳහා ප්රමුඛතාව ලබාදුන් පසු අත්යවශ්ය සුබසාධන පිරිවැය දැරීමටද ප්රමාණවත් ආදායමක් නොමැති බව ජනාධිපතිවරයා කැබිනට් මණ්ඩලය වෙත දැනුම්දුන් බවයි ඔහු සඳහන් කළේ.
මෙම වසර පුරාම මෙම ආදායම් ගැටලුව පැවතීම හේතුවෙන් සියලුම අමාත්යංශවල අයවැය මඟින් වෙන් කර ඇති මුදල්වලින් 5% ක් කපා හැරීමට ජනාධිපතිවරයා විසින් කැබිනට් මණ්ඩලයට දැනුම්දුන් බවද අමාත්ය බන්දුල ගුණවර්ධන සඳහන් කළා.
බදු මඟින් රැස් කරගත හැකි ආදායම් ප්රමාණය වර්ෂයේ මුල විශාල ලෙස අඩුවී ඇති බවත් මේ හේතුවෙන් ජනවාරි, පෙබරවාරි, මාර්තු මාසවල රජ්යට බදු මඟින් ලැබෙන ආදායම අඩුවුවද අත්යවශ්යයෙන්ම දැරිය යුතු වියදම් දැරීමට සිදුවන බවයි අමාත්යවරයා සඳහන් කළේ.
රාජ්ය සේවක වැටුප්, විශ්රම වැටුප්, රාජ්ය ණය සඳහා ගෙවන පොලී ඇතුළු එදිනෙදා පවත්වාගෙන යාමේ වියදම් දැරීමට ප්රමාණවත් කිසිඳු ආදායමක් භාණ්ඩාගාරයට නොමැති බවයි කැබිනට් මාධ්ය ප්රකාශක අමාත්ය බන්දුල ගුණවර්ධන වැඩිදුරටත් සඳහන් කළේ.
அரச ஊழியர்களுக்கு ஜனவரி மாத சம்பளம் வழங்குவதில் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களுக்கு முன்னுரிமை வழங்கியதன் பின்னர் அத்தியாவசிய நலன்புரிச் செலவுகளை ஈடுசெய்ய போதுமான வருமானம் இல்லை என ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவித்ததாக அவர் குறிப்பிட்டார்.
இந்த வருடம் முழுவதும் இந்த வருமானப் பிரச்சினை நிலவுவதால் அனைத்து அமைச்சுக்களின் வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட பணத்தில் 5% குறைக்குமாறு ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவித்ததாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
ஆண்டு தொடக்கத்தில் வரி மூலம் பெறக்கூடிய வருமானம் வெகுவாகக் குறைந்துள்ளதாகவும் இதன்காரணமாக எதிர்வரும் ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச். மாதங்களில் வரி மூலம் கிடைக்கும் வருமானம் குறைந்தாலும் தேவையான செலவுகளை அரசே ஏற்க நேரிடும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அரச ஊழியர் சம்பளம், ஓய்வூதியம், அரச கடனுக்கான வட்டி உள்ளிட்ட அன்றாடச் செலவுகளை ஈடுசெய்யும் வகையில் திறைசேரிக்கு வருமானம் இல்லை என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.